Untitled Document
April 19, 2024 [GMT]
கனடா: சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது.
[Friday 2018-12-07 09:00]

சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள், கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். இந்த நடவடிக்கை, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.


ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர்!
[Thursday 2018-12-06 17:00]

ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, பார்லிமென்ட்டில் இருந்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.


அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம்: - ரஷிய அதிபர் புதின் மிரட்டல்
[Thursday 2018-12-06 17:00]

2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன. ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின. /p>


17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் இரண்டு திருமணம் செய்த இளம்பெண் கைது !
[Thursday 2018-12-06 17:00]

சென்னையில் 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் இரண்டு திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்த சுவேதா (23) என்கிற வசந்தியின் பொருந்தாத காதலுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் பேசினோம். ``சுவேதா என்கிற வசந்திக்கு, ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன.


அதியுயர் திறன்களை கொண்ட சீனாவின் தொழிநுட்ப நகரம்!!
[Thursday 2018-12-06 16:00]

வடசீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள சியோஜிகன் நியூ பகுதியில் குடிபெயர்ந்துள்ள பல புதிய குடியேற்றக்காரர்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிக்கான அதி உயர்ந்த திறன்களை ஈர்க்கும் வகையில் சாதகமான கொள்கைகளை எதிர்பார்க்கின்றனர். தலைநகர் பெய்ஜிங்குக்கு தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, Xiongan பகுதி கடந்த ஏப்ரல் 1, 2017 இல் நிறுவப்பட்டது. இது ஹெபீ மாகாணத்தில் சீனாவின்


நடுவானில் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்: - ஐந்துபேரைக் காணவில்லை!
[Thursday 2018-12-06 09:00]

ஜப்பானிய வான் பரப்பில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் கடலோரக் காவல்படையினரின் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை அந்த பகுதியில் இரண்டு போர் விமானங்கள் விபரிக்க முடியாத விபத்தொன்றை எதிர்கொண்ட நிலையில், அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மலேசியாவில் 500 ரூபாய் பெற்று திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்கள்!
[Thursday 2018-12-06 09:00]

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும் அவரக்ளை திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மதம் குறித்து 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்!
[Thursday 2018-12-06 09:00]

மதம் மற்றும் அறிவியல் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கையெழுத்து பிரதி ஒன்று எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகைக்கு, அதாவது 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.


"ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை",புஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி:நெகிழ்ச்சியான நிகழ்வு. Top News
[Thursday 2018-12-06 09:00]

அரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில், அவரது மகன் ஜார்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்கில் பேசிய புஷ் ஜூனியர், தனது தந்தையை "ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை" என்று விவரித்தார்.


'விஜய் மல்லையா': வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயார்!.
[Wednesday 2018-12-05 21:00]

லண்டன்: தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.


இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற முதல் பெண்!
[Wednesday 2018-12-05 17:00]

சர்வதேச அளவில் 10 முதல் 15 சதவீத பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று ஆபரேசன் மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது.


உலகளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்!
[Wednesday 2018-12-05 17:00]

உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்


இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்!
[Wednesday 2018-12-05 17:00]

ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது. எனவே, இதை


பிரித்தானிய ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோ: - ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம்
[Wednesday 2018-12-05 08:00]

பிரித்தானிய ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோவின் ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை வைத்துள்ளன. இந்த வகையில் பிரித்தானியாவும் ரோபோவை ராணுவத்தில் களமிறக்க நினைத்தது. அதன்படி, போர் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், ரோபோவை வைத்து போரிடும் முறையை செயல்படுத்தி வருகிறது.


இரு மருமகள்கள் பிரச்சனை குறித்து வெளியாகும் செய்திகள் வதந்தி: - பிரித்தானிய அரச குடும்பத்தின் செய்தி தொடர்பாளர்
[Wednesday 2018-12-05 08:00]

பிரித்தானிய அரசகுடும்பத்து மருமகள்களின் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசகுடும்பம் குறித்து பரவும் தகவல்கள் அனைத்து பொய்யானவை என கெசிங்டன் அரண்மனை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேகன் மெர்க்கலின் அணுகுமுறையால் மூத்த மருமகள் கேட் மிடில்டன் மனம் உடைந்துள்ளதாகவும், இருவருக்கும் ஒத்துப்போகாத காரணத்தால் சகோதரர்களாக வில்லியம் மற்றும் ஹரிக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.


உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா? - கால்பந்து வீராங்கனையிடம் கேட்கப்பட்ட கேள்வி எழுப்பிய சர்ச்சை
[Tuesday 2018-12-04 16:00]

உலகம் முழுவதும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை,


கோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்ட பயனர்களின் தகவல்கள் !
[Tuesday 2018-12-04 16:00]

ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு, பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. பேஸ்புக்கில் பணிபுரிந்த இரு ஊழியர்களால் கடந்த 2009ஆம் ஆண்டு இந்த இணையப்பக்கம் தொடங்கப்பட்டது. அறிவுசார் இணையப்பக்கமான ஃகோராவில், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில் கிடைக்கும். பல கோடி பயனர்களை ஃகோரா வைத்துள்ள நிலையில், இந்த இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எட்டு வயது சிறுவனுக்கு ஆண்டு வருமானம் ரூ.155 கோடி!
[Tuesday 2018-12-04 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு 500 ரூபாய் சம்பாரிக்க பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடுயூப்பில் அப்பிளோடு செய்ததின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான்.


ஓநாய்களை வளர்க்கும் இளம்பெண்: - இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
[Tuesday 2018-12-04 16:00]

சீனாவில் ஸோ சின்யு (Zhou Xinyue) எனும் இளம்பெண் ஒருவர் 36 ஓநாய்களை வளர்த்து வருகிறார். 20 வயதான ஸோ சின்யு மங்கோலியப் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஓநாய் என்றால் மிகவும் விருப்பமாம். இதன் காரணமாக தனது பண்ணை வீட்டில் அரிய வகையைச் சேர்ந்த 36 வெள்ளை ஓநாய்களை இவர் தற்போது வளர்த்து வருகிறார். மிகவும் அபாயகரமான விலங்காகக் கருதப்படும் ஓநாயை கட்டிக் கொஞ்சுவதும், உப்பு மூட்டை போல் முதுகில் சுமந்து விளையாடுவதுமாக இருக்கும் இவரது வீடியோ தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் வயாகரா மோதிரம் ஏலத்தில் விற்பனை!
[Tuesday 2018-12-04 16:00]

உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான


பாரீசில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: - 400 பேர் கைது
[Tuesday 2018-12-04 16:00]

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி அண்மையில் பிரான்சில் உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்தன. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.


'அமெரிக்கா - சீனா' இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வருகிறதா?
[Monday 2018-12-03 21:00]

சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரிகளை 'நீக்கவதற்கும் குறைப்பதற்கும்' சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த வித மேற்கொண்ட தகவல்களும் இல்லாமல் டிரம்ப் இதனை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.


சுவிட்சர்லாந்தில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற கார்: - மயிரிழையில் உயிர் தப்பிய இளம் ஓட்டுநர்
[Monday 2018-12-03 16:00]

சுவிட்சர்லாந்தில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற கார் ஒன்று தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இளம் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் தடுப்பில் மோதிய அவரது கார் தூக்கி வீசப்பட்டு பள்ளம் ஒன்றில் போய் விழுந்தது.உயிர் தப்பிய அந்த இளைஞர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.


ஒரு பாலுணர்வு வேரூன்றியவர்களுக்கு திருச்சபையில் இடமில்லை: - போப் பிரான்சிஸ்
[Monday 2018-12-03 16:00]

ஒருபாலுறவு என்பது தீவிரமான விஷயம் என்றும், உணர்வு ரீதியாகவும், மனிதத் தன்மையிலும் முதிர்ச்சி அடைந்தவர்களையே திருச்சபைக்குத் தேர்வு செய்யவேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மதச் செயல்பாடுகள் குறித்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு மிஷனரி பாதிரியாருக்கு அளித்த நேர்க்காணலில் போப் பிரான்சிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


ஒபெக் அமைப்பில் இருந்து விலகும் கட்டார் அதிரடி அறிவிப்பு: - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
[Monday 2018-12-03 16:00]

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் (opec)-ல் இருந்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் விலகுவதாக கத்தார் அதிரடியாக அறிவித்துள்ளது. தோகாவில் செய்தியாளர்களை சந்தித்த கத்தாரில் எரிசக்தித்துறை அமைச்சர், இயற்கை எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு 77 மில்லியன் டன்களில் இருந்து 110 டன்களாக அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிவித்தார்.


பிரான்சில் கலவரம்: 'எரிபொருள் விலை உயர்வு' - அவசர பாதுகாப்பு கூட்டம் நடத்திய மக்ரோங். Top News
[Monday 2018-12-03 10:00]

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பிரான்சில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் அவசர பாதுகாப்பு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.


புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக 14 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கிய உலக வங்கி
[Monday 2018-12-03 08:00]

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக 14 லட்சம் கோடி ரூபாயை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.கருத்தரங்கம் கூட்டம் போலாந்தின் KATOWICE என்ற நகரில் நேற்று தொடங்கி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. புவி வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திற்கக் கூடிய நிலையில், அதனை இரண்டு டிகிரி செல்ஷியசுக்கும் கீழ் குறைக்க 2015ம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அமெரிக்காவில் விமானம் கட்டிடத்தில் மோதியதால் இருவர் பலி.
[Sunday 2018-12-02 22:00]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் பலி

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா