Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
5000 தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகளை முடக்கி பாகிஸ்தான் அதிரடி
[Monday 2017-06-05 21:00]

பாகிஸ்தானின் பல்வேறு வங்கிகளில் இருந்த 5000 தீவிரவாத அமைப்புகளின் கணக்குகளை முடக்கி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.பாகிஸ்தானில் வெளிப்படையாக செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் என சுமார் 5000 அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. இந்த வங்கி கணக்குகளில் ரூ.19,200 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தண்ணீரின் சுவையை நாக்கில் உள்ள செல்களால் அறிய முடிகிறது: - விஞ்ஞானிகள் தகவல்
[Monday 2017-06-05 17:00]

தண்ணீர் சுவையற்ற திரவம்’ என்ற வாதம் இருந்த வந்தது. தற்போது தண்ணீருக்கும் சுவை உண்டு. நாக்கில் உள்ள சுவை அறியும் செல்கள் தண்ணீரின் சிறப்பு சுவையை அறிய உதவுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரித்தானியாவில் ஒரு மாதத்துக்கு பொழிய வேண்டிய மழை ஒருநாளில் பொழியும்: - வெள்ள அபாய எச்சரிக்கை
[Monday 2017-06-05 17:00]

பிரித்தானியாவில் ஒரு மாதத்துக்கு பொழிய வேண்டிய மழை அடுத்த 24 மணிநேரத்தில் பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தானியாவின் எல்லா பகுதிகளிலும் அதிகளவு மழை பொழிந்து வெள்ளம் ஏற்படலாம் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும், நாடு முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு 50 மீட்டர் என்ற அளவில் பலத்த சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


தென்சீன கடலில் செயற்கை தீவுகள்: சீனாவை எச்சரித்த அமெரிக்கா
[Monday 2017-06-05 16:00]

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.எண்ணெய், இயற்கை எரிவாயு வளமிக்க தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளை சீனா அமைத்து, ராணுவ மயமாக்கி வருகிறது. ஆனால் தென்சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக சொல்லி, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.


தீவிரவாதத்துக்கு ஆதரவு: கத்தாருடன் உறவைத் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு
[Monday 2017-06-05 16:00]

பயங்கரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடனான நல்லுறுவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.கத்தார், ஐ.எஸ்.ஐ.எஸ், மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகள், கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளன.


லண்டன் தாக்குதல் குறித்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள்
[Monday 2017-06-05 15:00]

லண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த 48 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் அதில் 21 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. நான்கு போலிஸார் காயமடைந்துள்ளனர்; அதில் இரண்டு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.


ரஷ்யாவில் போதையில் தகராறு: - ஒன்பது பேரை சுட்டு கொன்ற நபர்
[Monday 2017-06-05 08:00]

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே ரெட்கினோ கிராமத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வார இறுதி நாளையொட்டி நேற்று முன்தினம் சிலர் மது குடிக்க வந்துள்ளனர். அப்போது, குடிபோதையில் மாஸ்கோவை சேர்ந்த 45 வயது நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.


வெடிகுண்டு புரளி: - இத்தாலியில் 1000 கால்பந்து ரசிகர்கள் நெரிசலில் சிக்கி காயம்!
[Monday 2017-06-05 08:00]

இத்தாலியில் பிரமாண்ட திரையில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்ட போது, வெடிகுண்டு புரளியால் நெரிசலில் சிக்கி 1000 பேர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட், ஜூவன்டாஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜூவன்டாஸ் இத்தாலியை சேர்ந்த கிளப் அணி என்பதால், அந்நாட்டின் டுரின் நகரில் உள்ள பிசா சான் கார்லோ சதுக்கத்தில் பிரமாண்ட திரையில் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சதுக்கத்தில் திரண்டிருந்தனர்.


லண்டன் தாக்குதல்: -ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு - 12 பேர் கைது!
[Monday 2017-06-05 08:00]

லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில், நேற்று முன்தினம் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளனர். அந்த மர்ம நபர்கள் இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி கத்தியால் பலரை தாக்கி உள்ளனர்.


60 டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு தந்தை யார்? மருத்துவரா ?
[Monday 2017-06-05 07:00]

ஹாலந்து நாட்டில், சமீபத்தில் இறந்துபோன ஒரு செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தனது சொந்த விந்தணுக்களை செலுத்தி கர்ப்பம் தரிக்கவைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்துஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட உடமைகள் மீது டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.


லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தெரீசா மே அறிவிப்பு
[Sunday 2017-06-04 20:00]

லண்டன் பிரிட்ஜில் "அப்பாவி மற்றும் நிராயுதபாணி பொதுமக்களின்" மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, "இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது" என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இதுவரை, 7 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.


பருவநிலை ஒப்பந்தத்தால் வருங்கால தலைமுறை பலனடையும்: பிரதமர் மோடி
[Sunday 2017-06-04 16:00]

பாரீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் வருங்கால சந்ததியினர் பயனடைவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காப்பது நமது கடமை என்றும், அதில் எந்த விதமான அவநம்பிக்கைக்கும் இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் 36 பேரைக் கொன்ற கொடூரன்
[Sunday 2017-06-04 16:00]

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் சூதாட்டத்தில் தோன்ற நபர் 36 பேரை துப்பாக்கியால் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.இந்தத் தாக்குதல் நடத்தியவரின் பெயர் 42 வயதான ஜெசி கார்லோஸ் ஜேவியர் என்று தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அவர், அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளர். இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.


1 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு தொடங்கியது இந்தியா-பாக்., ஆட்டம்

[Sunday 2017-06-04 16:00]

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சனிக்கிழமை இரவு லண்டனில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவான ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்
[Sunday 2017-06-04 15:00]

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.


இந்திய அரை வம்சாவளியரான லியோ வரத்கார் அயர்லாந்தின் பிரதமராவதற்கு வாய்ப்பு
[Sunday 2017-06-04 15:00]

இந்திய அரை வம்சாவளியரான சேர்ந்த லியோ வரத்கார் அயர்லாந்தின் புதிய பிரதமராவதற்கு வாய்ப்புஇந்திய அரை வம்சாவளியரான, லியோ வரத்கார் அயர்லாந்து குடியரசின் அடுத்த பிரதமராகவிருக்கிறார். ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான, ஃபைன் கேல் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் வரத்கார் வெற்றி பெற்றுள்ளார்.


அண்டார்டிகா பனிப்பிளவு - முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது..!
[Saturday 2017-06-03 19:00]

அண்டார்டிகாவில், 'லார்சன் சி' பனியடுக்கில் (Ice shelf) ஏற்பட்டுள்ள பிளவில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது. "அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் பெருகி, பனியடுக்கின் விளிம்பில் இருந்து அதன் மூக்கை வலப்புறமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிப்படையாக 13 கிலோமீட்டர் அளவு திரும்பிவிட்டது," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் கூறுகிறார்.


அமெரிக்காவில் ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி சாதனை:
[Saturday 2017-06-03 19:00]

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘ஸ்கிரிப்ஸ் நே‌ஷனல் ஸ்பெல்லிங் பீ’ என்ற பெயரில் ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தப் போட்டி அங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவ, மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று வந்துள்ளனர். இந்த ஆண்டுக்கான போட்டி, வாஷிங்டன் புறநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி அனன்யா வினய்க்கும், மாணவர் ரோகன் ராஜீவுக்கும் இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் பலத்த போட்டி நிலவியது.


தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:
[Saturday 2017-06-03 18:00]

தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா ராணுவமயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேதிஸ் எச்சரித்திருக்கிறார். சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்று சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்திருக்கிறார். கடல் வள ஆதாரம் அதிகமாக இருக்கின்ற தென் சீனக் கடலை தங்களுடையது என்று சீனா உரிமை கொண்டாடுவதை போல, பல்வேறு நாடுகளும் அப்பகுதி தங்களுடையது என்று உரிமை பாராட்டி வருகின்றன.


அமெரிக்க விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை!
[Saturday 2017-06-03 18:00]

அமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது.


சுவிட்சர்லாந்து நாட்டில் கிராம மக்கள் வினோதமான சட்டம்:
[Saturday 2017-06-03 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மக்கள் ஒரு வினோதமான சட்டத்தை அமுலாக்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாடு திகழ்ந்து வருகிறது. பனிமலைகள், பசுமையான புல்வெளிகள், குளிர்ச்சியான நீரோட்டங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை சுவிட்சர்லாந்து கொண்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்:
[Saturday 2017-06-03 18:00]

ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு போராட்டக்காரகள் பிரவேசிப்பதனை தடுக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


பிலிப்பைன்ஸ் - மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 36 பேர் பலி
[Friday 2017-06-02 22:00]

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நட்சத்திர விடுதிக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். நட்சத்திர விடுதிக்கு அந்நபர் தீ வைத்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார். பின்னர், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்க ரஷியா முடிவு !
[Friday 2017-06-02 21:00]

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை முன்னிட்டு, எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்காக வழங்குவது தொடர்பாக இந்தியா – ரஷியா பிரதிநிதிகள் இடையே நேற்று விவாதிக்கப்பட்டது.


சர்வதேச எழுத்து கூட்டும் போட்டியில் சாதித்த இந்திய வம்சாவளி சிறுமி
[Friday 2017-06-02 20:00]

கலிஃபோர்னியாவை சேர்ந்த 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் வாஷிங்டனில் நடைபெற்ற `ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ` (Scripps National Spelling Bee)எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியின் பரபரப்பான் இறுதி சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். ஃபெரெஸ்நோவை சேர்ந்தவர் அனன்யா வினய், `மாரோகெயின்` ( marocain ) என்ற வார்த்தையை சரியாக எழுத்துகூட்டி ஓக்லஹோமாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ரோஹன் ராஜீவ்வை வீழ்த்தினார்


உலக மக்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் வேண்டுகோள்!
[Friday 2017-06-02 20:00]

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ’இந்த முடிவு, நம் குழந்தைகளைத்தான் பாதிக்கும்’ என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்றளவு குறைப்பது. உலகத்திலேயே அதிகளவு கரியமில வாயுவை உமிழும் அமெரிக்கா நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போது ’அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும்’ என ட்ரம்ப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த புகலிடக் கோரிக்கையாளர்கள்:
[Friday 2017-06-02 09:00]

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 கானா, நைஜீரிய புகலிடக் கோரிக்கையாளர்கள்ச ஹாரா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கானா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 50 பேர் லிபியாவிற்கு சஹாரா பாலைவனத்தின் ஊடாகப் பயணித்த போது பாலைவனத்தின் நடுவில் வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது.


பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும்: இன்று மாலை அறிவிக்கிறார் ட்ரம்ப்!
[Thursday 2017-06-01 18:00]

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் எனத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை அறிவிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் மாசடைந்து வருவதைத் தடுக்க, உலக நாடுகளுடன் இணைந்து ஐநா சபை ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பல நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அமெரிக்கா வெளியேறப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா