Untitled Document
April 16, 2024 [GMT]
சீனா அமெரிக்கா இடையிலான வணிகப் போர் இருபதாண்டுகள் நீடிக்கும்: - அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவர்
[Wednesday 2018-09-19 18:00]

அமெரிக்கா - சீனா இடையிலான வணிகப் போர் இருபதாண்டுகள் வரை நீடிக்கும் என அலிபாபா நிறுவனத்தின் செயல்தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சூ நகரில் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலிபாபா உலகின் ஐந்தாவது பெரிய இணையத்தள வணிக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் செயல் தலைவருமான ஜேக் மா பெய்ஜிங்கில் முதலீட்டாளர்களிடையே பேசினார்.


அமெரிக்காவில் கருப்பின மாணவனை காலால் மிதித்த படி புகைப்படம் எடுத்த வெள்ளையின மாணவர்கள்!
[Wednesday 2018-09-19 18:00]

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பள்ளி ஒன்றில் வெள்ளையின மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கருப்பின சிறுவனை காலுக்கு அடியில் போட்டு அவன் மீது காலை வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். Moody High School - இல் பயிலும் 6 வெள்ளையின மாணவர்கள் Cow Bow ஆடையணிந்து கொண்டு , தங்களுடன் பயிலும் கருப்பின மாணவனை காலுக்கு அடியில் படுக்க வைத்து, அவன் மாணவன் மீது தங்கள் கால்களை வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.


157 பிணங்களுடன் சுற்றும் ட்ரக்: துரத்திய மக்கள்
[Wednesday 2018-09-19 18:00]

157 பிணங்களுடன் சுற்றும் ஒரு ட்ரக் பார்க் செய்யப்படும் இடமெல்லாம் துர்நாற்றம் வீசுவதால், அருகாமையிலிருக்கும் மக்கள் அதை துரத்தி விடும் சம்பவம் ஒன்று அமெரிக்காவின் மெக்சிகோவில் நடைபெற்று வருகின்றது. Guadalajara நகரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ட்ரக்கிலிருந்து பிணவாடை வீசியதால் அப்பகுதி மக்கள் அதை துரத்தி விட்டனர். பின்னர் விசாரித்ததில் அது அடையாளம் காணப்படாத பிணங்களை சுமக்கும் ஒரு ட்ரக் என்பது கண்டறியப்பட்டது.


கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் 8 ஆயிரம் பேர் பேர் பலி!
[Wednesday 2018-09-19 08:00]

கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் இதுவரை சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆயிரத்து 36 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்!
[Wednesday 2018-09-19 08:00]

அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு மருத்துவர் காதலியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் Grant William Robicheaux (38). இவர் அமெரிக்காவின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். இவருக்கு 32 வயதில் Cerissa Laura Riley என்ற காதலி உள்ளார்.


ரஷ்ய அதிபர் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார்: - பிரபல மொடல் அழகி குற்றச்சாட்டு
[Wednesday 2018-09-19 08:00]

ரஷ்ய அதிபர் எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார் என பிரபல மொடல் அழகி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி Anna Shapiro (30), Nizhny Novgorod பகுதியில் பிறந்தார். அதன் பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக இஸ்ரேல் நாட்டின் குடிமகளாக ஆனார்.


46 ஆண்டுகளுக்கு பிறகு நிலாவுக்கு செல்லும் கோடீசுவரர்!
[Tuesday 2018-09-18 17:00]

பூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 685 மைல் தொலைவில் நிலவு உள்ளது. நிலவில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவும், ரஷியாவும் போட்டி போட்டு மனிதர்களை அங்கு அனுப்பி தரை இறக்கி ஆய்வு செய்தது.


சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானம்: - 14 வீரர்களின் கதி என்ன?
[Tuesday 2018-09-18 17:00]

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.


சீனப் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் அளவிலான புதிய வரி: - அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
[Tuesday 2018-09-18 17:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் அளவிலான புதிய வரி விதித்துள்ளார். அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து வந்தன.


கஞ்சா கலந்த குளிர்பானம்: - அதிரடி முடிவு எடுத்த கோகோ கோலா நிறுவனம்
[Tuesday 2018-09-18 17:00]

சமீபகாலமாக உடல் நலம் மீதுள்ள அக்கறையால் சோடா அருந்தும் மக்களின் எண்ணிக்கை, அல்லது மக்கள் அருந்தும் சோடாவின் அளவு குறைந்து வருவதால், சந்தையில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்காக கஞ்சா சேர்த்த குளிர்பானங்களைத் தயாரிக்க கோகோ கோலா நிறுவனம் அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கனடாவில் புற்றுநோயில் இருந்து மீண்டு இரட்டை குழந்தைக்கு தாயான பிரபல நடிகை!
[Tuesday 2018-09-18 07:00]

கனடாவைச் சேர்ந்தவரும், நடிகையுமான லிசா ரே புற்றுநோயில் இருந்து மீண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகை லிசா ரே. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானவர்.


கழிவறையை பயன்படுத்த நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்? - மெர்க்கலுக்கு அரசகுடும்பத்தின் கட்டளை
[Tuesday 2018-09-18 07:00]

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் சாப்பிடும்போது கழிவறை பயன்படுத்த நேரிட்டால் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரச குடும்பத்தை பொறுத்தவரை அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும்போது, இடையில் எழுந்த செல்ல மாட்டார்கள். தொலைபேசி அழைப்பு வந்தால் கூட உணவினை முடித்தபின்னரே அவர்கள் எழுந்துசெல்வார்கள்.


மியான்மரில் 41 கைதிகள் தப்பியோட்டம்: - மியான்மரில் பரபரப்பு
[Monday 2018-09-17 18:00]

மியான்மரில் சிறையில் கலவரத்தை உண்டாக்கி 41 கைதிகள் தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லிபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சுமார் 400 கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அதேபோன்று மியான்மரில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.


புத்த மத போதகர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா
[Monday 2018-09-17 09:00]

புத்த மத போதகர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை 25 வருடத்துக்கு முன்பே அறிந்திருந்ததாகவும் அந்த புகார் ஒன்றும் புதிதல்ல என்றும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தலாய் லாமா நெதர்லாந்து சென்றுள்ளார். அங்கு புத்த மதப் போதகர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.


அமெரிக்காவில் அதிபயங்கர புயல் கரோலினாவை தாக்கியது : வடக்கு 3 லட்சம் பேர் இருளில் தவிப்பு
[Saturday 2018-09-15 18:00]

அதிபயங்கர புளோரன்ஸ் புயல் வடக்கு கரோலினா பகுதியை தாக்கத் தொடங்கியது. அட்லாண்டிக் கடலில் உருவாகி உள்ள


பாதிரியார்கள் மீதான பாலியல் புகாருக்கு காரணம் சாத்தான்!
[Saturday 2018-09-15 18:00]

பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். சமீப காலமாக பல நாடுகளில் பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது பரவலாக சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும், கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த புகாரில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகினார். அமெரிக்காவில் தியோடர் மெக்காரிக் என்ற பாதிரியார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


அமெரிக்காவை தாக்கத் தொடங்கிய புளோரன்ஸ் சூறாவளி!
[Friday 2018-09-14 18:00]

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.


நாய்-பூனை கறிகளுக்கு தடை: - அமெரிக்காவில் சட்டம் நிறைவேற்றம்!
[Friday 2018-09-14 18:00]

நாய்களும், பூனைகளும் மனிதர்களிடம் நண்பர்களாக பழகுகின்றன. எனவே அவை செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் சீனாவில் ஆண்டு தோறும் 1 கோடிக்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. அவற்றை மனிதர்கள் சாப்பிடுகின்றனர். அதே போன்று பல்லேறு நாடுகளில் பூனைகளும் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது.


உறவுக்கு மனைவி மறுப்பு: - ஆறு மாத பிஞ்சு குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவன்
[Friday 2018-09-14 09:00]

பிரேசில் நாட்டில் உறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கொடூரமாக தாக்கிவிட்டு ஆறு மாத பிஞ்சு குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரேசிலின் Luziania பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று அதிக மது போதையில் இருந்த மேயோன் சில்வா(25) போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளார்.


தங்கைக்கும் அண்ணனுக்கும் பிறந்த 7 குழந்தைகள்: - 40 குழந்தைகளாக அதிகரித்த அதிர்ச்சி பின்னணி
[Friday 2018-09-14 09:00]

அவுஸ்திரேலியாவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் அவர்கள் வாயிலாக அதிக சந்ததிகள் உருவாகி அவர்கள உடல்நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஆதரித்த ஆங் சான் சூச்சி!
[Thursday 2018-09-13 17:00]

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய அந்த இரண்டு செய்தியாளர்களும் சட்டத்தை மீறிவிட்டதாக தெரிவித்த ஆங் சான் சூச்சி, இவ்விருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்று கூறினார். ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலை தொடர்பான போலீஸ் ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


வியட்நாமில் காது வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Thursday 2018-09-13 17:00]

வியட்நாமில் காது வலிக்காக சென்ற பெண்ணின் காது பகுதியில் கரப்பான் பூச்சி மறைந்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் Hai Duong பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில நாட்களாகவே காது வலி இருந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார்.


அமெரிக்காவில் மனைவி உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற நபர்: - திடுக்கிடும் சம்பவம்
[Thursday 2018-09-13 17:00]

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது மனைவி உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்ஃபீல்டு பகுதியில் வசித்த நபர் ஒருவர், தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.


பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுமி: - சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்
[Thursday 2018-09-13 07:00]

சிறுமியர் காப்பகம் ஒன்றில் சிறுமியரை பாதுகாப்பார் என்று எண்ணப்பட்ட ஒரு முதியவர், பிள்ளைகள் அவரை அப்பா என்று அழைத்த நிலையிலும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமிகள் மூவர் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் Calgari பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசிக்கும் Kenneth Alfred Jenkinson (71) என்பவர் அங்கு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.


வீதியில் விழுந்து கதறிய பிஞ்சு குழந்தை: - பெண்களுடன் மல்லுக்கட்டிய தாயார்
[Thursday 2018-09-13 07:00]

சவுதி அரேபியாவின் பரபரப்பான சாலை ஒன்றில் பிஞ்சு குழந்தை கதறுவதையும் கவனிக்காமல் 5 பெண்கள் கடும் சண்டையில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த குறித்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் தமது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.


2018ஆம் ஆண்டில் 18,000 சுவிஸ் குடிமக்கள் புற்று நோயால் உயிரிழப்பார்கள்: - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
[Thursday 2018-09-13 07:00]

உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 56,000 பேருக்கும் அதிகமானோர் புற்றுநோய்க்கு ஆளாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்திற்கு அறிக்கை அளிக்கும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜன்சி அளித்துள்ள புள்ளிவிவரம் ஒன்றில், இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 18,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பார்கள் என்றும், அவர்களில் 10,300 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளவில் 80 கோடி மக்களுக்கு உணவு இல்லை: - ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி
[Wednesday 2018-09-12 17:00]

உலகளவில் 821 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் வாடுவதாக ஐ.நா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் உலகளவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதனால் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நேற்று ஐ.நா புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்: - லண்டனை பின்னுக்குத் தள்ளியது
[Wednesday 2018-09-12 17:00]

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா