Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்:- 32 பேர் பலியானதாக தகவல்
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ‘மரியா’ புயல் உருவானது. இப்புயல் டொமினிகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவுகளை துவம்சம் செய்தது. இதனால் 32 பேர் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் மரியா புயலின் தாக்கத்தினால் போர்ட்டோ ரிகோ தீவு கடுமையான பாதிப்புக்குள்ளானது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் உறவு துண்டிக்கப்படும்: - அமெரிக்கா
[Friday 2017-09-22 17:00]

ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் மியான்மர் உடனான உறவு துண்டிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐ.நா.வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இதனை தெரிவித்துள்ளார். மியான்மர் தலைவர் ஆங் சான் சூயிடம் அமெரிக்க தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறிய அவர் மியான்மர் ராணுவ தளபதியிடமும் இது குறித்து பேசியுள்ளதாக கூறியுள்ளார்.


டொனால்டு டிரம்ப் மனநலம் குன்றியவர்: - கிம் ஜாங் உன் விமர்சனம்
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்க அதிபர் பேசுவது நாய் குரைப்பது போன்றது என்று விமர்சித்த வடகொரியா, தற்போது டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அணு ஆயுத சோதனையை தொடர்வதால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. திருந்தவில்லை என்றால் வடகொரியா முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.


என் மகனின் உயிரை பறிப்பேன்: - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
[Friday 2017-09-22 17:00]

என் மகன் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அவனது உயிரை பறிப்பேன் என அறிவித்துள்ளார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்தே.பிலிப்பைன்ஸில் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது, ரோட்ரிகோவின் பதவிக்காலத்தில் இதுவரையிலும் 3800க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஈரானில் சிறுமியை கற்பழித்தவருக்கு பகிரங்க தூக்குத்தண்டனை!
[Thursday 2017-09-21 20:00]

ஈரானில் உள்ள அர்டேபிள் பிராந்தியத்தில் 7 வயது சிறுமியை இஸ்மாயில் ஜபர்சேத் (வயது 42) என்பவன் கற்பழித்து கொலை செய்துள்ளார். இது சம்மந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் துறித்த நபரை தூக்கில் போடும்படி ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை பர்சாபாத் என்ற இடத்தில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட ஏற்பாடு செய்யப்பட்டது.


நீளமான கம்பி உடலில் பாய்ந்த பிறகும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இரும்பு மனிதர்!
[Thursday 2017-09-21 18:00]

சீனாவின் செங்டு நகரைச் சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி, கடந்த 18-ம் தேதி வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர், கால் தவறி அருகில் இருந்த இரும்பு கம்பி மீது விழுந்தார். இதில் அவரது உடலில் தோள்பட்டை வழியாக 2 மீட்டர் அளவிற்கு கம்பி குத்தி வெளியே வந்துள்ளது.


அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு நாய் குரைப்பது போன்றது: - நியூயார்க்கில் வடகொரியா அமைச்சர் கேலி
[Thursday 2017-09-21 17:00]

ஐ.நா. பொதுசபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது நாய் குரைப்பதற்கு சமம் என்று கூறியிருக்கிறது வடகொரியா. ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் வந்த வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யோங் ஹோ இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார். வடகொரியாவை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்ற டிம்பின் அச்சுறுத்தல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சரின் பதில் இவ்வாறு இருந்தது.


பிரியங்கா சோப்ராவை சந்தித்ததை நம்ப முடியவில்லை: - நெகிழும் மலாலா
[Thursday 2017-09-21 14:00]

'பிரியங்கா சோப்ராவை சந்தித்ததை என்னால் நம்ப முடியவில்லை’ என தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவுசெய்துள்ளார் மலாலா.பாகிஸ்தானில், பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்தனர் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டனர்.


பிரித்தானியாவில் 20வது குழந்தையை பெற்றெடுத்த மெகா குடும்பம்!
[Thursday 2017-09-21 13:00]

பிரித்தானியாவின் மெகா குடும்பம் ஒன்று தங்களுக்கு பிறந்த 20வது குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடியுள்ளனர்.கடந்த திங்களன்று Sue மற்றும் Noel Radford தம்பதியினருக்கு Archie என்ற குழந்தை பிறந்தது. இது இத்தம்பதியினருக்கு 20வது குழந்தையாகும். ஆனால் இதுதான் தங்களது கடைசி குழந்தை என Sue மற்றும் Noel Radford தம்பதி தெரிவித்துள்ளனர்.Sue மற்றும் Noel Radford தம்பதியினருக்கு ஏற்கனவே Chris(28), Sophi (23), Chloe(22), Jack(20), Daniel(18), Luke மற்றும் Millie(16), Katie(14), James(13), Ellie(12), Aimee(11), Josh(10), Max(8), Tillie(7), Oscar(5), Casper(4), Hallie(2) மற்றும் Phoebe(13 மாதங்கள்) என 19 பிள்ளைகள் உள்ளனர்.


தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம்: - பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்
[Thursday 2017-09-21 13:00]

தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றுக் கூறி பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் ஒன்றில் பேசிய பிரதமர் ஷாஹித்,


24 மணி நேரத்தில் 850 கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த ரஷ்ய விமானப்படை!
[Thursday 2017-09-21 07:00]

சிரியாவில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் 850 பேரை கடந்த 24 மணி நேரத்தில் விமானப்படை கொன்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயுதமேந்தி போராடி வருகின்றது. அரசுத்தரப்புக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியுள்ளது.


அமெரிக்காவில் பாகனைக் கொன்ற யானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்: - வரலாற்றின் கருப்புப் பக்கம்
[Thursday 2017-09-21 07:00]

அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டுவாக்கில் பிரபலமான ஸ்பார்க்ஸ் வேர்ல்டு பேமஸ் சர்க்கஸ் நிறுவனத்தில் பார்வையாளர்களை மகிழ்விப்பதில் மேரியின் பெயர் மிகவும் பிரபலம். மேரி என்னும் பெயருக்கு ஏற்ப பார்வையாளர்களை கவர்ந்து குஷிப்படுத்துவதில் மேரியின் பங்கு அபாரமானது. தனது சகாக்களான மேலும் நான்கு யானைகளுடன் வியப்பூட்டும் வித்தைகளைச் செய்து மக்களின் கரகோஷத்தை மேரி பெற்று வந்தது.


தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரிக்கும்!
[Wednesday 2017-09-20 17:00]

இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிபிசியிடம் பேசிய கூகுளின் மூத்த துணைத் தலைவர் கென்ட் வால்க்கர், டிவிட்டர் மட்டும் இதற்காக ஒரு மில்லியன் கணக்குகளை நீக்கியுள்ளது எனக் கூறியுள்ளார். தமது கொள்கைகள் மற்றும் அமலாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஃபேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


மெக்ஸிகோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக உயர்வு!
[Wednesday 2017-09-20 17:00]

மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 217 ஆக உயர்ந்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. தலைநகர் மெக்ஸிகோ சிட்டிக்குத் தெற்கே உள்ள மோர்லாஸ் மாகாணத்தில் மட்டும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


வடகொரியாவை அழித்துவிடுவோம்<: - எச்சரித்த டிரம்பின் உரையை வரவேற்ற ஜப்பான் - கியூபா கடும் எதிர்ப்பு
[Wednesday 2017-09-20 17:00]

வடகொரியாவை அழித்துவிடுவோம் என்ற ஐ.நா.சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரைக்கு ஜப்பான் வரவேற்பும், கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணு ஆயுத சோதனை நடத்தி உலகை அச்சுறுத்தி வரும் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டிரம்ப் ஆற்றிய உரையை வரவேற்பதாக ஜப்பான் நாட்டு தலைமை அமைச்சரவை செயலாளர் யோசிகிஹைட் கூறியுள்ளார்.


மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: - 119 பேர் வரை பலி
[Wednesday 2017-09-20 07:00]

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.


பாகிஸ்தான் வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்!
[Wednesday 2017-09-20 07:00]

ஐநா பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான், வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டம் நியுயார்க்கில் நடந்து வருகிறது. இதில், முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும். தீவிரவாதத்தால் எங்கள் நாட்டையும், ஒட்டுமொத்த உலகத்தையும் கண்ணீர் சிந்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.


சைக்கிள் மூலம் 79 நாட்களில் உலகத்தை வலம் வந்து புதிய உலக சாதனை படைத்த பிரிட்டிஷ் மனிதர்!
[Tuesday 2017-09-19 17:00]

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் பல நாடுகளுக்குச் சென்று சாதனை படைத்து வந்தார். இந்நிலையில் 79 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.


வடக்கு லண்டனில் பாரிய தீ விபத்து: - மீட்பு பணியில் 140 தீயணைப்பு வீரர்கள்
[Tuesday 2017-09-19 16:00]

வடக்கு லண்டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.


மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்த ஆங் சான் சூகி!
[Tuesday 2017-09-19 12:00]

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.


கலவர வழக்கு: - எகிப்தில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை!
[Tuesday 2017-09-19 07:00]

எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவ மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் கலவரமாக மாறியது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.


கழிவறைக்குள் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் மீட்பு: - ஜெனிவாவில் மர்ம செயற்பாடு
[Tuesday 2017-09-19 07:00]

ஜெனீவாவில் நபர் ஒருவர் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை கழிப்பறைக்குள் நுழைப்பதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜெனீவா வங்கி கிளைக்கு அருகில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கழிவறையிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரியளவு 500 யூரோ தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


உலக மக்களை கவலையில் ஆழ்த்திய குழந்தை: - நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Tuesday 2017-09-19 07:00]

மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உயிருக்கு பயந்து வங்கதேசத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.இதுவரை நான்கு லட்சம் மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு வந்துள்ளனர், இவர்கள் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


குறட்டை விடுவதை தடுக்கும் கருவியை கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் விருது!
[Monday 2017-09-18 18:00]

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச அளவில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்குவது வழக்கம்.இதே போல், மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சாதனைகளை செய்யும் நபர்களுக்கு Ig Nobel என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது.


துனிசியாவில் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி!
[Monday 2017-09-18 18:00]

இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியா நாட்டில் ஷரீஅத் சட்ட,திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது.பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது. மகன்களுக்கு இரண்டு பங்கும், மகள்களுக்கு ஒரு பங்கும் வழங்கும் பழக்கம்தான் செயல்பாட்டில் உள்ளது.


பொருளாதார தடை கடுமையாக இருந்தால் அணு ஆயுத சோதனை வேகமாக நடைபெறும்: - வட கொரியா எச்சரிக்கை
[Monday 2017-09-18 18:00]

வடகொரியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை கடுமையாக இருந்தால் தங்களது அணு ஆயுத சோதனையும் வேகமாக நடைபெறும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி வட கொரியா தனது 6-வது அணு ஆயுத சோதனையை செய்து முடித்துள்ளது.வடகொரியாவின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை புதிய பொருளாதார தடையை விதித்தது.


பிரான்ஸ் ரயில் நிலையத்தில் நான்கு வெளிநாட்டு மாணவிகள் மீது ஆசிட் வீச்சு!
[Monday 2017-09-18 08:00]

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த நான்கு மாணவிகள் மீது ஆசிட் வீசிய மனநலம் சரியில்லாத பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த Courtney Siverling, Charlotte Kaufman, Michelle Krug மற்றும் Kesley Korsten ஆகிய நான்கு மாணவிகள் சுற்றுலா வந்துள்ளனர்.


வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு: - 14,000 புதிய முகாம்கள் அமைப்பு
[Monday 2017-09-18 08:00]

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா