Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பட்டினியால் செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்!
[Saturday 2017-10-14 09:00]

கிழக்கு அண்டார்டிகாவில் பென்குயின்கள் கொத்து கொத்தாக இறப்பது பேரழிவு என்று சூழ்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடேலி வகை பென்குயின்களின் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளன. அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அளவுக்கும் அதிகமான பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் நீண்ட தூரம் கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், உணவு கிடைக்கத் தாமதமாகி பட்டினியால் அந்த இளம் குஞ்சுகள் இறந்துள்ளன. சுமார் 36,000 பென்குயின்கள் வசிக்கும் அந்த பென்குயின் குடியிருப்பில் கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகமோசமானது: - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
[Saturday 2017-10-14 09:00]

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது கடந்த 2015-ல் ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தைத்தான் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ‘ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமானது. அந்த ஒப்பந்தத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வுசெய்து 60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் குறுஞ்செய்தி:
[Friday 2017-10-13 19:00]

ஆஸ்திரேலியாவில் இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார்.


பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்! - கனடா பிரதமர்
[Friday 2017-10-13 09:00]

சர்வதேச பெண் குழந்தைகளுக்கான தினமாக உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான சுதந்திரமான, பாகுபாடற்ற, பாதுகாப்பான, ஒடுக்குமுறைகளற்ற சமூகத்தை உருவாக்கித்தந்து, சுகாதாரமும் ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு, அடிப்படை உரிமைகள், வன்முறைகளற்ற சூழல்களை ஏற்படுத்தித் தருவதை உறுதிசெய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.


வியட்நாமில் புயல் மழை 37 பேர் பலி! 40 பேரை காணவில்லை!
[Friday 2017-10-13 08:00]

வியட்நாமில் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகிறது. இந்த புயல் மழை நேற்று அதிகரித்தது. இதில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் முழ்கின. சாலைகள், தெருக்கள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்துவிழுந்தன. 16,740 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணங்களில் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது.


கலிபோர்னியா காட்டுத் தீயால் 23 பேர் பலி!
[Thursday 2017-10-12 16:00]

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியது. இப்பகுதிகளில் திராட்சைப் பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவியது.


விமானங்களின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்: - அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா
[Thursday 2017-10-12 16:00]

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஸ்டெல்த் எஃப்-3 என்ற போர் விமானம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகும். ஆஸ்திரேலிய அரசின் விமானத்துறையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 ஆகிய 2 விமானங்களும் பல காலமாக முக்கிய பங்காற்றி வருகின்றது.


லண்டனில் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வித்தியாசமான தரை கொண்ட டைல்ஸ் ஷோரூம்!
[Thursday 2017-10-12 16:00]

லண்டனில் உள்ள டைல்ஸ் ஷோரூமின் வாசலில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வித்தியாசமான தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை பார்க்கும் போது பள்ளம் இருப்பது போன்று உள்ளது. ஆனால் உண்மையில் அங்கு பள்ளம் இல்லை.


போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்: - வடகொரியா மிரட்டல்
[Thursday 2017-10-12 16:00]

வடகொரியா சமீப காலமாக அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் 2 அதிநவீன குண்டு வீச்சு போர் விமானங்களை கொரிய தீபகற்ப பகுதியில் பறக்க விட்டது. இதில்


மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை: - ஐ.நா.
[Thursday 2017-10-12 16:00]

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மிகக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள 5 லட்சம் ரோஹிங்யா அகதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில், ஐ.நா. மனிதர்கள் உரிமை குழு நடத்திய நேர்காணல் மற்றும் ஆய்வின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் 12 கோடியே 40 லட்சம் பேர் உடல் பருமன் நோயினால் பாதிப்பு!
[Wednesday 2017-10-11 17:00]

உடல் பருமன் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதிக அளவில் வருமானம் ஈட்டும் செல்வ செழிப்பு மிக்க பல ஐரோப்பிய நாடுகளில் இந்நோய் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் பருமன் தின விழாவையொட்டி ‘லாண்செட்’ நிறுவனம் உலகம் முழுவதும் 200 நாடுகளில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 12 கோடியே 40 லட்சம் பேர் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவது தெரிய வந்தது.


மெக்சிகோ சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் பலி!
[Wednesday 2017-10-11 17:00]

மெக்சிகோ நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் இங்குள்ளனர்.


ஷாம்பு போத்தலை கொண்டு நிமோனியாவில் இருந்து குழந்தைகளை காக்கும் கருவி கண்டுபிடிப்பு!
[Wednesday 2017-10-11 17:00]

நிமோனியாவால் ஆண்டு தோறும் 9 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளும், சிசுக்களும் உயிரிழக்கின்றனர். நிமோனியா நுரையீரலை பாதிக்கிறது. ஸ்டிரெப்டோகாக்கஸ் அல்லது ஆர்.எஸ்.வி. போன்ற வைரஸ்கள் நுரையீரலை பாதிக்கின்றன. இதனால் நுரையீரல் வீங்குவதுடன் திரவத்தால் நிரம்புகின்றன. இதனால் சுவாசத்தின் போது ஆக்சிஜனை உள்ளிழுக்கும் நுரையீரலின் திறன் குறைகிறது. வளர்ந்த நாடுகளில் நிமோனியா பாதித்த குழந்தைகளின் சுவாசத்துக்கு செயற்கை சுவாச கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.


போர் கப்பலை அனுப்பியதன் மூலம் இறையாண்மையை அமெரிக்கா மீறி விட்டது: - சீனா குற்றச்சாட்டு
[Wednesday 2017-10-11 17:00]

தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை அனுப்பியதன் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக, சீன நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வடகொரியாவின் கப்பல்களுக்கு தடை விதித்த ஐ.நா!
[Wednesday 2017-10-11 06:00]

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது.


அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பல்கலைக்கழக மாணவர் கைது!
[Wednesday 2017-10-11 06:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லப்பாக் நகரில் டெக்சாஸ் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. மாகாணத்தின் மிக முக்கிய பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள்ளேயே போலீஸ் நிலையமும் அமைந்து உள்ளது.


அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு!
[Wednesday 2017-10-11 06:00]

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது.


அமெரிக்க டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு!
[Tuesday 2017-10-10 08:00]

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொத்தாக செத்து மிதக்கும் நீர்யானைகள்: - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
[Tuesday 2017-10-10 07:00]

நமீபியாவில் Bwabwata தேசிய பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Bwabwata தேசிய பூங்காவில் திடீரென்று ஆந்த்ராக்ஸ் தாக்குதல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


துபாயில் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்!
[Tuesday 2017-10-10 07:00]

போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.


ஆபத்தான உலோகத்தில் மறைந்துள்ள அற்புதம்!
[Tuesday 2017-10-10 07:00]

பெரில்லியம் உலோகத்தின் பயன்பாட்டை மேலும் விரிவாக்குவது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ‘பெரில்லியம்’ என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு உலோகத்தின் பெயர். அதுவும் சாதாரணமான உலோகம் அல்ல இது. மிக, மிக பலமான, அதே நேரத்தில் மிக, மிக எடைக் குறைவான ஒரு பொருளாகும். இது செல்போன்கள், ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றின் பாகங்களாக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதாவது 100 டிகிரியில் தண்ணீர் கொதித்து, ஆவியாகத் தொடங்கிவிடும். ஆனால், பெரில்லியத்தை உருக்க, 1,287 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். ெகாதிக்க வேண்டும் என்றால், 2,471 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இரும்பை உருக்கி கொதிக்க வைக்க, 1,510 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் போதும். இப்போது தெரிந்திருக்கும், இதன் உறுதி.இவ்வளவு அற்புதமான இந்த உலோகம், கிரேக்க மொழில் பெரில் என்ற தனிமத்துக்கு வழங்கப்படும் பெயரான பெரில்லியோஸ் என்ற பெயரில் இருந்து வந்துள்ளது.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்கர்
[Monday 2017-10-09 18:00]

2017-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சட்.ஹெச்.தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உளவியலுடன் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்டு ஹெச்.தாலருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டுக்கு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.2 கோடி வழங்கப்படும்.


கட்டுமானப் பொருள்கள் சந்தையில் பயங்கர தீ விபத்து: - மாஸ்கோவில் 3000 பேர் வெளியேற்றம்
[Monday 2017-10-09 17:00]

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று திடீரென பயங்கர தீப்பற்றியது. மரச்சாமான்கள் அதிகளவில் இருந்ததால், தீ வேகமாக பரவியதோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அச்சந்தையினுள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


டொனல்டு டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: - சே குவாராவின் மகள் விளாசல்
[Monday 2017-10-09 17:00]

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ஒரு பைத்தியக்காரர் என கியூபா புரட்சியாளர் சே குவாரா மகள் விமர்சித்துள்ளார். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வசித்து வரும் சே குவாராவின் மூத்த மகள் அலெய்டா குவாரா மார்ச் கூறியதாவது: பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அமெரிக்க அதிபரிடம் அதிகாரம் கிடைத்ததால், பல்வேறு பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்றும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார் .


சவுதி அரண்மனையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்!
[Monday 2017-10-09 08:00]

சவுதி மன்னருக்கு சொந்தமான ஜெட்டாவில் உள்ள அரண்மனையில் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் சுட்டதில் 2 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.


எரிவாயுக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் கானாவில் 7 பேர் பலி!
[Monday 2017-10-09 08:00]

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சிறிய நாடு கானா. அந்நாட்டின் தலைநகரான அக்கரா நகரில், அரசுக்குச் சொந்தமான இயற்கை எரிவாயுக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்தக் கிடங்கில் நேற்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டு பின்னர் ஒட்டுமொத்த கிடங்கும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியேறினர்.


சவூதி சொகுசு கார் கண்காட்சியில்முதல் முறையாக பங்கேற்ற பெண்கள்!
[Saturday 2017-10-07 17:00]

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள் கலந்துகொண்டுண்டனர். ரியாத்தில் சொகுசு கார் கண்காட்சியுடன் கார் விற்பனையும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள், புதிய மாடல் கார்களின் விபரங்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டனர்.சிலர் காரில் அமர்ந்து டெஸ்ட் ட்ரைவும் செய்தனர்.


தங்கையைக் கொன்ற சிறுவன்: - 20 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையானார் தந்தை
[Saturday 2017-10-07 17:00]

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் தங்கையைக் கொன்றது தாம் தான் என 7 வயது சிறுவன் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, தவறுதலாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 மாதங்கள் சிறையிலிருந்த தந்தை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.டெக்சாஸ்-ல் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கம்ப்யூட்டர் விளையாட்டு ஆர்வத்தில் அதற்கு இடையூறாக இருந்த தமது 2 வயது குழந்தையின் மூக்கு, வாயை பொத்தி கொலை செய்ததாக ஆன்டனி மைக்கேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா