Untitled Document
August 17, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தடைப்பட்ட திருமணம்: - மணப்பெண் எடுத்த முடிவால் குவியும் பாராட்டுகள்
[Saturday 2017-07-15 18:00]

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் திடீரென்று நின்று போன திருமணத்தால் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட இளம்பெண் ஒருவர் எடுத்த முடிவு பலரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.இண்டியானா பகுதியில் குடியிருந்து வரும் Sarah Cummins என்ற 25 வயதான செவிலியர் மாணவியின் திருமணம் எதிர்பாராத சில காரணங்களால் திடீரென்று நின்று போயுள்ளது.


அமெரிக்காவுக்குள் நுழைய 6 நாட்டவர்களுக்கு தடை: - கட்டுப்பாடுகளை தளர்த்தி நீதிபதி உத்தரவு
[Saturday 2017-07-15 08:00]

அமெரிக்காவுக்குள் நுழைய 6 நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.


முதலாவது ஆளில்லா விமான பிரிவை ஆரம்பித்த பிரித்தானிய காவல் துறை!
[Saturday 2017-07-15 07:00]

பிரித்தானிய காவல்துறை தனது முதலாவது ஆளில்லா விமான பிரிவை ஆரம்பித்துள்ளது.பிரித்தானியாவில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமான காவல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது காணாமல்போனவர்கள், சாலைவிபத்துகள் உள்ளிட்ட பெரிய குற்றச்சம்பவங்களை புலனாய்வதற்கு உதவும் என்று பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


பிரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்த ட்ரம்ப்: - புதுசர்ச்சை
[Saturday 2017-07-15 07:00]

ட்ரம்ப் செய்வதெல்லாம் சர்ச்சையாகிறதா.. இல்லை சர்ச்சையைத் தேடித் தேடி ட்ரம்ப் செய்கிறாரா என விவாதிக்கும் அளவுக்கு வைரல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் தற்போதைய ஹாட் சர்ச்சை ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்ததுதான்.


சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம்!
[Friday 2017-07-14 18:00]

இந்த அற்புதமான புகைப்படங்கள், வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு பெண் சிங்கம் ஒன்று பாலூட்டும் போது எடுக்கப்பட்டதாகும். இது அரிதிலும்,அரிதான நிகழ்வு. தான்சானியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியான கோரோன்கோரோ-வில் உள்ள டுடூ சஃபாரி விடுதியில் தங்கியிருந்த ஜுப் வான் டெர் லிண்டே என்பவர் இந்த காட்சியை பார்த்துள்ளார்.


தேர்தல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பிரதமர்!
[Friday 2017-07-14 18:00]

இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது.ஆனால் எதிர்பார்த்தது போன்று முடிவு வெளியாகவில்லை. ஆட்சி அமைக்கும் அளவு ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியது.


அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
[Friday 2017-07-14 18:00]

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பிராட்லி ஷெர்மன் அந்தத் தீர்மானத்தை புதன்கிழமை தாக்கல் செய்தார். "கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது என்று கூறப்படுவது தொடர்பான விசாரணையை டிரம்ப் முடக்கப் பார்க்கிறார்; இது சட்டம், நீதியை முடக்கும் செயல்.


இருபது ஆண்டுகளாக ராணுவம் இல்லாத நாடு: - புதிய ராணுவ படையை உருவாக்க முடிவு
[Friday 2017-07-14 11:00]

கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடான ஹைத்தி நாட்டிற்கு 20 ஆண்டுகளாக ராணுவம் கிடையாது. ராணுவத்தை உருவாக்க இப்போது ஹைத்தி திட்டமிடுகிறது.இயற்கைப் பேரிடர்களை சமாளிக்கவும், எல்லை பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த லத்தீன் அமெரிக்க நாடு ஆண்களும் பெண்களுமாக 500 வீரர்கள் கொண்ட ராணுவத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.


ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனால் தான் அங்கு பிரச்சனை நிலவுகிறது: - பிரான்ஸ் அதிபர்
[Friday 2017-07-14 08:00]

ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனால் தான் அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண்ணை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறை!
[Friday 2017-07-14 08:00]

கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 43 வயதுடைய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நிர்வாணமாக இருக்கும் ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் விசித்திர தீவு!
[Friday 2017-07-14 08:00]

ஜப்பானின் கியூஷு மற்றும் கொரிய தீபகற்த்திற்கு இடையில் அமைந்துள்ளது ஒகினோஷிமா தீவு. இந்த தீவிற்கு ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.ஆனால் அவர்களும் அங்கிருக்கும் கடற்கரைக்கு செல்ல வேண்டுமேன்றால், தனது உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமாகத் செல்ல முடியும். இது அங்கு சட்ட விதியாக உள்ளதாக கூறப்படுகிறது.


ரஷ்ய ஜனாதிபதி புடினின் புதிய காதலி இவரா? - விவாதத்தில் மூழ்கிய ஊடகங்கள்
[Thursday 2017-07-13 18:00]

ரஷ்ய ஜனாதிபதியின் காருக்குள் இருந்த சிவப்பு உடை அணிந்த பெண்மணி தான் அவரது புதிய காதலியா என அங்குள்ள செய்தி ஊடகங்கள் விவாதத்தில் மூழ்கியுள்ளன.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசியல் பரபரப்பில் இருந்து விடுபட்டு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அவருக்கு பிரியமான கடற்கரை விடுதி ஒன்றில் விடுமுறையை கழித்து வருகிறார்.இந்த நிலையில் தமது கருப்பு வண்ண மெர்சிடஸ் காரில் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு தாமே வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார்.


விமான நிறுத்துமிடத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம்: -நூலிழையில் தவிர்க்கப்பட்டதால் உயிர் தப்பிய பயணிகள்
[Thursday 2017-07-13 17:00]

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் வான்கோவர் நகரிலிருந்து 140 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட ஏர் கனடா விமானம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கியதும் ஏர் கனடா விமானம் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஓடு தளத்திற்கு இணையாக விமானங்கள் நிறுத்துவதற்கென டாக்சி வே ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக நவாஸ் ஷெரீஃப்புக்கு நெருக்கடி!
[Thursday 2017-07-13 17:00]

பனாமா பேப்பர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கை வலுவடைந்து வருவதால் அடுத்து எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் என தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நவாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


மனிதகுலத்தின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Thursday 2017-07-13 17:00]

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.


சவுதி அரேபியாவில் தீ விபத்து: - 10 இந்தியர்கள் பலி
[Thursday 2017-07-13 07:00]

சவுதி அரேபியாவில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 11 பேரும் இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சவுதியின் தென் மேற்கு மாநிலமான நஜ்ரானில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நஜ்ரானில், இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில், நேற்றிரவு திடீரெனத் தீ பிடித்துள்ளது. அந்த வீட்டில் காற்றோட்ட வசதி இல்லை. ஜன்னல்களும் இல்லை என்று கூறப்படுகிறது. உள்ளே இருந்தவர்களில் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சிரியாவிலுள்ள ஐஎஸ் இயக்கமும் தோற்கடிக்கப்பட வேண்டும்: - அமெரிக்க தளபதி டவுன்செண்ட்
[Thursday 2017-07-13 07:00]

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.


இங்கிலாந்தில் அலர்ஜி உணவால் இறந்த பள்ளி மாணவன்!
[Thursday 2017-07-13 07:00]

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மாணவர் இறந்து போனது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தின் கிரீன்போர்டில் வில்லியம் பெர்கின் உயர்நிலைப்பள்ளி உள்ளது, இப்பள்ளியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கரன்பீர் சீமா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.


வெள்ளை மாளிகையின் முக்கியத்துவம் வாய்ந்த தலைமை நிர்வாகியாக இந்தியர்: -
[Wednesday 2017-07-12 19:00]

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார். இவர் அமெரிக்க நாட்டில் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிற ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் அவர் உயர் பட்டமும் பெற்றுள்ளார். இவரை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக டிரம்ப் தற்போது நியமித்துள்ளார்.


டொனால்ட் ட்ரம்புடன், இணைந்து செயலாற்ற பிரான்ஸ் விருப்பம்:
[Wednesday 2017-07-12 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இணைந்து செயலாற்ற விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லொசான்னில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பிரான்ஸின் எழுச்சி நாளான பாஸ்டில் தினத்தில் பங்கேற்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.


உலக பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடை காந்தக் கண்ணழகன்:
[Wednesday 2017-07-12 07:00]

ஒரே புகைப்படம் மூலம் உலக பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடை காந்தக் கண்ணழகன் அர்ஷத் கான் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் இட்வார் பஜாரில் டீக்கடையில் வேலை செய்யும் அர்ஷத் கான் என்பவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது, இதனால் மொடலாகும் வாய்ப்பு கூட கைகூடி வந்தது. இந்நிலையில், அர்ஷத் கான் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.


ஒரே வாரத்தில் 2 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி ஒரே வாரத்தில் கோடீஸ்வரியான இளம்பெண்!
[Wednesday 2017-07-12 07:00]

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒரே வாரத்தில் 2 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதன் மூலம் அவருக்கு ஜாக்பாட் அடித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார். Rosa Domingue என்ற பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது லாட்டரி டிக்கெட் வாங்கி தமது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அரிசோனாவில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 டொலர் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.


காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாடு நுழையும்: - குளோபல் டைம்ஸ்
[Monday 2017-07-10 13:00]

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீன அரசு மீடியாவான 'குளோபல் டைம்ஸ்' இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.


லண்டனில் பயங்கர தீ விபத்து: - அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றம்
[Monday 2017-07-10 09:00]

லண்டன் நகரில் மிகவும் பிரபலமான கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது அதிவேகமாக பரவி வருகிறது. அதேபோல், தீப் பொறிகள் காற்றின் மூலம் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவுகிறது.


ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகர் மீட்பு: - ஈராக் பிரதமர் அறிவிப்பு!
[Monday 2017-07-10 08:00]

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து, மொசூல் நகர் முழுவதுமாக மீட்கப்பட்டுவிட்டதாக ஈராக் பிரதமர் அறிவித்துள்ளார்.2014 ஜூன் மாதத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக்கின் மொசூல் நகரத்தைக் கைப்பற்றியது. அது முதல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு மொசூல் முக்கியத் தளமாக இருந்துவந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே மொசூல் நகரை மீட்கும் நோக்கில் ஈராக் அரசு, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் அரசுக்கு, அமெரிக்காவும் உதவவே ஐஎஸ் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால், இந்தச் சண்டையில் பொதுமக்களும் அதிக அளவு உயிரிழந்தனர்.


போலந்தில் 500 கிலோ எடை கொண்ட இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு மீட்பு: - வெளியேற்றப்பட்ட மக்கள்
[Monday 2017-07-10 08:00]

போலந்தில் உள்ள பியலிஸ்டோக் பகுதியில் கட்டுமானப் பணி இடத்தில் 500 கிலோ எடை கொண்ட இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியிலிருந்து 10,000 பேர் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.


காதலருடன் ஓடிய பெண்ணை குத்தி கொன்ற அண்ணன்: - பாகிஸ்தானில் கொடூரம்
[Monday 2017-07-10 07:00]

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ள ஷெராகோட் பகுதியை சேர்ந்தவர் நசியா. இவரது சகோதரர் மொகமது இஷாக். நசியா அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். அவளது பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நசியா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போனார்.


கனடாவில் அவசரநிலை பிரகடனம்: - 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ
[Monday 2017-07-10 07:00]

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 183 இடங்களில் பரவியுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமே 173 இடங்களில் காட்டுத்தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா