Untitled Document
August 17, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!
[Sunday 2017-07-09 19:00]

ஒரு சிறு தவறான கணிப்போ அல்லது தவறோ நிகழ்ந்தால் அது அணு ஆயுதப் போரின் துவக்கமாக அமைந்துவிடும் என்று வடகொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்க விமானப்படையினர் வடகொரிய எல்லைப் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பி1 பி லாஞ்சர்ஸ் ரகப்போர் விமானங்கள் 900 கிலோ எடை அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்டது.


பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றேடுத்தார்!
[Sunday 2017-07-09 19:00]

பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.பிரித்தானியாவின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே.இவர் தன்னுடைய உடலில் ஏற்பட்ட குரோமோசோம்களின் மாற்றத்தை உணர்ந்ததால் இளம் வயதிலே ஆணாக மாறுவதற்கு முடிவெடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 30-ஆயிரம் பவுண்டுகளை பிரித்தானிய அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொண்டது.


ஜி-20 மாநாட்டில் ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்ட ட்ரம்ப்!
[Sunday 2017-07-09 18:00]

சமீபத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தங்குவதற்கு சரியான ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.


வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்க தென் கொரியா - அமெரிக்கா போர் ஒத்திகை!
[Sunday 2017-07-09 10:00]

பல்வேறு எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகின்றது. அந்நாட்டின் மீது ஐ.நா பொருளாதார தடை விதித்துள்ள போதிலும் வட கொரியா எதையும் பொருட்படுத்தவில்லை.


பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட அரிசி: - மக்கள் நம்புவது ஏன்?
[Sunday 2017-07-09 10:00]

இது ஒரு பரவலான பிரச்சனை என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும், ஆஃப்ரிக்காவிலும் மற்றும் பிற பகுதிகளிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறது என்ற வதந்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக அரிசி உருண்டைகள் குதிப்பதாக காட்டும் வைரல் வீடியோக்களால் இது தூண்டப்படுகிறது.பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்திகள் கடந்த சில வாரங்களில் செனகல், காம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பரவின.


அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
[Sunday 2017-07-09 07:00]

அணு ஆயுத போரை தடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஐ.நா. சபையில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், ஐ.நா. சபையின் பெரும்பாலான நாடுகள் அளித்த பரிந்துரைகளின் படி அணு ஆயுத தடை ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது.


ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைத் சந்திக்க துருக்கி தயாராக இருக்கிறது: - அதிபர் எர்டோகன்
[Sunday 2017-07-09 07:00]

ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைத் தனது நாடு சந்திக்கத் தயாராக இருக்கிறது'' என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். பிடியிலிருந்து ராக்கா நகரத்தை விடுவிக்க குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கிவருகிறது. ஆனால், இந்தக் குழுவான ஒய்.பி.ஜி ஏற்கெனவே அமெரிக்கா உள்பட பல மேலை நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை விதிக்கப்பட்ட பி.கே.கே இயக்கத்தின் ஒரு பிரிவாகும் என்று துருக்கி குற்றஞ்சாட்டுகிறது.


பாடசாலை படிப்பை நிறைவு செய்த மலாலா: - பில்கேட்ஸ் - கனடா பிரதமர் வாழ்த்து
[Saturday 2017-07-08 17:00]

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றார்.


இந்தியா செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!
[Saturday 2017-07-08 17:00]

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோகாலா பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களைக் குவித்தது.


இவர்கள் தான் என்னை காயப்படுத்தினார்கள்: - புடினிடம் கூறிய டிரம்ப்
[Saturday 2017-07-08 15:00]

ஜேர்மனியின் Hamburg நகரில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜேர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.இந்நிலையில் ஜி20 மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர்.


தற்கொலை செய்துக்கொள்வோம் என மிரட்டிய 16 வயது பையனுக்கும் 71வயது மூதாட்டிக்கும் திருமணம்!
[Saturday 2017-07-08 15:00]

இந்தோனேசியாவில் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று மிரட்டியதால் 16 வயது பையனுக்கும், 71வயது மூதாட்டிக்கும் அவரது வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரோஹாயா, 71 வயதாகும் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிலமாத் ரயாதி என்ற சிறுவனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.


ஆபத்தான பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் வாய்வழி பாலுறவு: - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
[Saturday 2017-07-08 09:00]

வாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


வட கொரியப் பிரச்னையில் பொறுமை இழக்கக்கூடாது: - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
[Saturday 2017-07-08 09:00]

வட கொரியா, தொடர்ந்து அணு ஆயுதச் சோதனை நடத்திவருவது, உலக நாடுகள் பலவற்றுக்கு கவலை அளித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'வட கொரியப் பிரச்னையில் பொறுமை இழக்கக்கூடாது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.


நிபந்தனைகளை ஏற்று கொள்ளாத கத்தாரை மிரட்டும் அரபு நாடுகள்!
[Friday 2017-07-07 17:00]

அரபு நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் அரசு ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அந்நாடுகள் கத்தார் அரசை எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. கத்தார் அரசாங்கம் தீவிரவாதத்துக்கு துணை போவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் அரபு நாடுகள் குற்றம்சாட்டின. சவுதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக்கொண்டன.


முதன் முறையாக நேருக்கு நேர் சந்தித்து கொண்ட டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின்!
[Friday 2017-07-07 17:00]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முறையாக நேருக்கு நேர் இன்றைய தினம் சந்தித்து கொண்டுள்ளனர்.ஜேர்மன் Hamburg நகரத்தில் இன்று ஆரம்பமாகும் G-20 மாநாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


நபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு 30 ஆண்டுகள் சிறை!
[Friday 2017-07-07 17:00]

எல் சல்வடார் நாட்டில் நபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சல்வடாரில்(El Salvador) கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்தால் கொலைக்குற்றமாக கருதி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.


எகிப்தில் பிரசவ வலியுடன் வேறொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண்: - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
[Friday 2017-07-07 16:00]

எகிப்தில் பிரசவ வலியுடன் வேறொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் Luxor நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் Mervat Mohamed Talaat என்ற பெண் மகப்பேறியல் துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.Talaat நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், சம்பவத்தன்று பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து கொண்டிருந்தார்.


மெக்சிகோ சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழப்பு!
[Friday 2017-07-07 08:00]

சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குய்ரெர்ரோ சிஹுவாவா மாநிலதில் அதிகளவிலான போதை மாபியாக்கள் இயங்கி வருகின்றன. ஓபிலியம் எனப்படும் போதைப்பொருள் இங்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கு இந்த மாநிலத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தின் காபுல்கோ நகரில் சிறைச்சாலை இருக்கிறது.


ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
[Friday 2017-07-07 08:00]

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.


அதிபர் தேர்தலில் ரஷ்யா மட்டுமின்றி வேறு நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம்: - டொனால்டு ட்ரம்ப்
[Friday 2017-07-07 08:00]

‘‘கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா மட்டுமின்றி வேறு நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம்’’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் புது கருத்தைத் தெரிவித்துள்ளார்.


உலகின் மிகவும் மர்மமான பகுதியான பெர்முடா முக்கோணத்தில் உருவாகியுள்ள புதிய தீவு!
[Thursday 2017-07-06 17:00]

உலகின் மிகவும் மர்மமான பகுதியாக கருதப்படும், பெர்முடா முக்கோணத்தில் திடீரென புதிய தீவு ஒன்று தோன்றியுள்ளது. வட அமெரிக்காவை ஒட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில், 4 லட்சத்து 40 ஆயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட கடல்பகுதி பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அருகே செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் மாயமாகி வருவது விடைதெரியா மர்மமாகவே உள்ளது. ஆகையால் இது உலகின் ஆபத்தான பகுதி என்று அழைக்கப்படுகிறது.


வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும்: - அமெரிக்கா எச்சரிக்கை
[Thursday 2017-07-06 17:00]

கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததை அடுத்து, அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு ராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே, ஐ.நா. மன்றத்தில் வட கொரியாவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.


குறைந்து வரும் தாம்பத்திய வாழ்க்கை முறை: - செக்ஸ் ரோபோட்டுகளை நாடும் பிரித்தானிய மக்கள்
[Thursday 2017-07-06 17:00]

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆண், பெண் என இருபாலின செக்ஸ் ரோபோட்டுக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் பத்து வருடங்களில் இங்கிலாந்து குடும்ப உறவுகளின் எண்ணிக்கை மிகவும் குறைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த அமெரிக்க பெண்: - நிகழ்ந்த விபரீத சம்பவம்
[Thursday 2017-07-06 17:00]

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த காரணத்திற்காக அவருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க சுதந்திரம் பெற்ற நாளான யூலை 4-ம் திகதி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்துள்ளன. இதே தினத்தில் Emily Lance என்ற பெண் செய்த செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பயணிகள் வாகனம் மீது பாய்ந்த லொறி: - 78 பேர் பலி - 72 பேர் படுகாயம்
[Thursday 2017-07-06 08:00]

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு ஒன்றில் நிகழ்ந்த சாலை விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உள்ள பம்பரி மற்றும் இப்பி பகுதிகளுக்கு இடையே நிகழ்ந்த சாலை விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும்: - சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
[Thursday 2017-07-06 07:00]

'வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும்' என்று ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். வட கொரியா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனையை மீண்டும் மேற்கொண்டது. வட கொரியாவின் இந்தச் செயலுக்கு, அமெரிக்கா உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.


வட கொரியா தனது துணிச்சலை அமெரிக்காவுக்குக் காட்டும்: - அதிபர் எச்சரிக்கை
[Thursday 2017-07-06 07:00]

''ஆயுதச் சோதனை பேச்சுவார்த்தைக்கு வட கொரியா ஒருபோதும் உடன்படாது'' என அந்த நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதனை வட கொரியா பொருட்படுத்தாமல் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. இதற்குப் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.


மண்டை ஓடுகளாலான கோபுரம் மெக்சிகோவில் கண்டுபிடிப்பு:
[Tuesday 2017-07-04 20:00]

மெக்சிகோ தலைநகரில் பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட தேடுதலில் 676 மனித மண்டை ஓடுகளாலான கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாயன் வம்ச கால கட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்டெக் மற்றும் மெசோ அமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளது வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது.

Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா