Untitled Document
July 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome


சட்டமா அதிபரின் கைக்குள் நீதித்துறை! - ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு
[Monday 2017-07-17 09:00]

இலங்கையில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார். தனது இலங்கை பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது!
[Wednesday 2017-07-26 17:00]

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.


மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!
[Wednesday 2017-07-26 07:00]

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.


கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! - எரிபொருள் விநியோகத்தில் இறங்கியது Top News
[Wednesday 2017-07-26 07:00]

கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய கட்டிட தொகுதியை நள்ளிரவில் சுற்றி வளைத்த பெருமளவு இராணுவத்தினர் அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை, எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளனர். இந்த புதிய சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


வெலிக்கடைப் படுகொலை - நல்லூரில் நினைவு நிகழ்வு! Top News
[Wednesday 2017-07-26 07:00]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.


இலங்கையில் சாதனை படைத்த தமிழ் மருத்துவர்! - ஒருவரின் காலை இன்னொருவருக்கு பொருத்தினார் Top News
[Wednesday 2017-07-26 07:00]

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், காலை அகற்றி காலை இழந்திருந்த மற்றொருவருக்குப் பொருத்தி இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்திய - இலங்கை உடன்படிக்கையே பிரபாகரனைத் தோற்கடித்தது! - நவீன் திசநாயக்க
[Wednesday 2017-07-26 07:00]

இந்திய - இலங்கை உடன்படிக்கையினால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் தமது தந்தை காமினி திசாநாயக்க அமைச்சராக கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிராந்தி, யோசிதவை விசாரணைக்கு அழைப்பு!
[Wednesday 2017-07-26 07:00]

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடமும், அவரது மகன் யோசித ராஜபக்சவிடமும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரதான சந்தேக நபருக்கு ஆகஸ்ட் 8 வரை விளக்கமறியல்!
[Wednesday 2017-07-26 07:00]

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் யாழ். நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன். சந்தேக நபர் நேற்று நீதிவானின் இல்லத்துக்குப் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டு, முற்படுத்தப்பட்டார். அதன்போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.


காணாமல்போயுள்ள 5101 இராணுவத்தினர் மீதும் கவனம்!
[Wednesday 2017-07-26 07:00]

காணாமல்போயுள்ள 5 ஆயிரத்து 101 இராணுவத்தினர் தொடர்பிலும் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் கவனம் செலுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “சர்வதேச ரீதியில் செயற்படும் பல மனித உரிமை அமைப்புகள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் தொடர்பில் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் காணாமல்போனோர் தொடர்பான பணியகம் உருவாக்கப்படவுள்ளது.


மைத்திரியும்- ரணிலும் இணைந்து வெட்டிய கேக்! Top News
[Wednesday 2017-07-26 07:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல்வாழ்வை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கேக் வெட்டப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மஹிந்த அரசின் கடன்களை அடைக்க 3.2 ட்ரில்லியன் ரூபா தேவை!
[Wednesday 2017-07-26 07:00]

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.


வடக்கு,கிழக்கில் கண்டனப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள்! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, வடக்கு - கிழக்கு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை! -வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு
[Tuesday 2017-07-25 20:00]

விடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.


சப் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரவின் உடலுக்கு முதலமைச்சர் விக்கி அஞ்சலி! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரவின் உடலுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார். சிலாபத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஹேமசந்திரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறினார்.


இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு கிளிநொச்சி சந்தையை மூடி கண்டனம்! Top News
[Tuesday 2017-07-25 20:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து, நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று கிளிநொச்சி பொதுச் சந்தை பூட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகரில், ஏ9 வீதியில் உள்ள வியாபார நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு எதிர்ப்பு வெளிப்பபடுத்தப்பட்டது.


பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு! - விஜயகலாவின் வீடியோ குறித்தும் விசாரிக்க உத்தரவு
[Tuesday 2017-07-25 20:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.


இலங்கைக்கு அழுத்தங்கள் தொடரும்! -பிரித்தானிய எம்.பி
[Tuesday 2017-07-25 20:00]

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற குழுவின் தலைவர் போல் ஸ்கலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கு ஆதரவளிக்கப்படும்.


மலேரியா நோயைக் காவும் நுளம்புகள் இந்தியாவில் இருந்து பரவும் ஆபத்து!
[Tuesday 2017-07-25 20:00]

மலேரியா நோயைக் காவும் நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை பெருமை கொண்டிருந்தது.


வவுனியாவில் ரயில் மோதி சாரதி பலி!
[Tuesday 2017-07-25 20:00]

வவுனியா- குஞ்சுக்குளம் பகுதியில் இன்று ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். வவுனியா தனியார் பேரூந்து சாரதியும், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சாரதி – நடத்துனர் சங்கத்தின் செயலாளருமான 32 வயதுடைய மரியசெல்வம் மயூரன் என்ற இளைஞனே மரணமானவராவார்.


அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் – அமைச்சரவை பச்சைக்கொடி!
[Tuesday 2017-07-25 20:00]

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு, அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சாவகச்சேரியில் விரட்டி விரட்டிக் கொட்டிய கருங்குளவிகள்! -13 பேர் வைத்தியசாலையில் அனுமதி
[Tuesday 2017-07-25 20:00]

சாவகச்சேரி பகுதியில் கருங்குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய 13 பேர் இன்று சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வயல் பகுதியிலிருந்து பறந்து வந்த கருங்குளவிகளே பொது மக்களை விரட்டி விரட்டித் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 13 பேரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 10 பேர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. ஏனைய மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2017-07-25 20:00]

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு நெடுந்தீவிற்கு வடமேற்கே, 10 கடல் மைல்கள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


பிள்ளையான் உள்ளிட்ட 5 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2017-07-25 20:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல், எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில், இந்தச் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, சந்தேகநபர்களுக்கான விளக்கமறியலை நீதிபதி நீடித்ததுடன், வழக்கு விசாரiணையையும் ஒத்திவைத்தார்.


என்னையும் 'இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினையும்’ களங்கப்படுத்தும் பதிவுகள் கவலையளிக்கின்றன: - காசி ஆனந்தன்
[Tuesday 2017-07-25 20:00]

25.7.2017

கடந்த சில நாட்களாக என்னையும் எங்கள் 'இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினையும்’ களங்கப்படுத்தும் நோக்கோடு முகநூல்களில் வெளிவரும் பதிவுகள் கவலையளிக்கின்றன. இப்பொழுது எனக்கு 80 அகவையாகிறது. 15 அகவையில் தமிழீழ விடுதலைக் களததில் இறங்கியவன் நான். தந்தை செல்வாவின் கூட்டங்களில் சின்னஞ்சிறுவனாகக் கலந்து கொண்ட காலம் அது. கடந்த 65 ஆண்டுகள் ”தமிழீழ விடுதலை” ஒன்றையே மூச்சாகக் கொண்டு இயங்கி வருகிறவன். தந்தை செல்வாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தவன். தலைவர் பிரபாகரன் அவர்களின் ”புலிகள் அமைப்பின் அரசியல் பிரவு தலைமைச் செயற்குழுவிலும் உறுப்பினராக இருந்தவன். ”இறையாண்மையுள்ள தமிழீழ அரசை” அமைப்பதே என் ஒற்றைக் கொள்கையாகும். இதில் எந்தச் சறுக்கலுக்கும் இடமில்லை.


மச்சான் சுடச்சொன்னார் சுட்டேன்: - சந்தேகநபர் வாக்குமூலம்
[Tuesday 2017-07-25 12:00]

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் ( முதலில் கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார்.


பெற்றோலிய கூட்டுத் தாபன ஊழியர்களின் போராட்டத்தினால் நள்ளிரவு வரை முண்டியடித்த வாகன சாரதிகள்! Top News
[Tuesday 2017-07-25 07:00]

பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால் நாடெங்கும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நேற்று மாலை செய்தி பரவியதும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனச் சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.


வடக்கில் மாத்திரம் ஐந்து இலட்சம் பேர் வரை வரட்சியால் பாதிப்பு!
[Tuesday 2017-07-25 07:00]

வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாகவும் நாடு முழுவதும் மூன்று இலட்சத்து 3 ஆயிரத்து 748 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 55 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


கிளிநொச்சியில் இன்று கடையடைப்பு!
[Tuesday 2017-07-25 07:00]

நல்லூரில் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கிளிநொச்சியில் இன்று வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுடன், கிளிநொச்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் கறுப்பு கொடிகள் பறக்க விடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா