Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome


வித்தியா கொலை வழக்கு- அரசதரப்பின் தொகுப்புரை!
[Wednesday 2017-09-13 07:00]

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நேற்று, வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.


வடக்கில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
[Tuesday 2018-01-16 09:00]

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்து 925 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.அதாவது 68.37 வீதத்தினர் தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம் தோற்றியோரில் 816 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை.


யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு! - இருவர் படுகாயம்
[Tuesday 2018-01-16 09:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்கள் ஆனைக்கோட்டை வராகி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியிலும், கொக்குவில் பூநாரிமடத்தை அண்மித்த பகுதியிலும் நடந்துள்ளன. முகத்தைக் கறுப்புத் துணிகளால் மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே வாள்வெட்டில் ஈடுபட்டனர் . அந்தப் பகுதியில் வான், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை அந்தக் கும்பல் தாக்கியது. அதில் இருவர் காயமடைந்தனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்
[Tuesday 2018-01-16 09:00]

இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­தி­யாவின் சட்டம் நீதி­த்­துறை தகவல் தொழில்­நுட்பம் மற்றும் இலத்­தி­ர­னியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரி­வித்தார்.


கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் வேறோரு கட்சியின் வேட்பாளர் கலகம்!
[Tuesday 2018-01-16 09:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒருவித குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன! Top News
[Tuesday 2018-01-16 09:00]

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான வழக்கு விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றன. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேற்று தத்தமது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.


1000 கோடி ருபா பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு!
[Tuesday 2018-01-16 09:00]

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 928 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் அழிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம்! - சுமந்திரன்
[Tuesday 2018-01-16 09:00]

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாயின் தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். எது நடந்தாலும் தேசிய அரசாங்கம் நீடித்திருக்கவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மடுரோட் விபத்தில் ஒருவர் காயம்!
[Tuesday 2018-01-16 09:00]

மன்னார் - கொழும்பு பிரதான வீதியில் மடுரோட் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அதே வழியில் சென்ற கனரகவாகனம் முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த கனரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் மடு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


புதிய வகை ஏரிஎம் இயந்திரங்கள் அறிமுகம்!
[Tuesday 2018-01-16 09:00]

இலங்கையில் புதிய வகை ஏரிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நாணயத்தாள்களுக்கு பதிலாக சில்லறையை வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சில்லறைகளுக்கு காணப்படும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


ஜனாதிபதியின் மீது சந்தேகம் கிளப்புகிறது ஜேவிபி!
[Tuesday 2018-01-16 09:00]

19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அல்லது ஐந்து வருட பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரியிருக்கலாம். இதனை விடுத்து தேர்தல் நெருங்கும்போது பதவிக்காலம் பற்றிக் கோரியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து வதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.


இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்
[Monday 2018-01-15 19:00]

பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்­­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார்.


வல்வெட்டித்துறையில் பட்டம் பார்க்கப் போன அமைச்சரை பரலோகத்துக்கு அனுப்ப முயன்ற விமானி!
[Monday 2018-01-15 19:00]

அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி விமான நிலையத்துக்கான வழி தெரியாதமையால், கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பலாலி சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


இலங்கையின் புதிய வரைபடம் தயாரிப்பு!
[Monday 2018-01-15 19:00]

சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையின் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தினால் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், புதிய வரைப்படத்தில் இலங்கையின் துறைமுக நகரமும் உள்ளடக்கப்படவுள்ளது.


சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்த ரயில்! Top News
[Monday 2018-01-15 19:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45. மணியளவில் யாழ். நோக்கிப் புறப்பட்ட அதிவேக சொகுசு ரயிலிலேயே, இத்தீவிபத்து ஏற்பட்டது.


ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்! - உயர்நீதிமன்றம் அறிவிப்பு
[Monday 2018-01-15 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவடைய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என அறிவிக்குமாறு ஜனாதிபதியால் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.


17 வயது தமிழ் இளைஞன் கனடாவில் கொலை! - 16 வயது நண்பன் கைது
[Monday 2018-01-15 19:00]

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்!
[Monday 2018-01-15 19:00]

கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா 30,000 ரூபா அபராதம் விதித்தார்.


இரணைமடுவில் 98 பானைகளில் பொங்கல்! Top News
[Monday 2018-01-15 19:00]

கிளிநொச்சி- இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டு 98 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட வழிபாட்டில், இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.


மாட்டுப் பட்டியில் இளைஞனின் சடலம் மீட்பு!
[Monday 2018-01-15 19:00]

மட்டக்களப்ப - கரடியனாறு பொலிஸ் பிரிவின் காரைக்கட்டு பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் இளைஞன் ஒருவரின் சடலத்தை, இன்று காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர், காரைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அழகையா அற்புதன் (வயது 20) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


19 வேட்பாளர்கள் கைது!
[Monday 2018-01-15 19:00]

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரையும் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்கள் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைபாடுகள் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.


சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2018-01-15 19:00]

பொங்கல் பண்டிகையினை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊருராகச் சென்று மக்களுக்கு தம் உதவிகளைச் செய்தனர் சர்வதேச இந்துஇளைஞர் பேரவையினர். 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான அனைத்து பொதிகளுடனும் அவரவர் ஊர்தேடிச் சென்று வழங்கப்பட்டது.


வவுனியா- குருமன்காடு பிள்ளையார் கோவிலில் கொள்ளை!
[Monday 2018-01-15 19:00]

வவுனியா குருமன்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை என்பன இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸாரிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.


யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தேர்தல் திணைக்களம் தடை!
[Monday 2018-01-15 09:00]

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், 'இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள்' எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் , இரண்டு கல்வியியலாளர்கள் கருத்துரை வழங்கவிருந்த கலந்துரையாடலுக்குத் தேர்தல் திணைக்களம் தடைவிதித்துள்ளது.


ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே! - உச்சநீதிமன்றம்
[Monday 2018-01-15 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று உச்சநீதிமன்றம், ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது. தமது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.


வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா! Top News
[Monday 2018-01-15 08:00]

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.


வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதி சுற்றறிக்கை!
[Monday 2018-01-15 08:00]

வட மாகாண கல்வி அமைச்சால், வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதி தொடர்பான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


புதிதாகப் பதவியேற்ற இராஜாங்க அமைச்சர் விபத்தில் படுகாயம்!
[Monday 2018-01-15 08:00]

அண்மையில் மகிந்த அணியில் இருந்து அரசதரப்புக்குத் தாவி, இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற ஸ்ரியானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயங்களுக்குள்ளான அமைச்சர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அமைச்சருக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.


புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டது ஏன்? - அங்கஜன்
[Monday 2018-01-15 08:00]

தமிழ் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் நித்திரையா தமிழா எழுந்து வாடா .. ” எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுகமும் , தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதன் போது ஆரம்பத்தில் ” நித்திரையா தமிழா எழுந்து பாரடா … ” எனும் பாடல் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட எழுச்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா