Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome


நிழல்கள் தொண்டு அமைப்பு - UK - நிழலாய் என்றும் உதவுவோம் Top News
[Wednesday 2017-09-13 07:00]

ஓகஸ்ட் - 2017 கொடுப்பனவுகள்.. பயனாளிகள் விபரங்கள் ; கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்வியை மேற்கொண்டு செல்வதற்கு இயலாமல் இருக்கும் இரு மாணவர்களுக்கு இந்த மாதம்.. அவர்கள் யெரில் வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் தலா RS. 10000-00 /= வைப்பில் இடப்பட்டுள்ளது.


முதலமைச்சருக்கு எதிரான டெனீஸ்வரனின் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Tuesday 2017-11-21 18:00]

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையைத் தொடருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்று டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோத்தா விரைவில் கைது?
[Tuesday 2017-11-21 18:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார்.


தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை, தேசிய கொடியை ஏற்ற மறுத்தது தான் தவறா? - சிவாஜிலிங்கம்
[Tuesday 2017-11-21 18:00]

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தப்பியோடிய குற்றத்துக்காக ஆவா குழு நிசா விக்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!
[Tuesday 2017-11-21 18:00]

நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் நிசா விக்டருக்கு, ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், இன்று தீர்ப்பளித்தார். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான நிசா விக்டர், அந்த வழக்கில் முற்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.


மன்னார் காணிகள் விடுவிப்பு குறித்து ருவான் விஜேவர்த்தனவுடன் பேச்சு!
[Tuesday 2017-11-21 18:00]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை, மன்னார் மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, செபஸ்டியர் பேராலய பங்குத்தந்தை பெட்டி சோசை, மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவர் கனடி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


வாள்வெட்டு சந்தேக நபர்கள் 81 பேர் இதுவரை கைது! - 75 பேர் பிணையில் விடுவிப்பு
[Tuesday 2017-11-21 18:00]

அண்மைக் காலத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்​ பேரில், இதுவரை 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


சர்வேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கை ஏனையவர்களுக்கு பாடமாக இருக்கும்! - ஆளுனர்
[Tuesday 2017-11-21 18:00]

தேசியக்கொடியை ஏற்றாத விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


கடற்படைத் தளபதிக்கு சேவை நீடிப்பு!
[Tuesday 2017-11-21 18:00]

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவின் பதவிக் காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியுடன் 55 வயதை பூர்த்தி செய்த இவரது பதவிக்காலம் ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க இலங்கை கடற்படையின் இரண்டாவது கடற்படைத்தளபதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.


தேசியக் கொடிக்கு அதிருப்தியை காட்டி சிலர் போலி தேசியவாதத்தை வெளிப்படுத்த முயற்சி! - சுமந்திரன்
[Tuesday 2017-11-21 18:00]

தேசியக் கொடி தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதிருப்தி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


உத்தரதேவி மீது சுன்னாகத்தில் கல்வீச்சு!
[Tuesday 2017-11-21 18:00]

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த உத்தரதேவி ரயில் மீது, நேற்று இரவு, சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 7.30 மணியளவில், இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த சுன்னாகம் பொலிஸார், சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் வைத்தே, இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.


மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Tuesday 2017-11-21 18:00]

மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மீனவர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.


மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!
[Tuesday 2017-11-21 09:00]

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.


ஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்!
[Tuesday 2017-11-21 08:00]

இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


உலகத்தமிழர் பேரவையின் திசைமாறிய பயணம்: - அவுஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு..!! Top News
[Tuesday 2017-11-21 08:00]

தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய உலகத்தமிழர் பேரவையானது, சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று, தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக, அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ள முக்கிய கூட்டம் ஒன்றில் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


காலியில் தொடரும் பதற்றம் - வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Tuesday 2017-11-21 08:00]

காலி அருகே அமைந்துள்ள முஸ்லிம் வீடொன்றின் மீது இன்று காலை பெற்றோல் குண்டொன்று வீசப்பட்டுள்ளது. தூவ பிரதேசத்தின் சமகிவத்தை குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.கடந்த வௌ்ளிக்கிழமை காலியில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் காரணமாக காலி மாவட்டத்தில் மீண்டும் அச்சமான சூழல் தோன்றியுள்ளது.


தமிழரசுக் கட்சிக்குத் தாவினார் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்!
[Tuesday 2017-11-21 08:00]

முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று முன்தினம் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் எரிபொருள் நிலையங்களை அரசுடமையாக்குவேன்! - அர்ஜூன எச்சரிக்கை
[Tuesday 2017-11-21 08:00]

தனியார் எரிபொருள் நிலையங்கள் சில, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், எரிபொருளை மறைத்து வைத்துக் கொண்டு விநியோகிக்காமல் இருக்கின்றன. அத்தகைய நிலையங்கள் தொடர்பில், எதிர்வரும் 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை அரசுடமையாக்கவும் தீர்மானித்துள்ளோம் என்று, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் தாரா வேட்டையும் ஆரம்பம்!
[Tuesday 2017-11-21 08:00]

யாழ்ப்பாணத்தில் தாரா குழுவை சேர்ந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டு, கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


மஹிந்த- மைத்திரி சந்திப்பு நடக்கவில்லை!
[Tuesday 2017-11-21 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், அண்மையில் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!
[Tuesday 2017-11-21 08:00]

வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள, முதல் மாவீரர் லெப்.சங்கர் எனப்படும் சத்தியநாதனின் சிலை அமைந்திருந்த இடத்தில், இன்று மாலை மணிக்கு அகல் விளக்கு ஏற்றப்பட்டு சத்திய நாதனின் உருவப் படம் திறந்து வைக்கப்படவுள்ளது.மேற்குறித்த நிகழ்வு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவுக்குப் புறப்பட்டார் ரணில்!
[Tuesday 2017-11-21 08:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் புதுடெல்லியில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், அவர் இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த்தையும் சந்திக்கவுள்ளார்.


மட்டக்களப்பில் இளைஞன் வெட்டிக் கொலை!
[Tuesday 2017-11-21 08:00]

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை கற்பனை - நீலமடு பகுதியில் நேற்று இரவு ஏழு மணியளவில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டிருந்த நிலையில், இதனை அவதானித்துக்கொண்டிருந்த அருகில் இருந்த இளைஞர்கள் இருவர் அதனை தடுக்க முற்பட்டுள்ளனர்.


உடுத்துறை துயிலுமில்லத்தில் 4 மாவீரர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்றுவார்! - ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு
[Monday 2017-11-20 19:00]

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தினத்தன்று, மண்ணின் விடுதலைக்காக நான்கு பிள்ளைகளை வழங்கிய தாயொருவர் பொதுச்சுடரை ஏற்றிவைக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் எதிர்வரும் 27ம் திகதி வழமை போன்று மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல்கள் நடைபெறுமென தெரிவித்தனர்.


நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்! -சம்பந்தன்
[Monday 2017-11-20 19:00]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில், நீதியமைச்சர் தலதா அத்துகோரல கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நீதியமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.


ரணிலிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை! Top News
[Monday 2017-11-20 19:00]

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும்ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று முற்பகல் 10 மணியளவில், ஆணைக்குழுவில் முன்னிலையான பிரதமர், 11.30 மணியளவில் விசாரணைகள் நிறைவுற்று, அங்கிருந்து வெளியேறினார்.


காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பம்!
[Monday 2017-11-20 19:00]

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர் பத­விக்கு 95 பேர் விண்­ணப்­பித்துள்­ள­னர். அவர்­க­ளில் பொருத்­த­மா­ன­வர்­க­ளைத் தேர்வு செய்­யும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­து. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்தை நிறு­வு­வ­தற்கான அனைத்­துப் பணி­க­ளும் முடி­வ­டைந்­துள்­ளன. இந்­தப் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை அர­ச­மைப்­புப் பேர­வையே நிய­ம­னம் செய்­ய­வேண்­டும்.


புதிய தேசியக்கொடிக்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம்!
[Monday 2017-11-20 18:00]

புதிய தேசியக்கொடி ஒன்றை கொண்டு வருவதற்காக போராடவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாக புதிய தேசியக்கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தினால் நாட்டிற்குள் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கில் இடைக்கால அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது கூட்டமைப்பு!
[Monday 2017-11-20 18:00]

புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்களை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளது. திருகோணமலை நகரமண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கும்; கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கும்; மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா