Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome


கங்காரு இறைச்சி யை அதிகம் உண்ணுங்கள்: - மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தல்
[Wednesday 2017-09-13 17:00]

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியவின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.


பொருளாதார தேவைகளுக்காக வயதான ஆண்களுடன் டேட்டிங்: - இணையதளத்தில் குவிந்த பிரித்தானிய மாணவிகள்
[Tuesday 2018-01-16 16:00]

பிரித்தானியாவில் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவிகள் தங்களது படிப்பு செலவு மற்றும் இதர பொருளாதார தேவைகளுக்காக, SeekingArrangement.com எனும் இணையதளத்தை நாடுகின்றனர்.அதாவது, இந்த இணையதளம் டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வயதான நபர்களுடன் இப்பெண்கள் டேட்டிங் செல்வதால் அவர்கள் 'sugar daddies' என அழைக்கப்படுகின்றனர். அதே போன்று இந்த மாணவிகள் 'sugar baby' என அழைக்கப்படுகின்றனர்.


300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை!
[Tuesday 2018-01-16 16:00]

17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாடு டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டின் காலனி (அடிமை) நாடாக இருந்து வந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் விலையுயர்ந்த தேயிலை, காபிக்கொட்டை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை கடந்த 17-ம் நூற்றாண்டுவாக்கில் கட்டியது.


சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி!
[Tuesday 2018-01-16 16:00]

சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அனிமேஷன் திரைப்படங்கள் திரைப்படவுள்ளன. மன்னர் முகமத் பின் சல்மான் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சவுதியில் திரைப்படங்களை திரையிடுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கனடாவில் ஹிஜாப் அணிந்த சிறுமி தாக்கப்பட்டாரா? - விளக்கம் அளித்த பொலிஸ்
[Tuesday 2018-01-16 09:00]

கனடாவின் டொரண்டோவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி தாக்கப்பட்டதாகவும், கத்திரிக்கோலால் அவளது ஹிஜாப் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதை கனடா நாட்டு அரசியல்வாதிகள் வன்மையாகக் கண்டித்திருந்தனர், இதற்கு கனடா பிரதமரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.


வருங்கால பிரித்தானியா இளவரசி மெர்க்கலின் கவர்ச்சி போட்டோ ஷூட்!
[Tuesday 2018-01-16 09:00]

பிரபல அமெரிக்க பத்திரிக்கைக்கு கடைசியாக மேகன் மெர்க்கல் நடித்து கொடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.பிரபல நடிகையும், மொடலுமான மேகன் மெர்க்கலும், பிரித்தானிய இளவரசர் ஹரியும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் மே மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் Good Housekeeping பத்திரிக்கையின் அமெரிக்க பதிப்புக்காக மெர்க்கல் கவர்ச்சியான போட்டோ ஷூட்டில் நடித்திருந்தார்.


கோல்டன் குளோப் விருது வென்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் மீது செக்ஸ் புகார்!
[Tuesday 2018-01-16 09:00]

சிறந்த ஹாலிவுட் சினிமா படங்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் நடந்தது.அதில் சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகருக்கான விருது ஆசிஷ் அன்சாரிக்கு வழங்கப்பட்டது.இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவரது தந்தை டாக்டர் சவுகத் அன்சாரி, இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.


வருங்கால பிரித்தானிய இளவரசியிடம் மன்னிப்பு கோரிய மொடல் அழகி!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கலை கருப்பித்தனவர் என இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த மொடல் அழகி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.UK Independence Party- யின் தலைவராக இருக்கும் Henry Bolton(54) - யின் காதலியும், மொடலுமான Jo Marney, இனவாதத்தை தூண்டும் வகையில் மேகன் மெர்க்கல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.


கலிபோர்னியா வில் சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்!
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.


நான் இன வெறியன் அல்ல: - டொனால்டு டிரம்ப்
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து பேசினார். மேலும் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் மற்றும் ஹைதி நாட்டில் இருந்து வந்து வெளியேறியவர்களையும் குறிப்பிட்டார்.


300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்தவரின் ஆவியை திருமணம் செய்த பிரித்தானியா பெண்!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த மனிதரின் ஆவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்த பெண் Amanda Teague(வயது 45), ஐரிஷ் கடற்கரையில் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் புடைசூழ 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஹைதியின் கடற்கொள்ளையரான ஜாக் என்பவரின் ஆவியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த 1700 ஆண்டுகளில் வசித்து தூக்கிலிடப்பட்டவர் தான் ஜாக், 2014ம் ஆண்டு படுக்கையறையில் இருந்த போது தன்னுள் ஆவி வந்ததை உணர்ந்திருக்கிறார் Amanda Teague.அன்றிலிருந்து ஆவியுடன் பேச ஆரம்பித்தபோது சுவாரசியமாக இருந்ததாம்,


வெடித்து சிதறும் எரிமலை: - பப்புவா நியூகினி தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
[Monday 2018-01-15 08:00]

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் தேதி முதல் குமுறி கொண்டிருந்தது.


ஓடுதளத்திலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்த விமானம்: - அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய பயணிகள்
[Monday 2018-01-15 08:00]

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷடவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை. துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.


பொங்கலோ பொங்கலோ: - சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சிங்கப்பூர் பிரதமர்
[Sunday 2018-01-14 17:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லீ சியன் லூங் ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத் தெரிவித்து இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
[Sunday 2018-01-14 17:00]

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: - 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம்
[Sunday 2018-01-14 17:00]

இனவெறி குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.


போர்த்துகல்: ஓய்வு விடுதியில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு
[Sunday 2018-01-14 13:00]

போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர்.

 

தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி!
[Sunday 2018-01-14 12:00]

தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்ற மர்ம நோய் தாக்கியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.


தமிழ்ச் சமூகத்தால் நாங்கள் பெருமையடைகிறோம்: - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து
[Sunday 2018-01-14 12:00]

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


பாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி படுகொலை: - நியாயம் கேட்டு மகளுடன் டி.வி.யில் தோன்றிய செய்தி வாசிப்பாளர்
[Friday 2018-01-12 18:00]

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் கடந்த 4-ம் தேதி ஜைனப் அன்சாரி என்ற 7வயதுச் சிறுமி ஒருவர் புனித குர்ஆன் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் மர்மநபரால் கடத்தப்பட்டார். கடந்த 9-ந்தேதி அந்தச் சிறுமி உடலில் பலத்த காயங்களுடன், குப்பை கிடங்கில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர், புனித ஹஜ் பயணத்துக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.


பாரீஸ் ஹோட்டலில் ரூ.35 கோடி நகைகள் கொள்ளை!
[Friday 2018-01-12 13:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ‘ரேஷா’ உள்ளிட்ட பல நகைக்கடைகளும், ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.இந்த நிலையில் நேற்று திடீரென அங்கு கோடாரி மற்றும் துப்பாக்கியுடன் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். கண்மூடித்தனமாக சுட்டு கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர்.


விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கப்படும்: - ஈக்வடார் அரசு
[Friday 2018-01-12 08:00]

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது.விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நாட்டின் பல்வேறு ரக்சியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுடுத்தியவர்.பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இரண்டு ஆண்டாக தஞ்சம் அடைந்தார்.


சிறுவனுக்கு சிகரெட் விற்க மறுத்த இந்தியர் அடித்து கொலை: - இங்கிலாந்தில் சம்பவம்
[Friday 2018-01-12 08:00]

இங்கிலாந்து வாழ் இந்தியர் விஜய் படேல் (49). இவர் லண்டனில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அங்குள்ள மலைப்பகுதியில் கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று இவரது கடைக்கு 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் வந்தனர் அவர்கள் புகைக்க சிகரெட் கேட்டனர். சிறுவர்கள் என்பதால் சிகரெட் விற்பனை செய்ய விஜய் படேல் மறுத்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து விஜய் படேலை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டனர்.


வெளுத்த தோல் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடையாது: - கானா அரசு
[Thursday 2018-01-11 17:00]

வெளுத்த தோல், தோல் சுருக்கங்கள், அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடையாது என கானா நாடு அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இந்நிலையில் அந்நாட்டு குடியேற்றத்துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பானை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 500 பணியிடங்களுக்கு சுமார் 84000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே வெளுத்த தோல், தோல் சுருக்கங்கள், அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கும் பெண்கள் பணியில் சேர முடியாது என அந்நாட்டு குடியேற்றத்துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சவுதியில் 10000 ஆயிரம் பெண்களை கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை!
[Thursday 2018-01-11 17:00]

சவுதி அரேபியாவில் 10000 ஆயிரம் பெண்களை கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு செப்டம்பரில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது, மேலும் லொறி, பைக் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்? - டிரம்ப்
[Thursday 2018-01-11 14:00]

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.அதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், "என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.


வடகொரியா அதிபரை சந்தித்துப் பேச தயார்: - தென்கொரிய அதிபர்
[Thursday 2018-01-11 14:00]

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது.2 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முதன்முதலாக நடந்துள்ள இந்த சந்திப்பு இணக்கமாக அமைந்தது. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்குகிற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு அணியை அனுப்ப வடகொரியா ஒப்புக்கொண்டது.


இங்கிலாந்தில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: -குற்றவாளியுடன் சிரித்து பேசும் புகைப்படம் வெளியானது
[Thursday 2018-01-11 09:00]

இங்கிலாந்தில் சினிமா பாணியில் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக கொலைக்காரனுடன் இளம்பெண் இயல்பாக சிரித்துகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் West Midlands பகுதியை சேர்ந்த ஆஷ்லி ஃபோஸ்டர்(வயது 24), மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.இவர் மீது மேகன் பில்ஸ்(வயது 17) என்பவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி இக்கொடூர குற்றத்தை புரிந்துள்ளார் ஆஷ்லி ஃபோஸ்டர்.


பாகிஸ்தானில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை!
[Thursday 2018-01-11 09:00]

பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் சமீப காலங்களில் தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் உண்டான கலவரங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.குரான் வகுப்புக்குச் சென்றபோது ஜைனப் காணாமல் போனார்புதனன்று, கசூரில் உள்ள காவல் துறை தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அந்த இருவரும் கொல்லப்பட்டனர்.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா