Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome


தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்? - சமூக வலை தளங்களில் தீயாய் பரவும் செய்தி
[Wednesday 2017-09-13 17:00]

நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். தினந்தோறும் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வரும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திருந்தார்.


நடிகர்கள் தங்களது புகழை வைத்து அரசியலுக்கு வந்தால் வீழ்த்தப்படுவார்கள்: - திருமுருகன் காந்தி
[Monday 2017-09-25 07:00]

“நடிகர்கள் தங்களது புகழை வைத்து அரசியலுக்கு வந்தால் வீழ்த்தப்படுவார்கள்” என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக, மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற செய்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை!
[Monday 2017-09-25 07:00]

கடன் தொல்லை காரணமாக மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விஷம் குடித்தனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மதுரை, யாகப்பா நகர் சவுராஷ்டிராபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (48). இவரது தம்பி குறிஞ்சிகுமரன் (43). இருவரும் அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நர்சரி பள்ளி நடத்தி வந்தனர்.


ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: - நீதிமன்றம் உத்தரவு
[Monday 2017-09-25 07:00]

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு டெல்லியை சேர்ந்த 5 வயது சிறுமி, அவரது வீட்டினை மேல்பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த விஜய் குமார்(74) என்பவரால் கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார்.


யோகாவை உலகிற்கு வழக்கியவர்கள் தமிழர்கள்: - சீமான்
[Sunday 2017-09-24 17:00]

யோகா தமிழர்களின் கலை. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.


ஓணம் பம்பர் லாட்டரி: - ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு
[Sunday 2017-09-24 17:00]

கேரள அரசின் ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசான 10 கோடி பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கு கிடைத்தது. கேரள அரசு லாட்டரி சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 10 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லாட்டரிக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசு மலப்புரம் மாவட்டத்தில் விற்பனையான டிக்கெட்டிற்கு கிடைத்தது. இந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாமல் இருந்தது.


டீச்சரை பின்தொடர்ந்த குற்றத்திற்காக 62 வயது தொழிலதிபருக்கு சிறை!
[Sunday 2017-09-24 17:00]

மும்பையில் தொழிலதிபராக இருக்கும் 62 வயது முதியவருக்கு கடந்த 2 வருடங்களாக 55 வயது டீச்சரை பின்தொடர்ந்த குற்றத்திற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இஸ்டேகர் அன்சாரி(62) என்பவர் சேவ்ரி பகுதியில் டீச்சராக பணியாற்றும் ரேஷ்மா(55) என்பவரை ஹார்பர் ரயில் நிலையத்தில் இருந்து அவர் செல்லும் பள்ளிக்கூடம் வரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். கடந்த 2 வருடங்களாக இவ்வாறே செய்துள்ளார், ஒருமுறை முதியவரை வழிமறித்த டீச்சர் எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள், உங்களுடைய வயதிற்கு நீங்கள் செய்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


65 வயது ஷேக்கை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி: - பெற்றோருடன் செல்ல மறுப்பு
[Sunday 2017-09-24 08:00]

65 வயது ஷேக்கை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி தனது வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவை சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(60) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.


ரோஹிங்கியா முஸ்லீம்களை அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்: - சீமான்
[Sunday 2017-09-24 08:00]

திபெத்திய அகதிகளை ஏற்றது போல மியான்மரிலிருந்து அடைக்கலம் புகும் ரோஹிங்கியா முஸ்லீம்களையும் இந்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மியான்மரில் தாக்குதலுக்கு ஆளாகும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மீண்டும் டெல்லியில் பயங்கரம்: - பெண் ஊழியரை காரில் கடத்தி பலாத்காரம்
[Sunday 2017-09-24 08:00]

பிபீஓ பெண் ஊழியரை காரில் கடத்திய 2 பேர் கூட்டு பலாத்காரம் செய்து, ஓடும் காரிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் டெல்லியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அருகே நொய்டா செக்டார் 36வது பகுதியில் வசிக்கும் 24 வயது பெண் ஒருவர் பிபீஓ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் நொய்டா கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேலைக்கு செல்ல கம்பெனி காருக்காக காத்திருந்தார்.


ஐ மிஸ் யூ குறுஞ்செய்தியால் காதலனின் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்!
[Sunday 2017-09-24 08:00]

பெங்களூரை சேர்ந்த அர்ஜூன், திவ்யா ஆகிய இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நாட்களாக தனது காதலியுடன் பேசுவரை அர்ஜூன் குறைத்துக்கொண்டுள்ளார்.


வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!
[Sunday 2017-09-24 08:00]

இவருக்கும் வேணுகோபால் (25) என்பவருக்கும் கடந்த யூன் மாதம் 28-ம் திகதி திருமணம் நடந்தது.திருமணத்தின் போது வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் ஒரு பைக் வாங்கி தருவதாக பெண் வீட்டார் தெரிவித்த நிலையில் நகையை மட்டும் போட்டு, பைக் பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, மனைவியை வேணுகோபால் பைக் வாங்கி வரும்படி தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது.


ராகுலுடன் நேற்று இரவு: - வைரலாகும் ராகுல் காந்தியுடன் மர்மப் பெண்ணின் புகைப்படம்
[Saturday 2017-09-23 18:00]

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் அமெரிக்கப் பயணம் தொடர்பான சர்ச்சையை அதிகமாக்கியிருக்கிறது ஒரு புகைப்படம்.குறித்த புகைப்படத்தை செப்டம்பர் 14 ஆம் திகதி தொடர்புடைய நதாலியா ராமோஸ் என்பவரே தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேறியுள்ளார். அதில், 'வெளிப்படையான, அறிவார்ந்த ராகுலுடன் நேற்று இரவு' என்று அதில் எழுதியிருக்கிறார்.


பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டதாக இதுவரை எந்த அரசாணையும் வெளியிடவில்லை: - சி.வி.சண்முகம்
[Saturday 2017-09-23 17:00]

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி பரோல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.


உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு!
[Saturday 2017-09-23 17:00]

உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார். கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உலகளவில் சாதனை படைக்கும் 101 அடி துர்கை அம்மன் மூங்கில் சிலை!
[Saturday 2017-09-23 17:00]

அசாம் மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அம்மாநிலத்தின் கவுகாத்தி நகரில் துர்கா பூஜைக்காக 101 அடியில் துர்கை அம்மன் சிலை மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அதனை புகழ்பெற்ற கலை இயக்குனர் நுரூதின் அக்மத் தலைமையிலான 44 கலைஞர்கள் கொண்ட குழு வடிவமைத்தது. ஆரம்பத்தில் 110 அடி உயரத்தில் செய்ய திட்டமிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.


இளைஞரின் வயிற்றில் இருந்த 5 இரும்பு கம்பிகள் அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!
[Saturday 2017-09-23 17:00]

இரும்பு கம்பியை விழுங்கி வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக கம்பிகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் திலீப் (19). வாணியம்பாடியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக செப்டம்பர் 4ம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த குடல்,


சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்கள்: - காப்பாற்றாமல் வீடியோ எடுத்ததால் பலியான அவலம்
[Saturday 2017-09-23 17:00]

ஆந்திராவில், 4 வயது சிறுவனை வெறி நாய்கள் கடித்து குதறியபோது காப்பாற்றாமல், பொதுமக்கள், மொபைல்போனில் வீடியோ எடுத்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய்கள், திடீரென, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கடித்து குதறின. அவ்வழியே சென்ற பொதுமக்கள், சிறுவனை மீட்காமல், நாய்கள் கடித்து குதறும் கொடூர சம்பவத்தை, தங்கள் மொபைல்போனில் படம் எடுத்தனர்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசவுள்ள கமல்!
[Saturday 2017-09-23 17:00]

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கமல் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் நடிகர் கமல் தமிழக அரசை விமர்சனம் செய்து வந்ததால், அரசிற்கும் கமலுக்கும் அண்மை காலங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.


400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடிய வகையில் மனிதன் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது: - யோகா குரு ராம்தேவ்
[Friday 2017-09-22 19:00]

யோகா குரு ராம்தேவ் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மனிதனின் உடல் 400 வருடங்கள் வாழக்கூடியது என்று கூறினார்.மேலும் இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் ‘‘400 ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் மனித உடல் தகுதியானது. ஆனால், அந்த உடலை நாம் நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் தொந்தரவு செய்து வருகிறோம்.


கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால் தள்ளாடும் சென்னை!
[Friday 2017-09-22 18:00]

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி. கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.


சொத்துக்காக தந்தையை கூலிப்படையைக் கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற மகன்கள்!
[Friday 2017-09-22 17:00]

சொத்துப் பிரச்னையால் தாய்-தந்தையைக் கொள்வதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதையும் மிஞ்சும் அளவுக்கு கணவனை... மனைவியும் மகனும் சேர்ந்து, கூலிப்படையைக்கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


வைரலாகும் விஜயகாந்தின் புதிய கெட்டப்!
[Friday 2017-09-22 17:00]

அனல் பறக்கும் அடுக்கடுக்கான வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கேப்டனாக அதகளம் செய்துகொண்டிருந்த விஜயகாந்த், கடந்த 2005-ம் ஆண்டு அரசியல் பிரவேசம் எடுத்தார். பின்னர் 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அவர் விருத்தாசலம் தொகுதியின் எம்.எல்.ஏ ஆனார். தே.மு.தி.க சார்பில் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது விஜயகாந்த் மட்டும்தான். களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 10 சதவிகித வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்குப் பயம் காட்டினார்.


ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த தமிழக இளைஞர்: - தாய் கதறல்
[Friday 2017-09-22 08:00]

கடந்த மாதம் காணாமல் போன இளைஞர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ள நிலையில், இளைஞரின் தாய் மகனை வீட்டிற்கு திரும்பி வந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நஜீப் (23), இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.


ஈழ மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன்: - கமல்ஹாசன்
[Friday 2017-09-22 08:00]

இந்திய சினிமாவில் பல சிகரம் தொட்ட நடிகர் கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் அடுத்து வரும் தமிழக முதல்வர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.


கமலுடன் இணையமாட்டேன்: - குஷ்பு பேட்டி
[Thursday 2017-09-21 18:00]

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இணையவிருக்கிறார் என்ற செய்தியும் அரசியல் களத்தை சற்று பரபரப்பாக்கியுள்ளது.மேலும் அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.


ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள்: - கமல்ஹாசன்
[Thursday 2017-09-21 18:00]

சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-


டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவிய 3 பெண்கள்!
[Thursday 2017-09-21 07:00]

கேரளாவில் 3 பெண்கள் ஒன்று சேர்ந்த உபேர் டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவி, அவரை உடல் ரீதியாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.கொச்சியை சேர்ந்த ஏஞ்சல் மேரி, கிளாரா, ஷீஜா ஆகிய 3 பெண்கள் உபேர் டாக்ஸியை ஓன்லைன் மூலம் புக் செய்துள்ளனர்.டாக்ஸியில் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதியுள்ளது என்று கூறியதால், நாங்கள் 3 பேரும் பகிர்ந்துகொள்கிறோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர்.


சொந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை: - நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Thursday 2017-09-21 07:00]

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் அருகே மனநலம்குன்றிய மகளை, தந்தையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிகேசவன் என்பவரின் மகள் கௌசல்யா.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா