Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நேரம் வரும் போது, திருமணச் செய்தியை நானே அறிவிப்பேன் - சமந்தா
[Monday, 2013-05-20 18:56:56]

கோலிவுட்டில் எங்கு பார்த்தாலும் சித்தார்த் - சமந்தா காதல் கிசிகிசுக்கள் தான். இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சமந்தா எந்த புது படங்களையும் ஒத்துக் கொள்ளாத காரணத்தால், விரைவில் திருமணம் நடக்க போவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நாக சைதன்யா உள்ளிட்டோருடன் நடிக்கும் படங்கள் உட்பட மூன்று படங்கள் என் கைவசம் உள்ளன. தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படங்களை முடிப்பதற்கே, இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதனால் தான், இந்தாண்டில் வேறு படங்களை ஒத்துக் கொள்ளவில்லை. இதற்கும், திருமணத்திற்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நேரம் வரும் போது, திருமணச் செய்தியை நானே அறிவிப்பேன் என டென்ஷனுடன் கூறுகிறார் சமந்தா.


சிம்புவை புரட்டிப்போட்ட ஹன்சிகா!
[Monday, 2013-05-20 18:50:42]

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை பார்ப்பவர்களெல்லால் இது நம்ம சிம்புதானா..? என கேட்கும் அளவுக்கு சாந்தமாக மாறிவிட்டார். அலட்டல் இல்லை. தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில்லை. யாரையும் எடுத்தெரிந்து பேசுவது, கோபப்படுவது என எந்த விதமான பந்தாவும் இல்லாமல் தான் உண்டு நடிப்பு உண்டு என இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், யோகா வகுப்புகளுக்கும் சென்று வருகிறாராம். இப்படி ஒரு மாற்றத்தை சிம்புவிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த அதிரடி மாற்றத்துக்கு ஹன்சிகாதான் காரணம் என்கின்றனர். அவர் அன்புடன் சொல்லும் அறிவுரை மனதுக்கு திருப்தியாக இருப்பதால், இனிமேலும் கூட ஹன்சிகாவின் ஆலோசணைப்படியே நடந்து கொள்வது என தீர்மானிமானித்திருக்கிறாராம் சிம்பு.


தானாகவே முன்வந்து குத்தாட்டம் போட்ட லட்சுமிராய்..
[Monday, 2013-05-20 18:42:11]

ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய். தற்போது சில கன்னட படங்களில் நடித்து வரும் லட்சுமிராய், இந்தி படங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம். ஏற்கனவே சில பாலிவுட் நடிகர்களின் நட்பு இருப்பதால், அவர்களின் சிபாரிசின் பேரிலும் புதிய வாய்ப்புகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் குத்து பாடல் ஒன்று வருகிறதாம்.


பட தலைப்பு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்த அமீர்..
[Monday, 2013-05-20 18:36:03]

கதைக்கு யோசிக்கிறார்களோ இல்லையோ படத்தின் தலைப்புக்கு அதிகம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழ்ப் பட இயக்குனர்கள். தினம் தினம் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறது இயக்குனர்கள் சங்கம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் அமீர் தன் தலைமையி‌ன் கீழ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பிரபு சாலமன், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி ஆகியோர் அடங்கிய ஒரு கமிட்டியை நியமித்து தீர்வு காண முன்வந்திருக்கிறார். இதற்கு முன் ஒவ்வொரு இயக்குனர்களும் ஒற்றை சாளர முறைப்படி பதிவு செய்யும் வகையில், மற்ற பதிவு அமைப்பான தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, சேம்பர் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து எந்த விதமான பதில் கடிதமும் வராத காரணத்தால் தான் இந்த கமிட்டியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார் அமீர்.


பத்திரிகை நிரூபர்கள் மீது கடும் கடுப்பிலுள்ள ஸ்ருதிஹாசன்..!
[Monday, 2013-05-20 18:27:32]

தமிழ் பத்திரிகை நிரூபர்கள் எதாவது ஒரு நடிகையைப் பற்றி எழுதி நோகடிப்பது தான் அவர்களின் ஆசையோ என்னவோ என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விடயம் உண்மையா, பொய்யா என்று தெரியாமலையே இப்படியெல்லாம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுதுகிறார்கள். நான் எப்போதாவது அப்படி பேட்டி கொடுத்தேனா?... யூகம் அடிப்படையில் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். 3 படத்திற்கு பின்பு தமிழில் நடிக்கவில்லை என்பது உண்மை தான். காரணம் தெலுங்கில் பலுபு, ஏவடு, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குராம் என நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் தான் தமிழ் படங்களுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் ப்ரியா ஆனந்தை சேர்த்து வைத்த நிருபர்..!
[Monday, 2013-05-20 18:16:39]

"எதிர்நீச்சல்" படத்தில் இணைந்து நடித்த ப்ரியா ஆனந்துக்கும், சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஊடல் போலும். "எதிர்நீச்சல்" படத்தின் சக்ஸஸ் மீட் வடபழனி பசுமை பூங்கா ஹோட்டலில் நடந்தபோது ப்ரியா ஆனந்த் மீடியாக்களுக்கு வெளியே பைட்ஸ் கொடுத்தால், சிவகார்த்திகேயன் உள்ளே இருந்தார், அவர் உள்ளே இருந்தால் இவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். ஆனால் "எதிர்நீச்சல்" படத்தின் மற்றொரு நாயகி நந்திதாவோ சிவகார்த்தியுடன் ஒட்டி உரசியபடி இருந்தார். எல்லோரும் மேடையில் வீற்றிருந்தபோதும் இதை கதை!


சந்தானத்துடன் டூயட் பாடும் சுனைனா..
[Monday, 2013-05-20 18:11:49]

சமீபகாலமாக பழைய படங்களின் தலைப்புகளை இப்போதைய படங்களுக்கு வைப்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்துக்கு எம்.ஜி.ஆர் என்றே சுருக்கமான டைட்டீலை வைத்தார் சுந்தர்.சி. எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். அதன்காரணமாகவே அந்த படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய ஏதோ விசயங்கள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நண்பன், பாகன் படங்களையடுத்து ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்திற்கு நம்பியார் என்று பெயர் வைத்துள்ளனர். மாஜி வில்லன் நம்பியாரின் பெயர் என்பதால், படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகன் என்றபோதும், காமெடி வில்லனாக நடித்துள்ள சந்தானத்துக்குத்தான் இந்த நம்பியார் பெயராம். டைட்டீல் கேரக்டரில் தான் நடிப்பதால் அப்படத்தில் நடிக்க டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம் அவர்.


தெனாலிராமனிற்காக பாடகர் அவதாரம் எடுத்த வடிவேலு!
[Monday, 2013-05-20 18:07:53]

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். கடந்த சட்டபை தேர்தல் பிரசாரத்தில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட வடிவேலு, தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார். இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறாராம்.


ஜில்லா படத்தில் தங்கை நிஷா அகர்வாலை களமிறக்கியுள்ள காஜல்..!
[Monday, 2013-05-20 18:00:53]

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் நடித்த இஷ்டம் படத்தில் நாயகியாக நடித்தவர். முதல்படமே தோல்வி என்பதால் அதையடுத்து நிஷாவை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. அதனால் தெலுங்குக்கு சென்று ஒரு படத்தில் நடித்தார். அந்த படமும் விசேஷமாக போகவில்லை. அதனால், தங்கையை எப்படியாவது ஆளாக்கி விட வேண்டும் என்ற வெறியில் திரியும் காஜல், இப்போது தமிழில் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜில்லா படத்தில் இறக்கி விட்டுள்ளார். ஆரம்பத்தில் என் தங்கை சிறிய வேடத்தில் நடித்தால் அவரது இமேஜ் போய் விடும் என்று தயங்கிய காஜல், இப்போது தங்கை நிஷாவை அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதோடு, தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள அவர், தான் நடிக்கிற காட்சிகளைப்பார்த்து தங்கை பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக அவரையும் அழைத்து சென்றுள்ளாராம்.


மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்..
[Monday, 2013-05-20 17:53:44]

கடந்தாண்டு வெளிவந்த படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த படங்களில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படமும் ஒன்று. விஜய்க்கும் சரி, முருகதாஸ்க்கும் சரி வணிக ரீதியாக பெரும் வெற்றியை கொடுத்த படம் இது. அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் டி.வி., சார்பில் வழங்கப்பட்ட விருத‌ில், இப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸூம், விஜய்யும் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளன. அது எந்த மாதிரியான படம், யாரும் ஹீரோயின் என்ற விபரம் எல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ள இப்படத்திற்கு கொலவெறி அனிரூத் மட்டும் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.


கௌதமுடன் ஜோடி சேர முடியாததால் வருத்தத்தில் நித்யா மேனன்..
[Sunday, 2013-05-19 20:26:48]

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கலக்கியவர் நித்யாமேனன். மலையாள பெண்ணாக இருந்தாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் தான் அதிகமாக நடித்தார். அதன்பிறகு தமிழ், மலையாளம் என்று வளர்ந்தார். இப்படி நான்கு மொழி நடிகையாகி விட்டபோதிலும் எந்த மொழியிலும் அவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் தமிழில் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா நடித்தது போன்ற கவிதைத்தனமான கதாபாத்திரமாம். அதனால், இந்த படத்திற்கு பிறகு கோபிகா இடத்தை பிடித்து விடுவேன் என்று கூறினாலும், மனதளவில் சிறிய வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது, தெலுங்கில் நித்யா மேனன் நாயகியாக நடித்த படமான அல மொதலைந்தி தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கடல் கௌதம் நாயகனாக நடிக்கிறார், இதில் வாய்ப்பு கிடைக்காததே காரணம் என்கிறார்.


தன்னை காதலிப்பவர்களை விஷாலால் தடுக்க முடியாதாம்..
[Sunday, 2013-05-19 20:22:37]

நடிகர் விஷால் தற்போது சொந்த பட நிறுவனம் தொடங்கி 'பாண்டிய நாடு' என்ற படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:


ஆர்யா - நயன் திருமண அழைப்பிதழ் நடந்தது என்ன?
[Sunday, 2013-05-19 20:17:15]

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் வந்தது. 'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம்பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது 'ராஜாராணி' படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இருவரும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்.


கோச்சடையான் இசை வெளியீட்டு விழா ஜப்பானி்ல் - ரஜினி திடீர் முடிவு!
[Sunday, 2013-05-19 20:11:50]

ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜப்பானில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட போவதாக முன்பு அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றிவிட்டார். படவிழாவில் வெளியிடுவதை விட, தனது படங்களுக்கு வரவேற்பு இருக்கும் ஒரு வெளிநாட்டில் ஓடியோ நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினால் நன்றாக இருக்கும் என யோசித்தாராம் ரஜினி.


ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட மறுக்கும் த்ரிஷா..
[Sunday, 2013-05-19 20:07:44]

10 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் த்ரிஷா. ஆனால் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் கோடி ரூபாய் கேட்டாலும் அதை கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் தற்போது அதிகம் சம்பளம் வாங்குவது கூட திர்ஷா தான் என்று பேச்சு அடிபடுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் நடிக்க வந்த புதிதில் இருந்தது மாதிரியே இப்பொழுதும் இளமையாக இருக்கிறார். எத்தனை நடிகைகள் வந்தாலும், த்ரிஷா ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் உள்ளது. அவரது ரசிகர்கள் யாராவது அவரிடம் சென்று ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்டால், ரூபாய் நோட்டில் எல்லாம் ஆட்டோகிராப் போடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுகிறாராம்.


'இங்க என்னா சொல்லுது' படப்பிடிப்புக்காக கோவாவில் முகாமிட்டுள்ள சிம்பு..
[Sunday, 2013-05-19 19:55:29]

கரகர குரல் மூலம் பிரபலமான நடிகர் வி.டி.வி கணேஷ் 'இங்க என்னா சொல்லுது' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானார். இவர் இப்படத்தை வெற்றி படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் படத்துடைய தலைப்பு, பின்னர் தமிழ் திரை உலகின் பிரதான தொழில்நுட்ப வல்லுனர்கள், சந்தானம், மீரா ஜாஸ்மின், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட நல்ல நடிகர்கள் தெரிவு, முத்தாய்ப்பாக சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது என்று முயறசிகளில் ஈடுபட்ட கணேஷ் தற்போது படத்தின் காட்சிகளை மெருகூட்ட மலேசியாவின் பெரும்பகுதிகளில் படமாக்கிய பின்னர் தற்போது சிம்பு சம்பத்தப்பட்ட சில படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க கோவா செல்கிறார்.


விபச்சார அழகியாக நடித்ததற்கு வெட்கப்படாத ஸ்ரேயா
[Sunday, 2013-05-19 19:43:07]

நான் விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய 46வது படம், பவித்ரா. தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரேயா, விபச்சார அழகியாக நடித்து இருக்கிறார். டைரக்டர் ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இப்படம் பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், படத்துக்கு தணிக்கை குழுவினர், ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், நான் நடித்துள்ள சிறந்த படங்களில் பவித்ராவும் ஒன்று. யதார்த்தமான கதை. விபச்சார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை.


முன்னணி நிறுவனங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுக்கும் சிவகார்த்திகேயன்
[Sunday, 2013-05-19 19:41:51]

சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். பாண்டியராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் என்ற இரண்டு படங்களும் மெகா ஹிட் ஒன்றும் இல்லை. சுமாராக ஓடிய படங்கள்தான். ஆனால் அந்த சுமாரான வெற்றியை முன்வைத்தே சிவகார்த்தி‌கேயனை முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து விட்டார்கள். அதன்காரணமாக இதுதான் சரியான தருணம் என்று அவரும் காலரை தூக்கி விட்டுள்ளார். குறிப்பாக, தன்னை முற்றுகையிட்ட சில தரமான டைரக்டர்களைகூட கண்டுகொள்ளாத அவர், முன்னணி கம்பெனி மூலமாக தன்னை தொடர்பு கொள்ளும டைரக்டர்களிடம் மட்டுமே காது கொடுத்து கதை கேட்கிறார். அதிலும் மேல்தட்டு நடிகர்களைப்போன்று எனது ரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. அதனால் அந்த காட்சிகளை இந்த மாதிரி மாற்றுங்கள். அதேபோல், இந்தந்த டெக்னீசியன்கள்தான் எனக்கு செட்டாகும் என்றும் சொல்லி ஒரு பட்டியலை தூக்கிப்போடுகிறாராம்.


சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் சமந்தா
[Sunday, 2013-05-19 19:35:18]

பாணா காத்தாடி சமந்தா, நான் ஈ படத்துக்குப்பிறகு தமிழில் மணிரத்னம், ஷங்கர் என்ற ஜாம்பவான் டைரக்டர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட்டானவர். தோல் அலர்ஜி நோய் காரணமாக அந்த படங்களில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இருப்பினும் அடுத்தபடியாக ஆந்திர சினிமாவில் விழுந்த மார்க்கெட்டை நிறுத்தி விட்டார் சமந்தா. அதற்காக தனது குடும்ப நடிகை என்கிற இமேஜை தளர்த்தி கவர்ச்சியாகவும் நடித்த சமந்தா, இப்போது அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தமிழில் அடுத்து பெரிய என்ட்ரி கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று காத்திருந்த சமந்தாவுக்கு நேரம் கைகூடி விட்டது. வேட்டை படத்துக்குப்பிறகு சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு சில மாதங்களாக கதாநாயகி வேட்டையில் ஈடுபட்டிருந்த லிங்குசாமி, சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள சமந்தா, இந்த படத்திற்கு பிறகு தெலுங்கைப்போலவே தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


ஹீரோக்களுக்கு இணையான நடிகராக மாறிவரும் பரோட்டா சூரி
[Sunday, 2013-05-19 19:28:59]

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சூரி. அந்த படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி பெரிதும் பேசப்பட்டதால் அதிலிருந்த இவரை பரோட்டா சூரியாக்கி விட்டனர். ஆனால் ஆரம்பத்தில் நண்பனாகவே நடித்து வந்த சூரியின் மார்க்கெட் சமீபகாலமாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகன், மனம் கொத்திப்பறவை, ஹரிதாஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்த சூரி, தற்போது கமர்சியல் நடிகர் பட்டியலிலும் இடம் பிடித்து விட்டார். அதனால், மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுபவர்கள், சூரியையும் இன்னொரு ஹீரோவாக்கினால் படத்தை வியாபாரம் செய்வது எளிதாக இருக்கும் என்று அவரையும் புக் பண்ணி வருகின்றனர். அந்த வகையில், தற்போது மைனா விதார்த் நடித்து வரும் பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் சூரியும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். அதையடுத்து, விஜயசேதுபதி, இனிகோ நடிக்கும் ரம்மி படத்திலும் அவர்கள் இருவருக்கும் இணையான வேடம் சூரிக்கும் கொடுத்துள்ளார்களாம். ஆக, காமெடியன், குரூப் ஹீரோ என்று வளர்ந்து விட்ட பரோட்டா சூரி, அடுத்து ஷோலோ ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


நட்சத்திர ஓட்டல்களில் நெருக்கமாகவுள்ள ஸ்ருதி - ரெய்னா..
[Friday, 2013-05-17 10:56:15]

நடிகர் கமலஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சித்தார்த்துடன் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்து பேசப்பட்டார். பிறகு இருவரும் பிரிந்தனர். தற்போது ஸ்ருதி ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் செய்தி பரவியுள்ளது.


சசிக்குமாரின் நண்பனாக நடிக்கும் 'நான் ஈ' சுதீப்!
[Friday, 2013-05-17 10:50:25]

ராஜமவுலி இயக்கிய, 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் சுதீப். கன்னட நடிகரான இவர், மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். கே.மஞ்சு தயாரிப்பில் சசிகுமார், லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி நடிக்கும் படம், 'பிரம்மன்'. கமல்ஹாசன் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்குகிறார். ஜோமன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாள ஹிட் படமான 'தட்டத்தின் மறையத்து' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் கோவையில் சமீபத்தில் 17 நாட்கள் நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் சுதீப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இதை இயக்குனர், தயாரிப்பாளர் கே. மஞ்சுவிடம் கூறினார். மஞ்சுவும் சுதீப்பும் நண்பர்கள் என்பதால் கதை கேட்கச் சம்மதித்தார். இதையடுத்து சாக்ரடீஸ், சுதீப்பிடம் கதையை சொன்னார்.


சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? ப்ரியா ஆனந்தின் அதிரடி பதில்!
[Friday, 2013-05-17 10:45:21]

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். தனுஷின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் எதிர் நீச்சல். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எதிர் நீச்சல் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பில் படத்தின் நாயகன் சிவகார்த்திக்கேயன், கதாநாயகிகள் பிரியா ஆனந்த், நந்திதா, இயக்குனர் துரை செந்தில் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரியா ஆனந்திடம், தங்கள் படங்களில் கதாநாயகிகளை சிபாரிசு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு எந்த கதாநாயகனும் சிபாரிசு செய்யவில்லை என்பதால், அதுபற்றி கருத்து சொல்ல முடியாது என்றார். அடுத்து, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.


32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜில்லாவில் இணையும் மோகன்லால் - பூர்ணிமா
[Friday, 2013-05-17 10:20:22]

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் மோகன்லாலும் பூர்ணிமா பாக்யராஜும். விஜய் நடிக்கும் "ஜில்லா" படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். 1980-ல் "மஞ்சள் விரிஞ்ச பூக்கள்" என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய ஹிட்டானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு "ஜில்லா" படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை நேசன் இயக்குகிறார். பூர்ணிமாவுடன் நடிப்பது மகிழ்ச்சி தருவதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லாலுடன் நடிப்பது குறித்து பூர்ணிமா கூறுகையில், "மோகன்லாலும் நானும் ஜோடியாக நடித்த 'மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு இருவரும் நிறைய படங்களில் நடித்தோம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை.


விஜய்யின் தீவிர ரசிகை நான் - பூர்ணா!
[Friday, 2013-05-17 10:12:48]

மலையாள கரையோரத்திலிருந்து வந்த நடிகை ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஷக்திக்கு ஜோடியாக 'படம் பேசும்', உண்மையிலேயே இந்தப் படம் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார் இயக்குனர். அதையடுத்து, அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து 'தகராறு' படம். அப்புறம் 'அர்ஜூணன் காதலி' இதில் என்னுடன் ஜெய் நடிக்கிறார். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களம். அடுத்து, 'ஜன்னல் ஓரம்' இதுவும் எனக்கு ஸ்பெஷல் படம்தான். இவை எல்லாவும் விட, விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனக்கு லட்சியமாகவே இருக்கிறது அந்த அளவுக்கு நான் அவரின் அதி தீவிர ரசிகை. என்கிறார்.


மிஸ்கின் படக்குழுவினரின் பாராட்டை பெற்ற 'வழக்கு எண்' ஸ்ரீ
[Friday, 2013-05-17 10:03:58]

கொலிவுட்டில் வெளியாகி வெற்றிப்படமாகிய வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ வானத்தில் பறந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த முதல் படமே தேசிய அளவில் விருது பெற்றதோடு, வெற்றி பட நாயகனாக அறிமுகம் என்ற கூடுதல் தகுதியையும் அவருக்கு பெற்றுத்தந்தது. இதற்கெல்லாம் மேலாக ஸ்ரீ மிகவும் ரசித்து மதிக்கும் இயக்குனர் மிஸ்கினின் படத்தில் நாயகனாக வாய்ப்பு வந்த போது அவர் நிச்சயம் பறக்க தான் செய்வார். மிஷ்கின் தயாரித்து, இயக்கும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ஸ்ரீ மேலிருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் மீண்டும் எங்கிருந்து விழுந்தாரோ அந்த இடத்திற்கே சென்று தான் மீண்டும் நடிக்க தயார் என கூறியதோடு சரியாக குதித்து படக்குழுவினரின் பாராட்டை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இரண்டாவது இன்னிங்சிலும் பட வேட்டையில் இறங்கியுள்ள நயன்தாரா..!
[Friday, 2013-05-17 09:57:40]

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில், மீண்டும் முதல் ரவுண்டை போலவே, தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழில் வலை, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, கஹானி படத்தின், தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். ஹரி இயக்கும், அருவா படத்திலும், நயன்தாரா தான், ஹீரோயினாம். ஐயா படத்துக்காக, கேரளாவில் இருந்து, நயன்தாராவை தமிழுக்கு அழைத்து வந்ததே, ஹரி தான். அதனால், அவரே, தன்னை மீண்டும் அழைத்திருப்பதால், புதிய உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா.


டில்லியிலிருந்து குலு-மனாலிக்கு கார் ஓட்டிச்சென்ற தல
[Friday, 2013-05-17 09:54:28]

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும், தன், 53வது படத்துக்காக, தற்போது, இமயமலை பகுதிகளில் முகாமிட்டுள்ளார் அஜீத். க்ரைம், த்ரில்லர் கதையில் உருவாகி வரும், இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு, கடந்த இரண்டு வாரங்களாக லடாக், குலு-மனாலி போன்ற பகுதிகளில், துரிதமாக நடந்து வருகிறது. முன்னதாக, குலு-மனாலியில் நடந்த க்ளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு சென்ற அஜீத், டில்லியில் இருந்து தானே கார் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த களைப்பிலும் ஸ்பாட்டை அடைந்ததும், மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டாராம் அஜீத். கடந்த, ஓராண்டாகவே நடந்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு, இதோடு முடிவடைகிறதாம். ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Ramans2011
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
TDE_Computers2011
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com