Untitled Document
March 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: - ஈழத்து நிலவன்
[Friday 2016-12-09 22:00]

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.


மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு - அ.மயூரன் . லண்டன்.
[Saturday 2016-11-26 18:00]

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.


எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா! - ச.ச.முத்து
[Thursday 2016-10-06 21:00]

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது..செப்டம்பர் 24 அன்று..யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்..அதனை பிறகு பார்ப்போம்.. முதலில் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்று கொஞ்சம் பார்க்கலாம். தேசியத்தலைவர் தமது உரைகளிலும் பேச்சுகளிலும் அடிக்கடி சொல்வது போல இந்த உலகமானது தத்தமது நாடுகளின் லாபங்களுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றது..இதற்குள் அவர்கள் என்னதான் மானுட விழுமியம், உலக நாடுகளுக்கான மனித உரிமை சட்டங்கள் அது இது என்று எத்தனை பேசினாலும் தமது நாடுகளின் தேசிய லாபம் என்று வரும்போது எல்லாம் தூக்கி கடாசி எறிந்துவிட்டு தம் நாட்டின் லாபம் ஒன்றுக்காகவே ஒற்றைக் காலில் நிற்பார்கள்... இதுதான் தொடர்ந்து நடந்துவரும் வரலாறு...யாரும் விதிவிலக்கு இல்லை..


ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும். - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-10-02 19:00]

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


மக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது...! – ஈழத்து நிலவன் –
[Friday 2016-09-23 21:00]

இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.


இனப்பிரச்சனையின் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு: - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-09-11 16:00]

அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை பெரிதும் உருவாக்குவதில் பங்கு வகித்தவையுங்கூட மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த யாப்புகள் பிழையானவை மட்டுமல்ல சமூக நீதி பொறுத்து அவை பெருங் குற்றங்களுக்கு ஏதுவானவையாகவும் உள்ளன. இத்தகைய பிழையான, குற்றம் நிறைந்த அரசியல் யாப்புகளை உருவாக்கிய மனிதர்களே அதனை திருத்தி சரியான யாப்புகளையும் உருவாக்க முடியும்.


போராளிகளின் மரணம் - புற்றுநோயை உருவாக்க முடியுமா?
[Wednesday 2016-08-03 05:00]

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோரும் அடக்கம். இந்த போராளிகளின் இறப்பு என்பது தமிழினத்திற்கு மிகப்பெரும் இழப்பு என்பதைவிட மிகப்பெரும் அவமானமாகும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய அற்புத மனிதர்கள் இன்று அனாதைகளாக இறக்கின்றனர்.


தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கிறதாம் கனடா ஈழம்சாவடி ! - நம்பலாமா..? Top News Top News
[Friday 2016-07-29 23:00]

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி பிரமாண்டமாய் இவ்வருடமும் அமைந்த ஈழம் சாவடி பல சிறப்புக்களை கொண்டதாக இவ்வாண்டு அமைந்தது. ஈழம்சாவடி பெற்ற வருமானத்தில் ஒருபெரும் பகுதியை ??? தாயக உறவுகளின் புனர்நிர்மாணப் பணிக்காக வழங்கவுள்ளதாக ஈழம்சாவடியின் அமைப்பாளர்களான பிராம்டன் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளமை கனடியத் தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி கனடாவில் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஏனைய தமிழர்களும் தாய கஉறவுகளுக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற வேண்டுதலை மக்கள் பலரும் வெளியிட்டுள்ளனர்.


ஈழ தமிழர்கள் வாழ்ந்தவர்கள்! - ஏனையவர்கள் வந்தவர்கள்!
[Thursday 2016-07-21 07:00]

மரிக்கண்டத்தில் இருந்த தென் இந்தியாவின் பழங்குடிகள் பழந்தமிழர்கள் என்பது கருதுகோள். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

ஈழவம்ச மனுவின் மகள் ஈழம் என்னும் தமிழ் அரச குமாரி தமிழ்மக்கள்வரலாறு,


சாதி பாகுபாட்டில் தமிழ் - சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்: - திருமகள்
[Monday 2016-04-04 09:00]

சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள - பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை பூதாகாரமாக ஊன்றியிருப்பதாகவும் வேளாளர்கள் மற்ற சாதியினர் மீது அரசியல், பொருளாதார, சமூக தளங்களில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் The Island நாளேட்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் சாதிச் சிக்கல் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல. இந்தச் சிக்கல் தமிழ் சமூகத்தில் இருப்பது போல சிங்கள சமூகத்திலும் வேருன்றி இருக்கிறது. காரணம் இந்து மதத்தின் செல்வாக்கே ஆகும்.


அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் -
[Monday 2016-03-21 07:00]

உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன.


தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் -
[Friday 2016-03-18 22:00]

ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே.


இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :- ஏன் அரசியல் அமைப்பு
[Tuesday 2016-02-16 07:00]

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல் வாழவேண்டும். ஒருவர் தனியாகவும் தனது வெவ்வேறு தேவைகளின் பொருட்டு வெவ்வேறு கூட்டத்தினருடன் சேர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுக்கலாம். அவரவர் வல்லமைக்கும் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப பயன்களை அடைவர். தாம் தேடிக்கொண்டவற்றை அல்லது இன்னொருவர் உவந்தளித்ததை அனுபவிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. இதுதான் சர்வதேச மனித உரிமையின் அடிப்படை. இந்த அடிப்படைகள் பேணப்படும் இடங்களில், நாடுகளில் அமைதியும் சமாதானமும் உயர்வும் மகிழ்வும் நிலவும். அதை உறுதிப்படுத்தவே அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப அரசியல் அமைப்புகள், சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.


எமது மக்களே எமது மலைகள்...! ச.ச.முத்து
[Monday 2016-02-08 20:00]

ஒரு தேசத்தின் வரலாறோ ஒரு இனத்தினது விடுதலை வரலாறோ முழுமனிதர்களையும் பதிவு செய்துவிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி முழு மனிதர்களின் செயற்பாடுகளையும் தியாகங்களையும் பதிவு செய்தல் சாத்தியமும் இல்லை. ஆனால் இன்று முழுவளர்ச்சியடைந்து வான்தொட்டு அதனையும் தாண்டி அண்டம் கடந்து செல்லும் தேசங்களின் வரலாறு தொடக்கம் சின்னஞ்சிறு தேசங்களின் வரலாறு வரைக்கும் எல்லா தேசங்களின் வரலாறுகளிலும் முகந்தெரியாத எண்ணற்ற மனிதர்களின் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்தே காணப்படுகின்றது. அந்த அந்த தேசங்களினதும் இனங்களினதும் விடுதலைக்கு இத்தகைய முகந்தெரியாத மனிதர்களின் உதவிகளும் தன்னலம் கருதாத ஈடுபாடுகளுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது.


மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? - நடராஜா குருபரன்
[Sunday 2016-02-07 21:00]

இலங்கை அரசியலில் பலமாக இருப்பதாக நினைத்த எவருமே நிலைத்திருக்கவில்லை என்பதுதான் வரலாறு தந்த பாடங்கள்... இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சி வரை ஆட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தமது எதேட்சாதிகாரங்கள் மூலம் ஆட்சிக் கதிரையை இறுகப் பற்றிக் கொள்ளவே விரும்பினார்கள்... ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றுப் போனதுததான் வரலாறுகளாக எம் கண்முன்னே விரிகின்றன... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே 3 தசாப்தங்களை தன் பிடிக்குள் வைத்திருந்தார்... அவர் ஜனநாயக அரசியல் வழி வந்தவர் அல்ல.. விடுதலைப் போராட்ட வழியில் ஆயுதங்களால் அரசியலை நகர்த்தியவர்... அவரும் கூட தான் எதிர்பார்த்த காலத்தை விட, சென்றடைய விரும்பிய இலக்கை அடைய முன் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டார்...


ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன. மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும்:
[Thursday 2016-02-04 19:00]

முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள் பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள்.

இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள். இனி அடுத்து வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராகவும் கலந்துகொள்ள முடியாது என்பார்கள்.

அதன் பின்னர் இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த முடியாது என்பார்கள். 146,679 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எப்படி சர்வசாதரண விடயமாக ஆக்கிவிட்டார்கள்?

இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்கள் ஆரம்பம் முதலே எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மைத்திரியும்கூட எந்த விசாரணையும் கிடையாது என்று கூறிவிட்டார். ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் அவர்களை நம்பும்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.


சவுதி அரேபியா - இரான் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சியை சிக்கலாக்கியுள்ளது: - நக்கீரன்
[Thursday 2016-01-07 23:00]

அல்லா ஒருவனே ஏக இறைவன், அவனைவிட வேறு இறைவன் கிடையாது, அவனால் அருளப்பட்டது குர் ஆன், அவனது இறுதித் தூதர் முகம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை எல்லா முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் சுன்னி மற்றும் ஷியா என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இருந்தும் சுன்னிகளும் ஷியாக்களும் அல்லா ஒருவனே, குர்ஆனும் ஒன்றே, இறுதித் தூதரும் ஒருவரே, மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்கின்றன. முகம்மது நபிக்குப் (கிபி 632) பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை நியமிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரும்பான்மையோர் முகம்மது நபியின் நெருங்கிய நண்பரும் மாமனாருமான அபூபக்கர் கலீபா ஆக வர வேண்டும் என்று விரும்பினார்கள். சிறுபான்மையோர் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே முகம்மது நபியின் உண்மையான வாரிசு என்று வாதிட்டார்கள். இந்தச் சண்டை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஷியா என்ற சொல் அரபு மொழியில் “அலியைப் பின்பற்றுவோர்” என்று பொருள்படும்.


இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் !
[Thursday 2015-12-31 08:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது.


தமிழர் வாழ்வில் சமணம்: - நக்கீரன்
[Monday 2015-12-28 08:00]

தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்சி முதலான தமிழ்நாட்டுக் கலைகளெல்லாம் சமண சமயம் சார்ந்த தமிழ் மக்களால்தான் இயற்றப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளன. எனவே சமணம் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை மிகப் பெரியதாகும்.


பல தடம் பதித்த தமிழ் தேசியம்: - வல்வை ந.நகுலசிகாமணி
[Friday 2015-12-25 23:00]

வல்வை ந.நகுலசிகாமணி
கனடா தமிழ்தேசிய ஆதரவுக்குழு.
உறுப்பினரில் ஒருவன்.

1947ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரின் உரிமைக்குரலாக இனங்காட்டிய தமிழ் காங்கிரஸ் பின்னர் சலுகை அரசியலில் நாட்டம் காட்டிவேளையில் தமிழ்தேசியத் தின்காவலனாக அதன் கேடயமாக தந்தை செல்வா தலைமையில் எழுச்சிபெற்ற தமிழினத்தின் விடிவெள்ளியாக 1949ல் ஆரம்பித்ததுதான் இந்தப்பேரியக்கம். கல்லடி யும் சொல்லடியும் பொல்லடியும் பெற்று செங்குருதி சிந்தி, சிறை நிரப்பி வடகிழக்கு என்ற பேதம்களைந்து தமிழர்களை ஒருங்கிணைத்த பேரியக்கம் தமிழரசுக்கட்சி.


கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்...!
[Friday 2015-12-25 16:00]

பகுதி ; 1

அன்புமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.தங்கள் உகரம் இணை யத்தளத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரும் அதிர்ச்சி. நீங்கள் இவ்வாறு எழுதியதற்கான காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் இவ்வி டத்தில் உண்மையைக் கூறுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.உண்மையைத் துணிந்து கூறுங்கள் என்ற உங்களின் உரைகள் தான் எனக்கு அப்படியயாரு மன உறுதி யையும் தந்தது.வடக்கின் முதல்வர் நீதியரசர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்பில் யார் எந்தக் குறையைக் கூறியிருந்தாலும் அது பற்றி நான் கவலை கொண்டிருக்கமாட்டேன். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமை என்று நான் நம்புகின்ற கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் குறை காணும் போது நான் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகும்.அன்புக்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! அண்மையில் நீராவியடி பிள்ளையார் கோயில் அறங்காவலர் திருமதி சாந்தா ரகுநாத முதலியார் அம்மையார் அவர்களைச் சந்தித்தேன்.சமய சமூக அக்கறை கொண்ட நல்ல பொறுப்புள்ள ஒருவர் அவர். கூடவே பெரியார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சகோதரி. தமிழகத் தில் உள்ள சிதம்பரத்தில் ஈழத்தமிழர்கள் அமைத்த மடாலயங்கள் தொடர்பில் ஆராய்வதே அந்தச் சந்திப்பின் நோக்கம்.


தமிழ் இனத்தைப் பணயம் வைத்து சூதாடவேண்டாம்: - இலங்கையின் பிரச்சனை என்ன?.
[Thursday 2015-12-24 08:00]

இரு இறைமையுள்ள அரசுகளைக் கைப்பற்றி ஆண்ட ஆங்கிலேயர் சுதந்திரம் வழகியபோது ஜனநாயக ஒற்றையாட்சி முறையில் இருநாடுகளின் முழு அதிகாரத்தையும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் கொடுத்ததுதான் பிரச்சனையின் ஆணிவேர். உலகில் சிங்கள மொழிக்கோ பௌத்த மதத்திற்கோ தனியான நாடு எங்கும் இல்லை என்பதால் முழு இலங்கையையும் சிங்களப் பௌத்த நாடாக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள். அதேபோல் தாம் இழந்த உரிமையையும் இறைமையையும் மீளப் பெறுவதோடு தமிழ் மொழிக்கென்று ஒரு தனி நாடு உலகில் இல்லாததால் அதை வடகிழக்கு இலங்கையில் அமைக்கலாம் என்பது தமிழர் தரப்பின் விருப்பமாகும். இதுதான் பிரச்சனை.


கிழவரின் துணிவு ! – கம்பவாரிதி ஜெயராஜ்.
[Sunday 2015-12-20 20:00]

உணர்ச்சிவயப்படாது நிதானமாக, சம்பந்தன் பேசிய பேச்சொன்று, சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது. தனது அரசியல் அனுபவத்தை, அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன். மட்டக்களப்பில் இடம்பெற்ற, தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே, சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.


ரொறன்ரோவில் வெளிவரும் தீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறார் என்பது பிழையான கணிப்பு: - நக்கீரன்
[Thursday 2015-12-10 07:00]

தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு கடந்த டிசெம்பர் 01 இல் ரொறன்ரோவில் வைத்து வெளியிடப்பட்டது. எனக்கு அழைப்பிதழ் வந்தும் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. தீபம் வார ஏட்டின் பதிப்புகள் வேறு நாடுகளிலும் வெளிவருகின்றன. நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலின் போது வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. தீபம் என்ற தொலைக்காட்சியும் இருக்கிறது. நோர்வேயில் இருந்து இயங்கும் இந்த நிறுவனம் ஒரு பலமான ஊடகமாகும். தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு வெளியிட்டு வைக்கப்பட்டது சிலரது அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தூக்கத்தை கெடுத்துள்ளது. குறிப்பாக இங்கு வெளியாகும் கனடா உதயன் செய்திப் பிரிவு உதயன் முகநூலில் தீபம் வார ஏட்டைப்பற்றி ஒரு கற்பனை கலந்த செய்தியை வெளியிட்டு தனது வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளது.


இம்மானுவேல் அடிகளார்..! அரசுக்குப் பாவ மன்னிப்பு வழங்குவாரா..? - அல்லது ஈழத்தமிழ் மக்களின் துன்பச் சுமையை தன்னில் சுமந்து மீட்சி கொடுப்பாரா?
[Wednesday 2015-12-02 23:00]

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று விடுதலைப்புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு. மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று. மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது. அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும்.


சுமந்திரன் காத்தல் தொழில் விக்னேஸ்வரன் அழித்தல் தொழில் செய்கிறார்கள்! - நக்கீரன்
[Wednesday 2015-12-02 07:00]

ஊடகங்கள் தொடர்ந்து திரு சுமந்திரன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமைக்குக் காரணம் சுமந்திரந்தான் என்ற தோரணையில் எழுதிக் கொண்டிருக்கின்றன. கடந்த தேர்தலில் முதலமைச்சர் பெரிய குழப்பவாதியாக விளங்கினார். முதலில் தான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றார். பின்னர் தான் நடுநிலைமை வகிக்கப் போவதாகச் சொன்னார். தொடர்ந்து தான் ஊமையாக இருக்கப் போவதாகக் கூறினார். கடைசியில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்து மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ததேகூ க்கு எதிராக மறைமுகமான கண்டனங்களை முன்வைத்தார்.


பண்டாரவன்னியன் நினைவுநாளும் அதில் உள்ள வரலாற்றுத் திரிபும்: - அ.மயூரன்
[Saturday 2015-10-31 21:00]

பண்டார வன்னியன் சிலை கற்சிலை மடு (25.08.2002

இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.


பிரதமர் யஸ்ரின் லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்! - நக்கீரன் தங்கவேலு
[Thursday 2015-10-29 19:00]

இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. உயிர், உடல், செல்வம் மட்டுமல்ல பதவிகளும் நிரந்தரமில்லை. மூன்று தேர்தல்களில் அடுக்கடுக்காய் வென்று வந்த பழமைவாதக் கட்சி நான்காவது தடவை பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இம்முறை மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக் கணிப்பின்படி ஒவ்வொரு கட்சியும் முதலாவதாகவும் மூன்றாவதாகவும் மாறி மாறி வந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது புதிய சனநாயகக் கட்சி முதலாவதாகவும் பழமைவாதக் கட்சி இரண்டாவதாகவும் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்தன. பின்னர் பழமைவாதக் கட்சி முதலாவது இடத்திலும் புதிய சனநாயகக் கட்சி இரண்டாவது இடத்திலும் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்தன. தேர்தல் நடந்த ஒக்தோபர் 19 க்கு முதல் வாரம் லிபரல் கட்சி முதல் இடத்திலும் பழமைவாதக் கட்சி இரண்டாவது இடத்திலும் புதிய சனநாயகக் கட்சி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டன.


தகைசார் ஆளுமை மிகுந்த தமிழினி! - செல்வரட்னம் சிறிதரன்
[Wednesday 2015-10-21 19:00]

தமிழ்கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர். தகைசார்ந்த ஆளுமை, கொள்கைப் பற்று, உறுதியான செயலாற்றல், பண்புகளுக்குள்ளே மிளிர்ந்து வெளிப்பட்ட அழகிய பெண்மை போன்றவற்றின் உறைவிடமாக அவர் திகழ்ந்தார். இயற்பெயர் சிவகாமி. சுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு வயது 43. நடுத்தரப் பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்ணாக தனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அவர் உயிர் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் மட்டும் போராடி மறையவில்லை. அடக்குமுறைகளுக்கும், ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்ற அரசியல் ஆணாதிக்கச் செயற்பாடுகளுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது.


எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை! - நக்கீரன் Top News
[Friday 2015-10-16 22:00]

கோயில் திருவிழாவுக்கும் தேர்தல் திருவிழாவுக்கும் ஒற்றுமை உண்டு. கோயில் திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கி தீர்த்தத் திருவிழாவோடு முடிகிறது. தேர்தல் திருவிழா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதோடு தொடங்கி தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நாளோடு முடிகிறது. இரண்டு விழாக்களுக்கும் பணம் நிறையச் செலவழிக்கப்படுகிறது. இப்போது நடக்கிற தேர்தல் கனடிய நாடாளுமன்றத்திற்கான 42 ஆவது தேர்தல் ஆகும். சென்ற ஓகஸ்ட் 2 ஆம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. சாதாரணமாக 5 வாரமே தேர்தல் பரப்புரை நீடிக்கும். ஆனால் இம்முறை அது 7 வாரங்களுக்கு நீடிக்கிறது. ஆளும் பழமைவாதக் கட்சிக்கு ஒப்பீட்டளவில் நிதி ஒரு சிக்கல் அல்ல. பரப்புரைக் காலத்தை நீடித்தால் அது தங்களுக்கு அனுகூலம் என பழமைவாதக் கட்சி நினைத்தது.

Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா