Untitled Document
March 28, 2024 [GMT]
தாயக மக்களின் மனங்களோடு இணைய மறுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள்: - மாவீரர் நாள் உணர்த்தியது
[Thursday 2017-11-30 17:00]

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது.

கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி மாவீரர்களின் அர்ப்பணிப்பை ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள்.


கடற்படைத் தளபதி சின்னையாவும் அவரின் பின்னாலுள்ள அரசியலும்!
[Sunday 2017-08-27 09:00]

47ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக் கடற்படையின் தளபதியாக தமிழரான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டதும் சர்வதேச ஊடகங்கள் அதற்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்திருந்தன. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் தமிழர் ஒருவர் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை காணப்பட்டதே அதற்குக் காரணம்.


தமிழ்-முஸ்லிம் உறவும், நமது பேச்சுகளும் எழுத்துக்களும்! - -எஸ். ஹமீத்.
[Monday 2017-07-17 08:00]

கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப் பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.


வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு
[Sunday 2017-07-09 18:00]

தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர்.
மு. திருநாவுக்கரசு
ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காணமுடியாது.


இழப்பிலும் இன்னல்களிலும் இழைக்கப்பட்டதே கனடா 150! - பிரகல் திரு Top News
[Saturday 2017-07-01 09:00]

வட அமெரிக்காவில் எங்கிருந்தாலும் நாம் வாழும் நிலப்பரப்புக்கள், கோடிக்கணக்கான பழங்குடி மக்களின் அழிவிலும் அல்லல்களிலும் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவிடயம். இந்த கண்டத்தின் பழங்குடி மக்களுடன் ஐரோப்பியர்கள், பொருள் பரிமாற்றத்தில் தொடங்கி, மக்களை அளித்து அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அவர்களின் கலாச்சாரத்தை அளித்து, ஒரு இனத்தின் அடையாளமான மொழியை அழித்து, அதன் பயன் உருவாகியது தான் நாம் இன்று போற்றும் குடியேற்ற நாடான


ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு
[Sunday 2017-06-18 09:00]

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும்.


பேஸ்புக் பதிவால் இலங்கைப் பெண் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2017-04-05 19:00]

பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது. பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது . இப்படியான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாளுங்கள்.


தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: - ஈழத்து நிலவன்
[Friday 2016-12-09 22:00]

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.


மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு - அ.மயூரன் . லண்டன்.
[Saturday 2016-11-26 18:00]

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.


எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா! - ச.ச.முத்து
[Thursday 2016-10-06 21:00]

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது..செப்டம்பர் 24 அன்று..யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்..அதனை பிறகு பார்ப்போம்.. முதலில் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்று கொஞ்சம் பார்க்கலாம். தேசியத்தலைவர் தமது உரைகளிலும் பேச்சுகளிலும் அடிக்கடி சொல்வது போல இந்த உலகமானது தத்தமது நாடுகளின் லாபங்களுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றது..இதற்குள் அவர்கள் என்னதான் மானுட விழுமியம், உலக நாடுகளுக்கான மனித உரிமை சட்டங்கள் அது இது என்று எத்தனை பேசினாலும் தமது நாடுகளின் தேசிய லாபம் என்று வரும்போது எல்லாம் தூக்கி கடாசி எறிந்துவிட்டு தம் நாட்டின் லாபம் ஒன்றுக்காகவே ஒற்றைக் காலில் நிற்பார்கள்... இதுதான் தொடர்ந்து நடந்துவரும் வரலாறு...யாரும் விதிவிலக்கு இல்லை..


ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும். - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-10-02 19:00]

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


மக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது...!
[Friday 2016-09-23 21:00]

இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.


இனப்பிரச்சனையின் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு: - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-09-11 16:00]

அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை பெரிதும் உருவாக்குவதில் பங்கு வகித்தவையுங்கூட மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த யாப்புகள் பிழையானவை மட்டுமல்ல சமூக நீதி பொறுத்து அவை பெருங் குற்றங்களுக்கு ஏதுவானவையாகவும் உள்ளன. இத்தகைய பிழையான, குற்றம் நிறைந்த அரசியல் யாப்புகளை உருவாக்கிய மனிதர்களே அதனை திருத்தி சரியான யாப்புகளையும் உருவாக்க முடியும்.


போராளிகளின் மரணம் - புற்றுநோயை உருவாக்க முடியுமா?
[Wednesday 2016-08-03 05:00]

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோரும் அடக்கம். இந்த போராளிகளின் இறப்பு என்பது தமிழினத்திற்கு மிகப்பெரும் இழப்பு என்பதைவிட மிகப்பெரும் அவமானமாகும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய அற்புத மனிதர்கள் இன்று அனாதைகளாக இறக்கின்றனர்.


ஈழ தமிழர்கள் வாழ்ந்தவர்கள்! - ஏனையவர்கள் வந்தவர்கள்!
[Thursday 2016-07-21 07:00]

மரிக்கண்டத்தில் இருந்த தென் இந்தியாவின் பழங்குடிகள் பழந்தமிழர்கள் என்பது கருதுகோள். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

ஈழவம்ச மனுவின் மகள் ஈழம் என்னும் தமிழ் அரச குமாரி தமிழ்மக்கள்வரலாறு,


சாதி பாகுபாட்டில் தமிழ் - சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்: - திருமகள்
[Monday 2016-04-04 09:00]

சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள - பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை பூதாகாரமாக ஊன்றியிருப்பதாகவும் வேளாளர்கள் மற்ற சாதியினர் மீது அரசியல், பொருளாதார, சமூக தளங்களில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் The Island நாளேட்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் சாதிச் சிக்கல் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல. இந்தச் சிக்கல் தமிழ் சமூகத்தில் இருப்பது போல சிங்கள சமூகத்திலும் வேருன்றி இருக்கிறது. காரணம் இந்து மதத்தின் செல்வாக்கே ஆகும்.


அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் -
[Monday 2016-03-21 07:00]

உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன.


தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் -
[Friday 2016-03-18 22:00]

ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே.


இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :- ஏன் அரசியல் அமைப்பு
[Tuesday 2016-02-16 07:00]

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல் வாழவேண்டும். ஒருவர் தனியாகவும் தனது வெவ்வேறு தேவைகளின் பொருட்டு வெவ்வேறு கூட்டத்தினருடன் சேர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுக்கலாம். அவரவர் வல்லமைக்கும் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப பயன்களை அடைவர். தாம் தேடிக்கொண்டவற்றை அல்லது இன்னொருவர் உவந்தளித்ததை அனுபவிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. இதுதான் சர்வதேச மனித உரிமையின் அடிப்படை. இந்த அடிப்படைகள் பேணப்படும் இடங்களில், நாடுகளில் அமைதியும் சமாதானமும் உயர்வும் மகிழ்வும் நிலவும். அதை உறுதிப்படுத்தவே அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப அரசியல் அமைப்புகள், சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.


எமது மக்களே எமது மலைகள்...! ச.ச.முத்து
[Monday 2016-02-08 20:00]

ஒரு தேசத்தின் வரலாறோ ஒரு இனத்தினது விடுதலை வரலாறோ முழுமனிதர்களையும் பதிவு செய்துவிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி முழு மனிதர்களின் செயற்பாடுகளையும் தியாகங்களையும் பதிவு செய்தல் சாத்தியமும் இல்லை. ஆனால் இன்று முழுவளர்ச்சியடைந்து வான்தொட்டு அதனையும் தாண்டி அண்டம் கடந்து செல்லும் தேசங்களின் வரலாறு தொடக்கம் சின்னஞ்சிறு தேசங்களின் வரலாறு வரைக்கும் எல்லா தேசங்களின் வரலாறுகளிலும் முகந்தெரியாத எண்ணற்ற மனிதர்களின் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்தே காணப்படுகின்றது. அந்த அந்த தேசங்களினதும் இனங்களினதும் விடுதலைக்கு இத்தகைய முகந்தெரியாத மனிதர்களின் உதவிகளும் தன்னலம் கருதாத ஈடுபாடுகளுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது.


மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? - நடராஜா குருபரன்
[Sunday 2016-02-07 21:00]

இலங்கை அரசியலில் பலமாக இருப்பதாக நினைத்த எவருமே நிலைத்திருக்கவில்லை என்பதுதான் வரலாறு தந்த பாடங்கள்... இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சி வரை ஆட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தமது எதேட்சாதிகாரங்கள் மூலம் ஆட்சிக் கதிரையை இறுகப் பற்றிக் கொள்ளவே விரும்பினார்கள்... ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றுப் போனதுததான் வரலாறுகளாக எம் கண்முன்னே விரிகின்றன... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே 3 தசாப்தங்களை தன் பிடிக்குள் வைத்திருந்தார்... அவர் ஜனநாயக அரசியல் வழி வந்தவர் அல்ல.. விடுதலைப் போராட்ட வழியில் ஆயுதங்களால் அரசியலை நகர்த்தியவர்... அவரும் கூட தான் எதிர்பார்த்த காலத்தை விட, சென்றடைய விரும்பிய இலக்கை அடைய முன் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டார்...


ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன. மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும்:
[Thursday 2016-02-04 19:00]

முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள் பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள்.

இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள். இனி அடுத்து வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராகவும் கலந்துகொள்ள முடியாது என்பார்கள்.

அதன் பின்னர் இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த முடியாது என்பார்கள். 146,679 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எப்படி சர்வசாதரண விடயமாக ஆக்கிவிட்டார்கள்?

இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்கள் ஆரம்பம் முதலே எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மைத்திரியும்கூட எந்த விசாரணையும் கிடையாது என்று கூறிவிட்டார். ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் அவர்களை நம்பும்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.


சவுதி அரேபியா - இரான் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சியை சிக்கலாக்கியுள்ளது: - நக்கீரன்
[Thursday 2016-01-07 23:00]

அல்லா ஒருவனே ஏக இறைவன், அவனைவிட வேறு இறைவன் கிடையாது, அவனால் அருளப்பட்டது குர் ஆன், அவனது இறுதித் தூதர் முகம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை எல்லா முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் சுன்னி மற்றும் ஷியா என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இருந்தும் சுன்னிகளும் ஷியாக்களும் அல்லா ஒருவனே, குர்ஆனும் ஒன்றே, இறுதித் தூதரும் ஒருவரே, மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்கின்றன. முகம்மது நபிக்குப் (கிபி 632) பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை நியமிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரும்பான்மையோர் முகம்மது நபியின் நெருங்கிய நண்பரும் மாமனாருமான அபூபக்கர் கலீபா ஆக வர வேண்டும் என்று விரும்பினார்கள். சிறுபான்மையோர் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே முகம்மது நபியின் உண்மையான வாரிசு என்று வாதிட்டார்கள். இந்தச் சண்டை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஷியா என்ற சொல் அரபு மொழியில்


இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் !
[Thursday 2015-12-31 08:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா