Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மே 18 - போர்க்குற்ற நாளா ? துக்கநாளா? : பதவிகளுக்கும் , பட்டங்களுக்கும் அப்பாற்பட்டதென்பதை போட்டிக்குழுக்கள் உணர்ந்திருப்பார்களா!
[Saturday, 2012-05-12 22:29:42]

உலகத் தமிழருகளுக்கு எல்லா நாளுமே துக்கநாள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆகவே மே 18 மட்டும் துக்கநாள் என்பதை முழுமையாக நிராகரித்து , தமிழினப் படுகொலை புரிந்த அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைக்கு பங்களிக்கும் போர்க்குற்ற நாளாக உளத்துணிவுடன் எடுத்துக்காட்டுவோம்.

முள்ளிவாய்க்காலின் மூச்சாகி வலியை விஞ்சி எழும் வலிமை: - பனங்காட்டன்
[Thursday, 2013-05-16 21:29:38]

நெஞ்சுக்குள் குவிந்திருக்கும் வலியை விஞ்சியதாக புலம்பெயர் தமிழர் சமூகம் இன்று வலிமை பெற்று உயிர்ப்புடன் செயற்படுவதால், சர்வதேசத்தின் கண்களை கொஞ்சமாவது திறக்கக்கூடியதாக இருந்தது என்பதே நிதர்சனம்.

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

மட்டக்களப்பின் புராதன வரலாறு - கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தின் தொல்லியல் சின்னங்கள் Top News
[Monday, 2013-04-29 15:13:51]

தேசமொன்றின் வரலாற்றினைக் கூறுவது இலக்கியங்களும் தொல்பொருள் மூலாதாரங்களுமேயாகும். எனினும் இலக்கியங்கள் அது எழுதப்பட்ட காலத்திற்கும் அதனை எழுதியவரின் கற்பனாசக்திக்கும், மனோநிலைக்கும் உட்பட்டவை. எனவே இலக்கியங்கள் வரலாற்றினைக் கூறும் வேளையில் அவை மிகைப்படுத்திக் கூறுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் அவ்வாறானவையன்று. அவை நம்பகமான வரலாற்றுத் தன்மையினைக் கூறும் இயல்புடையவை. இலங்கையின் ஆரம்பகால வரலாறானது ஐதீகங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றினைக் கட்டியெழுப்பியது. தமிழர்களின் ப10ர்வீகதேசமான மட்டக்களப்பு வரலாற்றில் தொல்லியல் ஆய்வுக்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும், அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு முழுமையான நிலையை அடையாமை கவலைக்குரியது. இங்கு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் மட்டக்களப்பு வரலாற்றின் வளர்ச்சிப்படிகளை கண்டுகொள்ளமுடியும்.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் ஈழம் சேர்வதற்கு எந்தவழி சிறந்தவழி?
[Thursday, 2013-04-25 21:11:38]

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல; அழிக்கவே முடியாதென்று உலகமே வியந்து நின்ற அவர்களது ஆட்சியும் அதாவது அவர்கள் இரு தசாப்த காலமாகக் கட்டிக்காத்த தமிழீழ அரசும் அந்த முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டது. ஏன்?.எப்படி? விரோதிகளான; SLFP யும் UNP யும் முதளித்துவக் கட்சிகளும் சோசலிசக் கட்சிகளும் பாமர சிங்களவரும் படித்த சிங்களவரும் மலை நாட்டுச் சிங்களவரும் தாழ்நிலச் சிங்களவரும் கூடி வாழ்ந்த முஸ்லீம் மக்கள் சிலரும் தமிழின துரோகிகள் சிலரும் கூட தமிழீழ அரசையும் போராளிகளையும் தம் பொது எதிரியாகப் பார்த்தனர். அவர்களை அழிப்பதில் ஒற்றுமைப் பட்டனர்.பரம விரோதிகளான அமெரிக்காவும் சீனாவும், இந்தியாவும் பாகிஸ்தானும்,ஐரோப்பாவும் ரஷ்ஷியாவும் ஆபிரிக்க நாடுகளும் ஆசிய நாடுகளும் தமிழீழ அரசைத் தம் பொது எதிரியாகப் பார்த்தனர்.அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழீழ அரசை அழித்தனர். தமிழர் விட்ட பிழை என்ன?. விடுகின்ற பிழை என்ன?

வடக்கில் மாகாணசபையா? வட - கிழக்கில் இடைக்கால நிர்வாகமா?.. - இதயச்சந்திரன்
[Wednesday, 2013-04-24 21:15:57]

வருது ....வருது... .வட மாகாணசபைத்தேர்தல். யாரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடலாம் என்று மூடிய அறைகளுக்குள்ளும், ஊடக வெளிகளிலும் பேசப்படுகிறது. முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரனா... மாவை சேனாதிராஜாவா..... ஈழப்பிரகடனப்புகழ் வரதராஜப்பெருமாளா ... இல்லையேல் சந்திரகாசனா என்பதுதான் இப்போது முன்னணியில் இருக்கும் பெயர் விபரம். முன்னாள் 'உதயன்' நாளிதழின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனின் பெயரை இப்பட்டியலில் காணவில்லை. ஏற்கனவே கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரத்தில், பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் அதன் தலைவர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியை சார்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமித்தால் முரண்பாடுகள் முற்றலாம். இதனால் ஏற்படும் உடைவுகளைத் தவிர்க்க உதவி புரியப்போகிறோம் என்று புறப்பட்டுள்ள சிலர், தாம் விரும்பும் நபர்களின் பெயர்களை முன்மொழிவதாகக் கூறப்படுகிறது.

நாடு கடத்தபடும் நாதியற்ற தமிழன்
[Tuesday, 2013-04-23 09:48:51]

' நீங்கள் எங்களை நாடுகடத்தலாம் ஆனல் எங்கள் தாய்தமிழீழத்தை எங்கள் மனதில் இருந்து நாடு கடத்தமுடியாது" ஈழத்தமிழன் என்றாலே அவனை அடையாள படுத்தும் முக்கியமான ஒரு சொல் தான் அகதி. அவன் இல்லாத நாடு ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஏனே ஈழத்தமிழர்களாகிய எஙகளை எவருக்கும் பிடிப்பதில்லை. நாங்கள் கதைத்தால் அது தீவிரவாதம் என்கிறார்கள் இதே எங்களை தினம் தினம் கொன்றுகுவித்தால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்என்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் இப்படி நாடு நாடகாக அலைவதற்கு. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த உலக்கு தெரியபடுத்த வேண்டும் போலிருக்கிறது.

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-04-21 10:07:52]

முன்னாள் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் றூட் அவர்கள் ,கடந்த மாதம் வெளியாகிய அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் சீன-அமெரிக்க எதிர்கால உறவு குறித்து கட்டுரை ஒன்றினை வரைந்துள்ளார். அதில் சீனாவின் புதிய அதிபர் சி சின்பிங் உடன் ,ஆசியாவின் மூலோபாய ஸ்திரநிலைமை (Strategic stability ) குறித்த பொதுவான இணக்கப்பாட்டினை நோக்கி அமெரிக்காவால் நகர முடியுமென்கிற வகையில் அவரின் செய்தி அமைந்திருந்தது. இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் உருவான யப்பானிய இராணுவமயம், பின்னர் சோவியத் யூனியனிற்கு மாற்றீடான மூலோபாய நகர்வுகள், இதன் நீட்சியாக யப்பான் மற்றும் தென் கொரியாவில் நிலை கொள்ளல் போன்றவற்றின் ஊடாக அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டாலும் , கிழக்கு மற்றும் தென் சீனக்கடற் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை மிகவும் சிக்கலானது என்று கெவின் றூட் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் - வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்! - ( பாகம் -15)
[Friday, 2013-04-19 12:31:08]

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது.

மூவர் தூக்கு... இனி, என்ன நடக்கும்?
[Thursday, 2013-04-18 09:29:07]

இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நேரத்தில், வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் டெல்லியில் இருக்கும் தகவல் ஆணையரிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாகத் தன்னுடைய கருணை மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற கேள்வியைக் கேட்கிறார். இந்தியாவிலேயே சிறையில் இருக்கும் கைதி ஒருவருடன் தலைமை - தகவல் ஆணையர் பேசுவது இதுவே முதல்முறை என்றாலும், பேரறிவாளன் கேட்ட கேள்வி களுக்குப் பதில் கிடைக்குமா என்பது விடை தெரியாத கேள்விதான்! 1993-ல் டெல்லியில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒன்பது பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பின் குற்றவாளியாக பஞ்சாபில் தனி நாடு கோரிய காலிஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், தேவேந்தர் பால்சிங் புல்லருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

கனடா லிபறல்க் கட்சியின் புதிய தலைமையும் புலம் பெயர் தலைமைகளும்: - பூநகரான் குகதாசன்
[Wednesday, 2013-04-17 21:25:41]

ஈழத் தமிழர் பிரச்சனை சர்வ தேச மயப்பட்டு விட்டதால் , உலக நாடுகளில் ஆட்சி அமைக்கவல்ல கட்சிகளின் தலைமைத் தெரிவுகளும் , மாற்றங்களும் கூட நம்மவரால் உற்று நோக்கப்பட வேண்டியனவாகிவிட்டன. அந்த வகையில் கனடாவின் பிரதான எதிர்க் கட்சியான லிபறல் கட்சியின் புதிய தலைமைத் தெரிவும் அவதானிப்பிற்குரியதாகின்றது.சுதந்திர இலங்கையில் கொழும்பில் மையம் கொண்டிருந்த நமது இன விவகாரம் , பெங்களுர் , திம்பு , புது டெல்கி எனப் பயணித்து , 2002 'ரணில் -பிரபா' ஒப்பந்தத்தின் பின் தாய்லாந்து , ஜேர்மனி , சுவிற்சலாந்து என உலக நகரங்களை வலம் வந்ததும் தெரிந்ததே.

முப்பது வருடப் போராட்டத்தில் வேண்டப்படும் நூறு நாட்கள்: - பனங்காட்டான்
[Saturday, 2013-04-13 08:40:09]

அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளும், இந்திய மற்றும் பாகிஸ்தான் குழுக்களின் ஏட்டிக்குப் போட்டியான இலங்கைப் பயணங்களும், இராணுவ நீதிமன்ற கண்டுபிடிப்புகளும் ஜெனிவாத் தீர்மானத்தை முழுமையாக இலங்கை நிராகரிப்பதும் எதனைக் காட்டுகின்றது!

ஈழத் தமிழரின் மூன்று தசாப்த விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய பல தகவல்களை 'விக்கிலீக்ஸ்' மீண்டும் பரபரப்பாக வெளிப்படுத்தி வருகின்றது. இவையனைத்தும் இலங்கையிலும் இந்தியாவிலும் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவ்வப்போது வாஷிங்டன் தலைமைக்கு அனுப்பி வைத்த ராஜரீக தகவல்கள்.

இராஜீக முதிர்ச்சியற்ற இலங்கையின் இளங்குயிலிற்கான பதில் - பூநகரான்
[Thursday, 2013-04-11 21:51:21]

தமிழக நடிகர் சங்கத்தினரின் ஈழத் தமிழரிற்கு ஆதரவான உண்ணாவிரதம் மற்றும் அறிக்கைகள் தொடர்பான சிறீ லங்கா பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மாலினி பொன்சேகா அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து வெளிப்பாடு அரசியற்தனமானது. இதில் தமிழக நடிகர்கள் சங்கத்தின் தீர்மானங்களில் வெளிப்பட்ட பக்குவத்தையும் , முதிர்ச்சியும் காணமுடியவில்லை. உண்மையில் தமிழக நடிகர்களின் தீர்மானங்கள் ஏழும் தமிழர் தரப்பின் அடிப்படைத் தேவைகளையே பிரதிபலிக்கவில்லை. இதனை விட மிதவாத அல்லது குறைந்த வலுவுள்ள தீர்மானம் எதையும் அவர்களால் தேடிக் கண்டு பிடித்திருக்க இயலாது. இருந்த போதும் , இந்திய தேசிய உணர்வை இயன்றளவு பாதிக்காது , அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? தை என்பது முடிந்த முடிவு! - நக்கீரன்
[Thursday, 2013-04-11 15:41:17]

விடிய விடிய இராமர் கதை விடிந்தபின் இராமருக்கு சீதை என்ன முறை கேட்டவன் கணக்காக தைத் திங்கள் முதல்நாள் தான் தமிழர்களது புத்தாண்டு திருவள்ளுவர் பிற்நத நாள் திருவள்ளவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை சிலர் செரிக்க மறுக்கிறார்கள். இது பொதுவாக மனித மனம் மாற்றத்தை இலகுவாக ஏற்றுக் கொள்வது இல்லை என்பதையே காட்டுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற கேள்விக்கு தமிழக சட்ட மன்றத்தில் சனவரி 28, 2008 இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட அடிப்படையில் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.

மூப்பனார் வாசனே! தமிழர் நெஞ்சங்களில் வாசம் செய்யுங்கள்
[Sunday, 2013-04-07 05:45:43]

தமிழக காங்கிரஸ் பிரமுகர் திரு ஜி கே வாசன் இந்தியப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங்கைச் சந்தித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு விபரங்கள் பல மாறுபட்ட பல்கோணச் சிந்தனைகளை பலரிற்கும் பலவாறு தோற்றுவிக்கும். எது எப்படி இருப்பினும் இந்தியப் பிரதமரின் பதில்கள் கண்டு தமிழர்கள் எங்கிருந்தாலும் கொதிப்படையக் கூடியதாக பொறுப்பற்றதாகவும் ஜனநாயக விரோதமானதாகவும் அமைந்துள்ளன. ஆனால் தமிழராகிய நமது கொதிப்பு காலப் போக்கில் வழமைபோல் இயல்பாகவே ஆறி விடும் என டெல்லியின் கபட அரச தந்திரம் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையில் தான் இந்தியத் தேசியம் தன்னையே பணயம் வைத்து தமிழக சட்ட சபையின் ஜனநாயக ரீதியிலான தீர்மானத்தை நிராகரித்துள்ளது என அமைச்சர் திரு சல்மான் குர்ஜித்தே கூறியிருந்தார்.

ஜநாசபை எனப்படும் பொய்நாசபை.
[Sunday, 2013-04-07 05:06:39]

ஜநா உலகத்தில் சமாதானத்தை காக்க பிறந்த அமைப்பாக உருவாகியது. ஆனால் தமிழர்கள் விடயத்தில் இன அழிப்பு நடத்தும் நாடுகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் அமைப்பாக உரிமைக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகள் என்று கூறும் அமைப்பாக இன்று இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், புவியல் அரசியல் என்று கூறிக்கொண்டு பாதுகாப்பு சபையில் இருக்கும் 5 வல்லரசு நாடுகளின் கையில் இன்று ஐக்கியநாடுகள் சபை இருப்பதால். இன்று இந்த வல்லரசுகளில் முக்கிய நாடுகளாகிய அமெரிக்க, பிரான்சு, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகள் சீன, ரசியா போன்ற மனிதவுரிமையை மதிக்காத நாடுகளிடம் தோற்று பொய் இருப்பதை இன்று நாம் பார்க்கலாம்.

பொதுபல சேனாக்களின் வருகை ஆட்சி மாற்றத்தைத் தடுக்குமா?
[Sunday, 2013-04-07 05:05:25]

தமிழகத்தில் தீவிரமடையும் மாணவர் போராட்டம், வெகுசன மட்டத்தில் விரிவடைகிறது.

'மனித உரிமை மீறல்' என்கிற, பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் குற்றச் சாட்டுக்களுக்கு அப்பால், இன அடியழிப்பு என்பதன் அடிப்படையில் மாணவர்களின் போராடக் கருத்துருவம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

6வது திருத்தச் சட்டம் தடுக்கும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாட்டை அவர்கள் பேசுகிறார்கள். பெரும்பான்மையான புலம் பெயர் ஈழத்தமிழ் மக்கள் , வட்டுக்கோட்டை தீர்மானம் மீது மீள்வாக்கெடுப்பினை மேற்கொண்டு, மாணவர்கள் முன்வைக்கும் அரசியல் கோரிக்கையைகடந்த நான்கு ஆண்டுகளில் உறுதி செய்துள்ளார்கள்.

ஆழ்ந்த தூக்கத்தில் ஈழத் தமிழர் - பூநகரான்
[Friday, 2013-04-05 21:45:11]

இராமாணயத்தில் ஒரு கட்டம். வானரச் சேணையுடன் மறத் தமிழன் இராவணனின் இலங்கா புரிக் கோட்டையை கருமலை செம்மலை போன்ற ஆரியச் சிங்கங்களான இராம இலக்குவர் சுற்றி வளைத்து விடுகிறார்கள். இந்த இடத்தில் கம்பன் எழுதிய வரிகள் வருமாறு. "கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து உறங்குவாய்" - இது கும்பகர்னத் தூக்கத்திற்கு கம்பன் எழுதியதாயினும் இந்த வரிகளிற்கு குறைந்தது நான்கு அர்த்தங்கள் இருக்கும் என்பதை மனதிலிருந்தி வாசிக்கவும். ஏனென்றால் இலக்கிய அடிகள் ஒரிரு பொருட்களுடன் எழுதப்படுபவை அல்ல. இதை தமிழ் இனி மெல்ல.. என்ற பாரதியின் வரிகளோடு தொடுத்துப் பார்த்தால் தமிழன் விழித்தாலும் ஒரே அடியாகக் கிடந்து காலா காலமாகக் கிடந்து உறங்க வேண்டிவந்துவிட்டது என கம்பனும் தமிழ் இனத்தையே அன்றே எச்சரித்ததாக எத்தனை பேரால் விளங்க முடியுமே எனக்குத் தெரியாது.

முள்ளிவாய்க்காலும் முற்ரத்து மண்ணும்.
[Friday, 2013-04-05 12:24:55]

உலக வரலாற்றில் இப்படியொரு வெறித்தனமான இனப்படுகொலை நடைபெற்றதேயில்லை. 2009 ம் ஆண்டு காலபப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது . இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களும் போராளிகளும் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். இந்த மகத்தான வித்துக்கள். உரிமைக்காக போரையும் போர்சார் விழுமியங்களையும் மதித்து தம் வாழ்வியலுக்கான உரிமைப்போரை ஈழதில் நடத்தினார்கள்.

உருட்டுக்கட்டை அரசியலும் ,தமிழக காங்கிரசின் இறுதிக் கணங்களும்: - இதயச்சந்திரன்
[Wednesday, 2013-04-03 14:39:26]

தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத் துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை ,அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது. வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து , மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

உலக ஒழுங்கினை மாற்றியமைக்குமா தென்னாபிரிக்கா மாநாடு? -இதயச்சந்திரன்
[Sunday, 2013-03-31 22:34:18]

அமெரிக்கத்தீர்மானம் , தமிழக சட்ட சபைத்தீர்மானம் , மாணவர் போராட்டம் என்று பலவாறான முன்னெடுப்புகள் நிகழும் இவ்வேளையில், தென்னாபிரிக்கா டர்பனில் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் ஐந்தாவது மாநாடு நடைபெற்றுள்ளது .

மாநாட்டிற்கும், இத் தீர்மானங்களுக்கும் என்ன உறவு என்கிற கேள்வி எழலாம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்பவற்றில், பிரேசிலைத் தவிர ஏனைய நான்கு நாடுகளும் ஏதோவொரு வகையில் நேரடித் தொடர்பாடல்களை இலங்கை விவகாரத்தில் கொண்டிருக்கின்றன.

உலக நாயக நடிகர்களின் முன் புலம் பெயர் தமிழர் முன் வைக்கக் கூடிய கோரிக்கை: - பூநகரான்
[Sunday, 2013-03-31 09:33:44]

உலகில் பல பற்றாக் குறைகளும் பஞ்சங்களும் தொடர்ந்தும் நிலவுகின்றன. இதில் தலைமைப் பஞ்சமும் சிந்தனை வரட்சியும் . வீர தீரமிக்க தமிழராகிய நம்மிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அர்ப்பணிப்பும் கடும் உழைப்பும் உள்ள அளவில் ஒரு சிறு வீதமாவது ராஜ (அரச) தந்திரம் வெளிப்படுவதில்லை. விருந்தோம்பல் மிக்க எங்களிற்கு இது இயலாத காரியமல்ல. ஆனால் தந்திரங்களைக் கையாள முனையாமை அல்லது முயலாமை தான் இதற்குக் காரணம். நெங்சில் உள்ள உரமும் நேர்மைத் திறனும் மறைந்திருந்து தாக்காது நேருக்கு நேரே என்ற எமது தேசிய அணுகுமுறைகள் தான் இதற்குக் காரணமே ஒழிய இதைத் தமிழரின் பஞ்சம் என்று முடிவு செய்ய இயலாது. அதாவது நமது சிந்தனைப் போக்கில் சிறு மாற்றமும் நிதானமும் கவனமும் தேவை அவ்வளவு தான்.

Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
INNSYS-20120930
NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com