Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
 
காதலைச் சொல்லச் சென்ற பெண் கார் விபத்தில் சிக்கினார்..
[Saturday 2017-03-25 21:00]

லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது. காதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார். காதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார் கிறிஸ்டிகாலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது. அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி பர்னஸும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.


புடவை விலகிய தமிழ் மணப்பெண்! சர்ச்சை புகைப்படம்!
[Saturday 2017-03-25 08:00]

கனடா நாட்டின் பத்திரிகை ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த இதழில் இடம்பெற்றுள்ள அட்டை புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டு இதழ் ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக வெளியிட்டது. அந்த இதழின் அட்டை புகைப்படத்தில் மணப்பெண் புடவை விலகி தொடை பகுதி தெரியும் படி இடம்பெற்றுள்ளது.


ஈழத் தமிழர்கள், லைக்கா வீடு, பேரு ரஜினிக்கு: 2.o படத்தை ஓட வைக்க ‘தில்லாலங்கடி வேலை’ ?
[Friday 2017-03-24 21:00]

எந்திரன் 2′ படத்தை ஓட வைக்க ரஜினி, லைக்கா நிறுவனத்தின் அடுத்த பம்மாத்து வேலைகள் ஆரம்பம். ரஜினியே கைக்காசு போட்டு கட்டித்தருவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. விவரம் படிங்க..!? யாழ்ப்பாணம் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் ! லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.


வவுனியாவில் தெருவில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள்..
[Friday 2017-03-24 21:00]

வவுனியாவில் அதிர்ச்சி தரும் தகவல் மீண்டும் வவுனியா நகரில் தலை தூக்கியுள்ளது விபச்சாரம் இது ஓர் திட்டமிட்ட சதியா என பலர் அச்சம் கொள்கின்றனர். வவுனியா நகர் பேருந்து நிலையத்தில் சிங்கள பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அறியப்படுகிறது. இப்பெண்கள் காலையில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தாம் தூர பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் போன்று ஆடை அலங்காரங்களை மேற்கொண்டு வாடிக்கையாளர்கட்காக காத்து நிற்கின்றனர்.


சுற்றுலா வந்த பெண்ணை சவப்பெட்டியில் தாய்நாட்டுக்கு அனுப்பிய இந்தியர்
[Friday 2017-03-24 20:00]

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில் அங்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெனியெல் மெக்லாப்லின் என்ற 28 வயதான பெண்ணே இந்தியாவின் கோவாவில் வல்லுறவின் பின் கொல்லப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பில் விகாத் பகத் என்ற 23 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே கொலை குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகள்படி பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


லண்டன் தாக்குதலை ‘செல்பி’ எடுத்தவருக்கு கடும் கண்டனம்
[Thursday 2017-03-23 20:00]

லண்டன் பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலை செல்பி’ எடுத்த நபருக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.


அநாதையாக கிடந்த குழந்தையை மீட்க உதவி ஹீரோவான நாய்: -
[Thursday 2017-03-23 17:00]

அமெரிக்காவில் ஆற்றோரம் அநாதையாக கிடந்த 3 வயது பெண் குழந்தையை மீட்பதற்கு உதவிய நாய் ஒன்று அந்த பகுதியின் ஹீரோவாகியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா என்ற பெயரில் விலங்குகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரலில் 2 வயது நிறைந்த பெட்டுனியா என்ற பெண் நாய் வந்துள்ளது. அதனை வளர்த்தவரால் தாக்கப்பட்டு 2 கால்களும் மற்றும் இடுப்பு உடைந்தும் அது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் சிகிச்சையால் உடல் நலம் பெற்ற இதனை வேறு ஒரு குடும்பம் எடுத்து வளர்த்து வருகிறது. அதற்கு பீனட் என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். அந்த குடும்பத்தின் பெண் உறுப்பினர் தனது பெயரை வெளியிடாமல் விலங்குகள் காப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


சுறாவிற்கு மதுபானம் பருக்கிய அமெரிக்க பல்கலை மாணவன் !
[Thursday 2017-03-23 07:00]

அமெரிக்க பல்கலை மாணவன் எனக்குறிப்பிடப்படும் ஒருவர், தான் அருந்தவேண்டிய மதுபான டின்னை, இறந்த சுறாவின் பல்லை கொண்டு திறந்து, பருகிய காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த காட்சியில், இளைஞன் தனது நண்பனிடம் சுறாவின் வாயை திறக்க சொல்லி, தனது கையிலிருந்த மதுபான திண்ணை உடைத்து பருகிய கட்சியினால் சமூகவலைத்தளத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


7 அடுக்குகளில் தயாரிக்கப்பட்ட பர்கர்: - விலை எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2017-03-21 16:00]

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே அதிக மதிப்புடைய 7 அடுக்குடைய பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.Dubai lifestyle magazine Villa 88 என்ற இதழின் நிறுவனர் Asma Al Fahim என்பவர், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பர்கரை தனது ராயல் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். துபாயில் உள்ள Dubai Mall's Galeries Lafayette எனும் மாலில், இந்த பர்க்கர் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் விலை 6.54 லட்சம் ஆகும். இதற்கு முன்னர் $7,000 தொகையில் பர்க்கர் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'தாயின் அருகில் அடக்கம் செய்யுங்கள்' ; சிறுவனின் கோரிக்கை
[Monday 2017-03-20 21:00]

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஃபிலிப்புக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறிகொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனப் பதைபதைத்துப் போகிறார் தந்தை. இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.


புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யும் மனி­தர்கள்..
[Friday 2017-03-17 20:00]

அமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­ கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது. இந்­நி­லையில் இது தொடர்பில் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கையில், செவ்வாய்க்கிர­கத்தில் எதிர்­கா­லத் தில் மனி­தர்கள் குடி­யேறும் பட்­சத்தில் அவர்கள் அந் தக் கிர­கத்­தி­லான நிலை­மை­க­ளுக்கு இசை­வாக்­க­ம­டைந்து உடல் மற்றும் மன ரீதி­யான மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி ஒருநாள் அவர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் என எச்­ச­ரித்­துள்­ளனர்.


16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை!
[Friday 2017-03-17 17:00]

விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் நாயால், 16 விமானங்கள் தாமதமடைந்ததால் குறித்த நாய் வேறு வழியின்றி சுட்டு கொள்ளப்பட்டுள்ளது.


அறுவை சிகிச்சை மூலம் அப்பாவாக மாறிய அம்மா: - மகளாக மாறிய மகன்!
[Thursday 2017-03-16 18:00]

லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை மூலம் முதலில் பெண்ணாக மாறினார். இவர் அவருடைய பெற்றோரிடம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பெண்ணாக உணர்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர்களுடைய முழு சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது பாலினத்தை மாற்றினார்.


உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது!
[Thursday 2017-03-16 18:00]

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல்பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறையானது , கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும். இந்த பவளப்பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுடலிகள், 3000 வகையான சிறிய பவளப்பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான திமிங்கலங்கள், டால்பின்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்துவிட்டதாகக் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது.


ஏலம் விடப்படும் ஹிட்லரின்பு கைப்படங்கள்:
[Tuesday 2017-03-14 18:00]

‌அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படங்களை ஏலம் விட சி அண்ட் டி (C AND T) நிறுவனம் முன்வந்துள்ளது. இயற்கைச் சூழலில் ஹிட்லர் ஓய்வெடுக்கும் சில அரிய புகைப்படங்கள் இந்தப் பழமையான‌ ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன.


ஒரு உயிரை பறித்த பயத்தில் 39 பேரை கொன்ற சாரதி..
[Monday 2017-03-13 20:00]

ஒருவரின் உயிரை பறித்ததற்காக, அயலவர்கள் தாக்குவார்கள் என்ற பயத்தில் வேகமாக ஓட்டிய பஸ்ஸால் 38 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஹெய்ட்டியில் இடம்பெற்றுள்ளது. ஹெய்ட்டியின் தலைநகரான போர்ச் அவ் பிரின்ஸ் பகுதியிலிருந்து கேப் ஹைட்டியென் நகரை நோக்கி சென்ற பஸ், ஒருவரை பலியெடுக்கவே, அயலவர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்ற சாரதி பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது மோதியதில், 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் ஆபத்தான நிலைமைகளில் சிகிச்சை பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


துபாயில் செல்போன் நம்பரை 8 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்: - ஆச்சரியத்தை ஏற்படுத்திய செயல்
[Monday 2017-03-13 13:00]

துபாயில் செல்போன் நம்பரை 8 கோடிக்கு ஏலம் எடுத்தவரின் செயல் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்விந்தர் சஹானி. இவர் பல வருடங்களுக்கு முன்பே துபாயில் செட்டிலாகி விட்டார்.இவர், கடந்த 1993ம் ஆண்டு குவைத்தில் ஆர்எஸ்ஜி சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர கார் டயர், உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் இந்தியா, அரபு நாடுகளில் நடத்தி வருகிறார்.இவர் செல்போன் மற்றும் கார் ஏலத்தில் ஆர்வமாக எப்போதும் பங்கேற்ப்பார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு தொலை தொடர்ப்பு நிறுவனம் நடத்திய செல்போன் பேன்சி நம்பர் ஏலத்தில் பல்விந்தர் கலந்து கொண்டார்.


ஜப்பானில் சவுதி மன்னர்: - நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு
[Monday 2017-03-13 08:00]

50 ஆண்டுகளில் சவுதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்.மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.சவுதி அரேபியாவுடனான உறவை விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தப் பயணம் பயன்படும் என்றும், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அதிக அளவில் நம்பியிருப்பதை விரிவாக்க எண்ணுகின்ற சவுதி அரேபியாவின் முயற்சிகளுக்கும் இது உதவும் என்றும் ஜப்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


காதல் திருமணம் செய்தவருக்கு 17 இலட்சம் ரூபா அபராதம்..!
[Friday 2017-03-10 21:00]

பழங்குடியின பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக, இளைஞர் ஒருவருக்கு 17 இலட்சம் அபராதம் விதித்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்துக்கள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்திலுள்ள பஜர் அபாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டதனால், தமது குடும்பத்திற்கு சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக குறித்த பெண் வீட்டார், பழங்குடியின நீதிமன்றமான ஜிர்காவில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.


'கிறிஸ் பேர்ட்டிஷ்' அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை.. '
[Friday 2017-03-10 21:00]

நின்றபடியே வலிக்கும் துடுப்புக்களுடன், தன்னந்தனியே, முதன்முதலாக அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் கிறிஸ் பேர்ட்டிஷ் என்ற தென்னாபிரிக்க நீர்ச்சறுக்கு வீரர். இதன்போது, ஒரே நாளில் எந்தவிதத் துணையும் இன்றி 71.96 கடல் மைல் தொலைவைக் கடந்து மற்றுமொரு சாதனையையும் கிறிஸ் படைத்துள்ளார். தனது சாதனைப் பயணத்துக்காகவென்றே சிறு தங்கும் அறை, சுறா மீன்களை அடையாளம் கண்டு தடுக்கும் தொழில்நுட்பம் உட்பட, சில நவீன அம்சங்களைக் கொண்ட ஒரு படகை அவர் வடிவமைத்திருந்தார்.


பூனைகளைத் திருடி,, சமைத்து சாப்பிட்ட கொலம்பிய நபர் கைது!
[Friday 2017-03-10 21:00]

பூனைகளைத் திருடி பலிகொடுத்து அவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கொலம்பிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டேவிட் அந்திரேஸ் (31) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸில் புகாரளித்தனர். அதன் பேரில் வீட்டைப் பரிசோதனையிட்ட பொலிஸார், பூனைகளின் தலைகள் மற்றும் தோல்கள் சிலவற்றைக் கண்டெடுத்தனர். அவை, காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பூனைகளின் தோற்றத்துடன் ஒத்துப்போவதாக இருந்தன.


உலகின் அதிக எடை கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்கு முன்பே 120 கிலோ குறைப்பு: - மருத்துவர்கள் தெரிவிப்பு
[Wednesday 2017-03-08 18:00]

உலகின் அதிக எடை கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்கு முன்னே 120 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் வசித்து வந்த இமான் என்ற பெண்மணிக்கு அவரது 11 வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தின் காரணமாக படுத்த படுக்கையானார். கடந்த 25 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இவரது உடல் எடை 500 கிலோவாக அதிகரித்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்த இவருக்கு உதவி செய்ய இந்தியா முடிவு செய்தது.அதன்படி, கடந்த மாதம் விமானத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடல் எடை குறைப்புக்கான ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.


2-வது திருமணம் செய்ய முயன்ற கணவன் ; நடுரோட்டில் வைத்து அடித்த மனைவி
[Monday 2017-03-06 19:00]

பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை நடுரோட்டில் வைத்து முதல் மனைவி அடித்து உதைத்து உள்ளார். பஞ்சாபை சேர்ந்த சோனு (42) என்பவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரபல ஓட்டலில் வைத்து 18 வயது பெண்ணை சோனு இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார்.


பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளருக்கு சிறைத் தண்டனை!
[Monday 2017-03-06 19:00]

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி விட்டு யுவதி ஒருவரிடம் 23 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்த Sooriyan FM அறிவிப்பாளர் Santhuru க்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட அறிவிப்பாளர் Sooriyan FM அறிவிப்பாளர் Santhuru தமிழ் யுவதி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி 23 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.


வானத்தில் தெரிந்த மர்ம உருவத்தால் பரபரப்பு
[Monday 2017-03-06 19:00]

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மக்களின் கண்களுக்கு வானத்தில் ஒரு மர்ம உருவம் தெரிந்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் Zambia பகுதியை சேர்ந்த kitwe எனும் நகரில் ஒரு புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மேல் ஒரு ஆவி போன்ற உருவம் அங்கிருந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அந்த மர்ம உருவத்தை பார்த்த பலர் தங்களின் செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.


கழிவறை துர்நாற்றத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கம்
[Sunday 2017-03-05 21:00]

பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் கழிவறையில் இருந்து வீசிய துர்நாற்றம் விமானியின் மூக்கை துளைத்ததால் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.ஸ்பைஸ்ஜெட்டிற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம் இன்று பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு குழந்தைகள் உள்பட 188 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாஜக மகளிர் அணித் தலைவர்! -அதிர்ச்சிகரமான தகவல்
[Saturday 2017-03-04 18:00]

மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூகி சவுத்ரிக்கு குழந்தைகள் கடத்தலில் உள்ள தொடர்பு குறித்து புதிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிஸ்கட் கொண்டு செல்லும் பெட்டிகள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை கண்டுபிடித்த சிஐடி போலீசார், இதுதொடர்பாக தனியார் தொண்டு நிறுவன தலைவர் சந்தானா சக்கரபோர்த்தி மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர்.


பெண்ணுறுப்பிலிருந்து பசு நாக்கு ஆபரேஷன் மூலம் வெளியேற்றம்..
[Saturday 2017-03-04 08:00]

சென்ற வருடம் அமெரிக்கன் அறிவியல் சமூகம் நடத்திய ஆய்வொன்றில், வாய் வழி செக்ஸில் ஈடுபடுவதால் எச்.பி.வி எனப்படும் மனித பாபில்லோமா நோய்க்கிருமி பரவுகிறது என கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் மேற்கத்திய பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிறவழி செக்ஸில் ஈடுபடும் பொதும், நாக்கு கொண்டு அந்தரங்க பகுதிகளை தீண்டும் போதும், பார்ன் தாக்கத்தில் சில செயல்களில் ஈடுபடுவதாலும் அதிக தாக்கங்கள் உண்டாகின்றன என அறியப்பட்டுள்ளது.


மிரள வைக்கும் வசதிகளுடன் ஜனாதிபதி ட்ரம்பின் கார்..
[Saturday 2017-03-04 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பயன்பாட்டிற்காக 1.2 மில்லியனில் பல சிறப்புகளை கொண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உபயோப்படுத்த லிமோசின் ரக சிறப்பு கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத கடைசியில் இந்த கார் வெள்ளை மாளிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிளிநொச்சி - பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம்!
[Friday 2017-03-03 23:00]

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழி தோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பில் வைத்தியர்களின் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது,

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா