Untitled Document
March 28, 2024 [GMT]
 
சிங்கப்பூரில் உண்மையாகவே நடத்தப்பட்ட Squid Game போட்டி: தமிழகத்தை சேந்தவர் வெற்றி!
[Friday 2023-06-02 06:00]

சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம் போன்ற ஒரு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். தென் கொரிய தொடரான ​​ஸ்க்விட் கேம் (Squid Game) பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Netflix இல் வெளியான பிறகு, இந்தத் தொடர் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


உருளைக்கிழங்கு சீவலால் சாதனை படைத்த இலங்கை!
[Thursday 2023-06-01 17:00]

இலங்கையின் முதலாவது, உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை பெரும் வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ரூ. 100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது, உருளைக்கிழங்கை பெறுமதி மிக்க பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதே என அமைச்சர் தெரிவித்தார்.


டிப்ளமோ பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!
[Saturday 2023-05-27 18:00]

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.


பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழ ரகம்!
[Monday 2023-05-22 18:00]

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் திட்டமிட்டார் உபேந்திரா சிங். இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்தார்.


ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!
[Saturday 2023-05-20 17:00]

பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டாகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் புது புது அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வழங்கிக்கொண்டு வருகிறது.


பிறந்த குழந்தையின் உடலில் மூன்று பெற்றோரின் DNA!
[Wednesday 2023-05-10 18:00]

பொதுவாக, பிள்ளைகளின் உடலில் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் DNA மட்டுமே இருக்கும். ஆனால், பிரித்தானியாவில் முதன்முறையாக மூன்று பேருடைய DNAவுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மனித உடல், பல செல்களால் ஆனது, அந்த செல்களுக்குள் பல நுண்ணிய உள்ளுறுப்புகள் உள்ளன, அவற்றில் ஒன்று மைட்டோகாண்ட்ரியா. உணவை ஆற்றலாக மாற்றும் பணியை இந்த மைட்டோகாண்ட்ரியா செய்கிறது.


ஸ்பெயினில் ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்!
[Sunday 2023-04-30 17:00]

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.


அமெரிக்காவில் நிர்வாண உணவு விருந்து!
[Friday 2023-04-28 18:00]

அமெரிக்கா - நியூயார்க்கில் ஆடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, சற்று வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக இருப்பதாக அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு!
[Wednesday 2023-04-26 19:00]

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.


24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை!
[Friday 2023-04-21 17:00]

தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அங்கு உள்ள கோரட்லா எனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆன் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஒவ்வொரு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களை கொண்டு பிறந்துள்ளது. இந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு!
[Wednesday 2023-04-19 19:00]

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறதாக கூறப்படும் நிலையில் இந்த அரிய நிகழ்வானது அவுஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.


பூனை குட்டியை ஈன்ற ஆண் பூனை: வியப்பில் மருத்துவ உலகம்!
[Friday 2023-04-14 18:00]

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அணில் பிஸ்வாஸ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட 'மோகி' எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பூனைக்குட்டியை ஈன்றது. அந்த பூனையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு திரண்டு கண்டு ரசித்து வருகின்றனர்.


நடந்து செல்லும் அதிசய மாமரம்!
[Wednesday 2023-04-12 18:00]

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் என்ற கிராமம் உள்ளது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகே அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை உள்ளது. அதில், மிக பழமை வாய்ந்த மாமரம் ஒன்று உள்ளது. 1,300 ஆண்டுகளுக்கு முன்பு பார்சி இன மக்கள் இந்த பகுதியில் வந்து குடியேறினர். அவர்களால் இந்த மாமரம் நடப்பட்டு இருக்கும் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


விலங்குகளுக்கு வழங்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள்!
[Saturday 2023-04-08 17:00]

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு ஈஸ்டர் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் லண்டனில் உள்ள ZSL உயிரியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான பல்வேறு உயிரினங்கள் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.


ஊரே வியக்கும் அளவுக்கு தங்கைக்கு கோடிக்கணக்கில் வரதட்சணை வழங்கிய பாச சகோதரர்கள்!
[Wednesday 2023-03-29 18:00]

சகோதரியின் திருமணத்திற்கு ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி, வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக பார்க்கப்படுகிறது.


மரணத்தை அனுபவிக்க புதிய கண்டுபிடிப்பு!
[Tuesday 2023-03-28 18:00]

மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் (Passing Electrical Storms) என்ற Vertual Reality அமைப்பை உருவாக்கியுள்ளார்.


8 அடி 3 அங்குல நீள தாடி வளர்த்து சாதனை படைத்த மனிதர்!
[Friday 2023-03-24 18:00]

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கின்றது. ஆனால், அவர்கள் சாதிக்கும் விதம்தான் வித்தியாசமாக உள்ளது. உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடமாடுவதில் சாதனை இப்படி ஒவ்வொரு விடயத்திலும் தினம் தினம் பல பேர் சாதித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, தாடி வளர்த்ததன் மூலம் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பதை நம்ப முடிகின்றதா?


500 கோடியில் நடந்த பிரம்மாண்டமான திருமணம்!
[Thursday 2023-03-23 06:00]

திருமணம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வுதான். அதனால் தான் அந்த திருமணத்தை சிலர் ஆடம்பரமாக திருவிழா போல செய்வார்கள். இவ்வாறு அம்பானியுடன் போட்டி போடும் வகையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றுதான் இந்த திருமணம். 500 கோடி செலவழித்து அமோக திருமணம் ஒன்று நடந்திருக்கிறது.


அலைச்சறுக்கில் புதிய உலக சாதனை படைத்த வீரர்!
[Saturday 2023-03-18 17:00]

தினம் தினம் எத்தனையோ விடயங்கள், சாகசங்கள் நம்மைச் சுற்றி நடந்தவண்ணமே உள்ளன. அவற்றைப் பார்க்கும்பொழுது இப்படியும் செய்யமுடியுமா? என்ற ஆச்சரியம் நமக்குள் எழும். பொதுவாக கடல் என்றாலே சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு அதன் வேகமான அலையைக் கண்டால் பயம் ஏற்படும். அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அலைச்சறுக்கு வீரர் ஒருவர்.


விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆசையா? - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
[Friday 2023-03-17 19:00]

நிலவை பார்த்து அதில் ஓரு பாட்டி வடை சுட்டுவதாக கதை சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் அந்த நிலா என்ன விலை என கேளுங்கள் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். இப்போதே ராக்கெட் எடுத்து போய் பார்த்து வருகிறேன் என்ற நிலைக்கு காலம் சென்று கொண்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் spacex நிறுவனம் ஏற்கனவே பல வெற்றிகரமான விண்வெளி சுற்றுலா பயணங்களை நடத்திவிட்டது. மற்ற விண்வெளி நிறுவனங்களும் அதை பின்பற்றி விண்வெளி சுற்றுலாவிற்கு தயாராகி வருகிறார்கள்.


மனித மலத்தை முகர ஆள்தேடும் நிறுவனம்!
[Tuesday 2023-03-14 18:00]

மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலைக்கு ஆள் தேடி வருகிறது லண்டனை சேர்ந்த சுகாதார நிறுவனம். மலத்தை முகர்ந்து பார்க்கும் ஒரு எக்ஸ்பர்ட்டை தேடி வருகிறது யூ.கே.வை சேர்ந்த ஃபீல் கம்ப்லீட் என்ற நிறுவனம். குடல் ஆரோக்கிய ஆலோசனை சேவை நிறுவனமான ஃபீல் கம்ப்லீட், இந்த பணியில் சேருபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் மாதச் சம்பளமாக (1500 யூரோ) வழங்கவுள்ளது.


நெதர்லாந்தில் மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான அதிசயம்! Top News
[Sunday 2023-03-12 07:00]

நெதர்லாந்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் டச்சு வரலாற்றாசிரியரான லோரென்சோ ரூய்ட்டர்(27) 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளார்.


உலகில் மிக அழகான மக்கள் எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?
[Tuesday 2023-03-07 18:00]

அழகானவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்த இடம் எத்தனையாவது தெரியுமா? இந்தப்பட்டியலை ரெட்டிட் (Reddit) தளம் வெளியிட்டுள்ளது.


ஒன்றாரியோ தமிழ் சகோதாரர்களுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!
[Wednesday 2023-03-01 18:00]

கனடாவின் ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் தமிழ் சகோதாரர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் வெற்றியீட்டியுள்ளனர். லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர்.


"காதலர்களுக்காக முத்த கருவி" - சீனா அசத்தல்!
[Sunday 2023-02-26 08:00]

சீனாவை சேர்ந்த ஜியாங் சோங்லி என்ற நபர், தொலைதூரக் காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக் கொள்வதற்காக remote Kissing device என்ற புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளார். சீனாவில் உள்ள சாங்கோ தொழிற்கல்வி என்ற நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி உலகம் முழுவதும் பயனர்களை மின்னணு முறையில் முத்தம் அனுப்ப இந்த சாதனம் அனுமதிக்கிறது.


இணையத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள கருப்பு நிற நூடுல்ஸ்!
[Monday 2023-02-20 19:00]

உணவு முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றதுபோல ஒவ்வொரு விதமாக இருக்கும். பொதுவாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் வாழை இலையை விரித்து அறுச்சுவைகளையும் ஒரு இலையில் வைத்து உண்பார்கள். அதுவே வேறு வெளிநாடுகளில் புதுபுது உணவுகளை கண்டுப்பிடித்து வாய்க்குள் நுழையாதபடி பெயர்களை வைத்து பிரபல்யமாக்கி வருகிறார்கள்.


ஆவியைத் திருமணம் செய்த பெண் வயிற்றில் குழந்தை?
[Saturday 2023-02-11 18:00]

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் தங்கள் திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளதாகக் கூறி மன நல ஆலோசகர்களை அணுக இருப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது அவருக்கு புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது. பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde என்னும் பெண், நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.


உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்!
[Wednesday 2023-02-08 06:00]

பொதுவாக வீடுகளில் பண்டிகை நாள் வந்து விட்டாலே கொண்டாட்டம் தான். இதன் போது பல வகையான பலங்காரங்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என பல வகையான சாப்பாடு வகைகள் இருக்கும். இதனாலே வீட்டிலுள்ளவர்கள் பண்டிகை என்றால் குஸியாக சுற்றித்திரிவார்கள். குழநதைகளுக்காக சில இனிப்புகள் செய்வார்கள்.


செவ்வாய் கிரக மேற்பரப்பில் கரடியின் முகம்! Top News
[Wednesday 2023-02-01 18:00]

செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றன. இங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு மும்முரமாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் மிருகம் ஒன்றின் முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.


தினமும் 15 லிட்டர் பால் கறக்கும் அதிசய எருமை மாடு!
[Sunday 2023-01-29 08:00]

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த கஜேந்திரா என்ற எருமை மாடு தான் அது. சினிமாவில் வருவது போல சிறப்பு அலங்காரத்தோடு அந்த எருமை மாடு ஜொலித்தது.

 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா