Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
 
மலச்சிக்கலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ சில வழிகள்..
[Wednesday 2012-12-05 19:00]

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.


அதிக வெயிலில் உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை சிறுநீரகக் கற்களை தோற்றுவிக்கும்
[Wednesday 2012-12-05 19:00]

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்.. அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள்.


நெருப்பே இல்லாமல் இரண்டே நிமிடத்தில் முட்டை அவிக்கும் கருவி!
[Wednesday 2012-12-05 18:00]

நெருப்பு இல்லாமல், ரசாயனங்களின் உதவியுடன் முட்டையை இரண்டே நிமிடத்தில் வேகவைக்கும் பேப்பர் கூடு கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஈஸியாக முட்டை வேக வைக்கும் வழிமுறை குறித்து எவ்கனி மார்கலேவ் தலைமையில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி செய்தனர்.


முகச்சுருக்கத்தைப் போக்கி இளமையை கொடுக்கும் நத்தை மசாஜ்! Top News
[Tuesday 2012-12-04 21:00]

காய்கறிகளை முகத்தில் பூசியாகிவிட்டது. சந்தனத்தையும், தயிரையும் தடவியாகிவிட்டது. பழச்சாறுகளை ஊற்றி குளிப்பாட்டியாகிவிட்டது. இப்போது நத்தையைக் கொண்டு மசாஜ் செய்யத்தொடங்கிவிட்டனர். இந்த நத்தை மசாஜ் முகச்சுருக்கத்தைப் போக்குவதோடு இளமையை தக்க வைப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.


வாயுத் தொல்லையை தடுப்பதற்கான இலகு வழிகள்...
[Tuesday 2012-12-04 21:00]

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் வாயுப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான். ஏனெனில் உணவை உண்ணும் போது எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல், நடந்து கொள்கின்றனர். இதனால் பல இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாயுத் தொல்லை ஒரு பெரிய பிரச்சனை இல்லை தான் என்றாலும், சிலர் இவற்றிற்கு அளவு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


சளித் தொல்லைக்கு நீண்ட கால நிவாரணி இயற்கை மருந்தான கருந் துளசி -
[Tuesday 2012-12-04 19:00]

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.


பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் சில..
[Monday 2012-12-03 21:00]

பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!


நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த பானங்கள் பற்றிய தகவல்கள்..
[Monday 2012-12-03 21:00]

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மேலும் அவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும், அவற்றை அளவோடும், சாப்பிடலாமா, வேண்டாமா என்று பயந்து கொண்டே சாப்பிட வேண்டியுள்ளது. அதிலும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தான் அவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எங்கேனும் வெளியே வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால், ஏதாவது ஒரு நீர்மத்தை குடித்தால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் நினைப்போம். அதனால் ஏதாவது ஒரு ஜூஸை வாங்கியோ அல்லது செய்தோ குடிப்போம். ஆனால் அதுவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணும் உணவை சாப்பிடுவதிலேயே யோசிக்கிறார்கள். ஜூஸ் சாப்பிடுவதில் யோசிக்க மாட்டார்களா என்ன?


நாலு சக்கர காரில் ஃப்ரேக்,ஆக்சிலேட்டர்,கிளர்ச் போன்றவற்றை கையாலேயே இயக்கும்படியாக அமைத்தார். Top News
[Monday 2012-12-03 14:00]

3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட உதயகுமார் தன்னம்பிக்கையால் தன் குறைகளை மாற்றியமைக்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைவருக்கும் பயன்படக் கூடிய கையால் இயக்கும் காரை வடிவமைத்துள்ளார். அதே நாலு சக்கர காரில் ஃப்ரேக்,ஆக்சிலேட்டர்,கிளர்ச் போன்றவற்றை கையாலேயே இயக்கும்படியாக அமைத்து வெற்றிகரமாக மற்றவர்களுக்கும் செய்துகொடுத்து வருகிறார்.


திருமண காலங்களில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள்..
[Monday 2012-12-03 12:00]

காலேஜ் படிக்கும் போது, உணவிற்கு எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையுமின்றி சந்தோஷத்துடன் சென்று கொண்டிருக்கும். அப்போது அழகைப் பற்றிய எண்ணமே அதிகம் இருக்காது. அதிலும் நண்பர்கள் சந்தோஷமாக இருந்தால், நம் வயிற்றில் என்ன செல்கிறது என்று கூட தெரியா அளவில் சாப்பிடுவோம். ஆனால் அந்த காலேஜ் முடிந்து, வேலை சென்று கொண்டிருக்கும் போது கூட சில நேரங்களில் உடலின் மீது எந்த அக்கறையும் சிலருக்கு இருக்காது.


வயதான தந்தைக்கு பிறக்கும் குழந்தைக்கு மன வளர்ச்சி குறைபாடு ஏற்படும் - ஆய்வில் தகவல்
[Sunday 2012-12-02 19:00]

வயதான அப்பாவாவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் 20 முதல் 30 சதவிகிதம் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தையர் வயதானவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே நாற்பது வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்க தம்பதியர் குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆண்களுக்கு வயதானபின்னர் விந்தணுக்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைய ஆரம்பிப்பதே இதற்கு காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


கண்களுக்கு கெடுதல் தரும் செயல்கள் - அவசியம் அறியவேண்டியவை
[Sunday 2012-12-02 18:00]

சில நேரங்களில் நாம் செய்யும் ஒருசில செயல்களாலேயே கண்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது தெரியாது. அதிலும் அது சாதாரணமான விஷயங்களாகத் தான் இருக்கும். இவ்வாறு கண்களுக்கு அதிகமான அளவில் கஷ்டம், அழுத்தம் போன்றவை தருவதால், வேறு பல நோய்களும் உடலில் வருகின்றன. மேலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


இளம் வயதில் நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற, உணவுக் கட்டுப்பாடு அவசியம்...
[Sunday 2012-12-02 18:00]

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு ஆரோக்கியமான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொறுமை யாருக்கும் இல்லை. அதனால் நிறைய மக்கள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் அவ்வாறு ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவை ஏற்பட்டு, இதனால் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றன.


தினமும் 6000 அடிகள் நடந்தால் பெண்களுக்கு நோயே வராதாம்..!
[Saturday 2012-12-01 21:00]

தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டிய உடனே நீரிழிவு தொடங்கி இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து குடியேறிவிடுகின்றன. உடல் நோய்களோடு மனஅழுத்தமும் சேர்ந்து பெண்களை பாடாய் படுத்திவிடும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.


சுடு தண்ணீர் ஷவரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்..
[Saturday 2012-12-01 20:00]

சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்..


குழந்தைகளுக்கு கண் பரிசோதனையின் அவசியம்..
[Saturday 2012-12-01 20:00]

பள்ளி செல்லும் குழந்தைகள் திடீரென பார்வை மங்கிப்போய் தலையைப் பிடித்துக்கொண்டு அமரும் போதுதான் அவர்களுக்கு கண்பார்வையில் கோளாறு என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர ஆரம்பிக்கின்றனர். பார்வை கோளாறு ஏற்பட்டபின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட நோய் வரும் முன் அதற்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொண்டால் குழந்தைகளை கண்பார்வை கோளாறுகளில் இருந்து பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். எப்படி கண்டறிவது?


நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்
[Friday 2012-11-30 22:00]

அழகுப் பொருட்களில் ஒன்றான நெயில் பாலிஷ் ரிமூவர், நெயில் பாலிஷ்ஷை ரிமூவ் செய்வதற்கு மட்டும் பயன்படவில்லை. பல பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. அதிலும் சாதாரண கறைகளை நீக்கப் பயன்படுவதைவிட, கடினமான கறைகளை அகற்றப் பயன்படுவதில் சிறந்தாது என்று சொல்லலாம். சரி, இப்போது அந்த நெயில் பாலிஷ் ரிமூவர் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!


என்றும் இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..
[Friday 2012-11-30 22:00]

இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பது தான் மிகவும் கடினமானது. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளித்தனர். இதற்கு அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம்.


கொலஸ்ட்ரோல் அதிகம் இருப்பவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்
[Friday 2012-11-30 22:00]

உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம்.


மழை காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்க உண்ண வேண்டிய உணவுகள்..
[Thursday 2012-11-29 22:00]

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


குளிர்பானம் அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்..!
[Thursday 2012-11-29 19:00]

காபி, டீ குடிக்கிறார்களோ இல்லையோ கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகமாகி வருகிறது. போதாக்குறைக்கு பீஸா, பர்கர் வாங்கினால் இலவசமாக கூல்டிரிங்க்ஸ் கொடுக்கின்றனர். இதுபோன்று தினசரி ஒரு பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு புரஸ்டேட் சுரப்பி புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 45 வயது முதல் 73 வயது வரையிலான 8ஆயிரம் ஆண்களை எடுத்துக் கொண்டார்கள். சராசரியாக 15 வருட உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளனர். இதன்படி, நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.


ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் இயற்கை மூலிகைகள்!
[Wednesday 2012-11-28 18:00]

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.


கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிக்காய்
[Tuesday 2012-11-27 19:00]

அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.


அடிக்கடி வரும் தலைவலியை தடுக்க சில வழிகள்..
[Tuesday 2012-11-27 18:00]

அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.


Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..
[Tuesday 2012-11-27 16:00]

கூகுளின் குரோம் தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.


ஹார்ட் அட்டாக் வரப்போவதை தலைமுடியின் மூலமே அறியலாம் - கனடா ஆய்வாளர்கள் தகவல்
[Monday 2012-11-26 21:00]

மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேற்று வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.


ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்
[Monday 2012-11-26 21:00]

கூந்தலை காய வைப்பதற்கு 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது. அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது. ஏனெனில் குளித்தது முடித்ததும் முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும்.


கிரீன் டீ குடிப்பதன் மருத்துவ பலன்கள் ..
[Monday 2012-11-26 21:00]

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்..


காரமான உணவுகள் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்
[Sunday 2012-11-25 22:00]

பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!
[Sunday 2012-11-25 09:00]

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.

SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா