Untitled Document
March 28, 2024 [GMT]
 
இரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் ஊறவைத்த பேரிச்சம்பழம்!
[Monday 2023-10-23 07:00]

பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அலப்பரிய நன்மை பயக்கும். ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் காலை உணவில் பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஊறவைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


இரவு முழுவதும் தலையில் எண்ணெய் தேய்த்து படுப்பது நல்லதா?
[Saturday 2023-10-21 16:00]

இரவு நேரங்களில் தலையில் எண்ணெய் வைத்து கொண்டு உறங்குவது நல்லதா என்பதனை இந்த பதிவின் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆண்களா இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. இது தலையில் உள்ள முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது அத்துடன் உடலில் இருக்கும் வெப்பத்தையும் தணிக்கிறது. பலர் இரவில் முடிக்கு எண்ணெய் தடவிவிட்டு தூங்கச் செல்ல விரும்புகிறார்கள்.


இரவில் பால் குடித்தால் ஆபத்தா?
[Friday 2023-10-20 18:00]

பொதுவாக இப்போது அனைவரும் போதுமான தூக்கம் பெறுவதில் பல சிரமங்கள் இருக்கிறது. போதுமான தூக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக அவசியமாகிறது. தூக்கமின்மை பிரச்சினைகளால் உங்கள் உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்படுவதோடு இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அந்தவகையில், உங்கள் தூக்கத்தை பாதிக்கும் விடயங்களில் உணவுத் தேர்விற்கு ஒரு பங்கு இருக்கிறது.


முருங்கை கீரை இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா?
[Thursday 2023-10-19 18:00]

வீதிகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. முருங்கை இலைகளின் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடித்து, முருங்கை இலை பொடி என பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்!
[Wednesday 2023-10-18 18:00]

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். இப்படி ஆரோக்கியதிற்கு அளப்பரிய நன்மை பயக்கும் வெள்ளரிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்தும் எந்த நோய்களுக்கு தீர்வு கொடுக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் K!
[Tuesday 2023-10-17 18:00]

வைட்டமின் கே என்பது இரத்தம் உறைதல், எலும்பு ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது. அறிவாற்றல் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்ற வைட்டமின்-கே யின் நன்மைகள் குறித்தும் இந்த வைட்டமின் செறிந்து காணப்படும் உணவுகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.


அதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா?
[Monday 2023-10-16 18:00]

அதிகாலையில் தூங்கி எழுவது பல நன்மைகளை அளிக்கின்றது. ஆம் உடலுக்கும், மனதிற்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிகாலையில் எழும்புவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதுடன், மூளை நரம்பு இயக்கங்களும் சீராக செயல்படுவதுடன், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கின்றது.


யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது?
[Sunday 2023-10-15 16:00]

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் மாதுளம் பழம். இதன் நிறம் மற்றும் சுவை காரணமாக உலகளவில் அனைவராலும் விரும்பப்படுகின்றது. மாதுளம் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏறாளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவ்வாறு அலப்பரிய நன்மைகளை மாதுளம் பழம் கொண்டிருந்தாலும் அதில் பலரும் அறிந்திராத பல பக்க விளைவுகளும் காணப்படுகின்றது.


உள ஆரோக்கியம் தரும் ஒலி குளியல் பற்றி தெரியுமா?
[Sunday 2023-10-15 08:00]

பொதுவாக குளியல் என்றதுமே நினைவில் வருவது நீர் தான். காரணம் தொன்றுதொட்டு நாம் தண்ணீரில் தான் குளிக்கின்றோம். அது குளிர்ந்த நீராகவோ அல்லது வெந்நீராகவோ இருக்கலாம். தற்காலத்தை பொருத்தவரையில் நீராவியிலும் குளியல் என பலரும் ஆரம்பித்துவிட்டார்கள் அதையும் தாண்டி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் ஒலி குளியல் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இது எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது குறித்தும் இதன்நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.


அழகை மெருகூட்டும் வைட்டமின் E!
[Friday 2023-10-13 18:00]

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சிறப்பாக செயற்படுவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தது தான். அந்த வகையில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான எட்டு ஊட்டச்சத்துக்களில் தனித்துவமான பங்கை கொண்டிருப்பது தான் வைட்டமின் ஈ சத்து.


இரவு நேரங்களில் நாம் செய்யும் தவறுகள்!
[Thursday 2023-10-12 18:00]

பொதுவாக திடீரென உடல் எடை அதிகரிக்க நாம் விடும் சில தவறுகள் தான் காரணமாகும். நாம் காலையில் செய்யும் சில தவறுகளை விட இரவில் தூங்குவதற்கு முன் நாம் விடும் தவறு உடலில் அதிகமான தாக்கத்தை செலுத்தும். பிடிவாதமான கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல.


வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை: ஏன் தெரியுமா?
[Wednesday 2023-10-11 18:00]

பொதுவாக கண்களின் ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த பங்கு வகிக்கும் வைட்டமின் -ஏ உடலில் ஏற்படக்கூடிய 50 சதவீதம் தோல் நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது. சிறுவயதில் ஏற்படக்கூடிய உடல் பிரச்சினைகள் தொடக்கம் முதல் வயதானவர்களில் உடல் பிரச்சினைகள் வரை வைட்டமின்-ஏ தாக்கம் செலுத்துகின்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாக விளங்கும் வைட்டமின்-ஏ எந்த உணவுகளில் அதிகமாக கிடைக்கின்றது என்பது குறித்தும் இதனால் உடலுக்கு கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.


மரவள்ளி கிழங்குடன் ஏன் இஞ்சி சாப்பிட கூடாது?
[Tuesday 2023-10-10 18:00]

பொதுவாகவே தொன்றுதொட்டு மரவள்ளி கிழங்குடன் இஞ்சி கலந்த உணவுகளை உட்கொள்வது உயிராபத்தை ஏற்படும் என கூறப்பட்டு வருகின்றது. அறிவியல் வளர்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது என சொல்லிவைத்திருக்கின்றார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது ? இதன் பின்னால் காணப்படும் அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பதற்றத்தை குறைக்கும் உணவுகள்!
[Monday 2023-10-09 18:00]

பொதுவாக நம்மில் சிலருக்கு திடீரென மனஅழுத்தம் அதிகரிக்கும் பொழுது இயற்கையாகவே பதட்டம் ஏற்படும். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் பதறுவார்கள். அவர்களை அவர்களே கட்டுபடுத்தினால் தான் சரியாகும். இந்த மாதிரியான பதட்டம் நம்மை நெருங்கக் கூடிய ஆபத்திலிருந்து நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய உடலின் ஒரு ரியாக்ஷனாக அமைகிறது.


30 நாளைக்கு டீ குடிக்காமல் இருந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்!
[Sunday 2023-10-08 17:00]

பொதுவாகவே நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காமல் பொழுதே போகாது. ஒரு டீ கொடுத்தாலும் அதை ரசித்து ருசித்து குடிப்பார்கள். சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் ஒரு நாளைக்கு டீ இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு தூக்க செல்லும் வரைக்கும் தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள டீ -யை அதிகம் அருந்துவார்கள். அவ்வாறு நாள் ஒன்றுக்கு அதிக டீ அருந்துவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.


வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்?
[Saturday 2023-10-07 07:00]

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.


அரிசி, உளுந்து இல்லாமல் தோசை ஊற்றலாம்: எப்படி?
[Thursday 2023-10-05 18:00]

பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அவ்வாறு வீடிகளில் தோசை செய்யும் போது மாவோ அல்லது உளுந்தோ இல்லை என்றால் கவலை இல்லாமல் தோசை ஊற்றலாம். எப்படி மாவும் உளுந்தும் இல்லையென்றால் செய்வது என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாகத் தான் இருக்கும் அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.


ஒட்டு மொத்த உடல் பிரச்சினைக்கும் தீர்வாகும் நீச்சல் பயிற்சி!
[Wednesday 2023-10-04 18:00]

பொதுவாகவே அனைவரும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யாமல் உணவு கட்டுப்பாடுகள் இன்றி இலகுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர் ஆனால் இது எந்தளவு சாத்தியம் மற்றும் ஆரோக்கியம் என்பது குறித்து பலரும் சிந்திப்பது கிடையாது. ஆரோக்கியமான முறையில் அதிக நேரம் உடலை வருத்தாமல் நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி தான் நீச்சல் பயிற்சி.


6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவரா நீங்கள்? - எச்சரிக்கை!
[Tuesday 2023-10-03 18:00]

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படும் நிலையில், 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தூக்கமின்மை பிரச்சினையை பலரும் எதிர்கொண்டு வருவதுடன், செலபோன் மோகம் அதிகரித்து தூங்கும் நேரத்தை தாமதப்படுத்துகின்றது.


ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஊறவைத்த வேர்கடலை!
[Monday 2023-10-02 16:00]

நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நல்லது மட்டுமல்ல ஆரோக்கியம் நிறைந்தது என்று சொல்வார்கள். மேலும், நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும் என்பதால் இதனை அப்படியே சாப்பிட்டால் ஒரு சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும்.


விஷமாக மாறும் உணவுகள்!
[Sunday 2023-10-01 17:00]

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை மிச்சம் வைத்து அடுத்த நாள் வரைக்கும் வைத்து சாப்பிடுவோம். அதிலும் வேலைக்கு செல்பவர் காலையில் சமைத்த சாப்பாட்டை அன்றைய தினம் முழுக்க வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இவ்வாறு சாப்பிடும் போது அது பின்னாளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு மிச்சம் வைத்து சாப்பிட கூடாத சில உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


கொய்யா இலையின் மருத்துவ நன்மைகள்!
[Saturday 2023-09-30 16:00]

பொதுவாக நமக்கு உடலில் காயம் அல்லது ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சில இலைகளைக் கொண்டு கை மருந்தாக பயன்படுத்துவார்கள். அப்படி பல நற்பயன்களை கொண்ட கொய்யா இலையில் எண்ணிலடங்கா நன்மைகள் இருக்கின்றது. இந்தக் கொய்யா இலையில் புரதம், வைட்டமின் பி6, கொலைன், வைட்டமின் சி, கால்வியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆண்டிஆக்ஸிடன்டு போன்ற பல சத்துக்கள் இருக்கிறது.


முன்னோர்கள் மண் பாத்திரத்தில் சமைத்ததன் ரகசியம் தெரியுமா?
[Friday 2023-09-29 18:00]

பொதுவாகவே நம்மில் பலரும் தினசரி சமைக்கப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததா என்பதில் காட்டும் அக்கறையை நாம் சமைக்கும் பாத்திரம் உடல் நலத்துக்கு உகந்ததா என்பதில் காட்டுவது கிடையாது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்துமே நவீன மயமாக்கப்பட்டு விட்டது. நாமும் இலகுவாக இருக்கிறதா என மட்டுமே யோசிக்கின்றோமே தவிர அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததா என சிந்திப்பது கிடையாது.


40 வயதை கடந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!
[Wednesday 2023-09-27 18:00]

பொதுவாக 40 வயதை தாண்டி பெண்கள் அவர்களின் உடலில் கவனம் செலுத்து குறைவாக இருக்கும். குழந்தைகள், குடும்பம்,கணவர் என அனைத்திலும் ஈடுபாடு அதிகமாக இருக்கும் பொழுது தங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள நேரமும் அவர்களுக்கு இருக்காது. ஆனால் பெண்களின் வாழ்க்கை இது தான் முக்கியமான காலக்கட்டம். அத்துடன் உணவில் கட்டுபாடு வேண்டும்.


7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா?
[Tuesday 2023-09-26 16:00]

பொதுவாகவே ஆண்கள் ஆனாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் சற்று அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பது இயற்கை தான். ஒரே வாரத்தில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? அப்போ இத மட்டும் பண்ணுங்க


உலகை உலுக்கும் உணவு விரயம்!
[Tuesday 2023-09-26 07:00]

இன்றைய தொழிநுட்ப உலகில் யாருக்கும் தங்களின் உறவுகளுடன் பேச கூட நேரம் இல்லாமல் போய்விட்டது, அப்படியிருக்கும் போது நம்முடைய தவறுகளை சுய பரிசீலனை செய்யவும் திருத்திக்கொள்ளவும் ஏது நேரம்? அப்படி நாம் செய்யும் சிறிய தவறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மயே அழிக்கும் சக்தியாக உருவெடுத்துவிட்டது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.


அரிசி கழுவும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Sunday 2023-09-24 17:00]

அரிசி கழுவும் போது நாம் செய்யும் சில தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக சமைக்கும் போது அரிசியை ஊற வைத்து சமைக்கும் பழக்கத்தை தான் பலரும் தற்போது செய்து வருகின்றனர். ஊற வைத்து கழுவும் அரிசியை நன்றாக பிசைந்து கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.


பச்சை மிளகாயில் இருக்கும் அற்புத நன்மைகள்!
[Saturday 2023-09-23 18:00]

பச்சை மிளகாயில் இருக்கும் 5 அற்புத நன்மைகள்... பச்சை மிளகாயின் ஊட்டச்சத்து ஆற்றல் பச்சை மிளகாய் ஒரு கலோரி இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத மூலப்பொருள் ஆகும், இது உணவு நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. கேப்சிகம் குடும்பத்தைச் சேர்ந்தது, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தாமிரம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் அடங்கிய பச்சை மிளகாய் வைட்டமின்களிலிருந்து ஊட்டச்சத்து சக்தி தெளிவாகத் தெரிகிறது.


தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?
[Friday 2023-09-22 06:00]

இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள்.


மொச்சை பயறு ஏன் சாப்பிட வேண்டும்?
[Thursday 2023-09-21 18:00]

பாரம்பரிய உணவு முறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக மொச்சை பயறு காணப்படுகின்றது. உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள், இதனால் தான் அவர்களால் நோய் இன்றி நீண்ட நாட்கள் வாழக் கூடியதாக இருந்தது. அந்த வகையில் பல நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மொச்சை பயறு சாப்பிடுவதன் அவசியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா