Untitled Document
October 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
 
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள்: - ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
[Wednesday 2017-10-18 16:00]

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.


எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் 90 வயதுவரை நடிப்பேன்: - அலியா பட்
[Tuesday 2017-10-17 19:00]

பிரபல இந்தி நடிகை அலியா பட், வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார்.பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. படங்களில் நடிப்பது பற்றி கூறிய அலியாபட்...


திருமண தேதியை மாற்றிய பாவனா!
[Tuesday 2017-10-17 19:00]

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனா, தனது திருமண தேதியை திடீர் என்று மாற்றியுள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.


இவ்வருடம் தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
[Tuesday 2017-10-17 08:00]

வருடாவருடம் தீபாவளி வந்தாலும் வாழ்வில் ஒருமுறைதான் தலை தீபாவளி வரும். ‘வண்ணத்திரை’ வாசகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும் வகையில், இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்களின் பட்டியலை வழங்குகிறோம்.


படக்குழு மீது பாய்ந்த பார்வதி!
[Tuesday 2017-10-17 08:00]

அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். தற்போது மலையாளத்தில் பெண் இயக்குனர் ரோஷ்னி தினகர் இயக்கும் ‘மை ஸ்டோரி’ படத்தில் நடிக்கிறார். ‘பூ’ பார்வதி ஹீரோயின். இப்படத்துக்கு சரிவர கால்ஷீட் தராமல் பிருத்விராஜ் இழுத்தடிப்பதாக ரோஷ்னி புகார் அளித்தார். அதனை விசாரித்த மலையாள தயாரிப்பாளர் சங்கம் ரோஷ்னி படத்துக்கு கால்ஷீட் தர வேண்டும் என்று பிருத்திவிராஜிடம் தெரிவித்தது. பரபரப்பை ஏற்படுத்தியது.


போருக்கு தயார் ஆகுங்கள்!
[Tuesday 2017-10-17 08:00]

ஒருவழியாக உலகநாயகன் அரசியல் கோதாவில் குதித்து குஸ்தி போட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக அவருடைய நாற்பதாண்டு கலையுலக போட்டியாளரான சூப்பர் ஸ்டாரும், தன்னுடைய ரசிகர்களுக்கு ‘போருக்கு தயார் ஆகுங்கள்’ என்று கட்டளையிட்டிருந்தார்.


ஐஸ்வர்யாராயை தனியாக அனுப்பி வைக்கும்படி கூறிய ஹாலிவுட் தயாரிப்பாளர்!
[Saturday 2017-10-14 17:00]

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராயை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அடைய விரும்பிய தகவல் ஐஸ்வர்யா ராயின் மானேஜர் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹாலிவுட் பட தயாரிப்பாளர் வெயின் ஸ்டீபன். இவர் பலநடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஐஸ்வர்யா ராயையும் இவர் அடைய விரும்பிய சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.


செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி நடிகை துர்கா கிருஷ்ணாக்கு செக்ஸ் தொல்லை!
[Saturday 2017-10-14 17:00]

செல்போனில் ஆபாச வீடியோவை அனுப்பி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா புகார் கூறியுள்ளார்.மலையாள பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் அதிகம் உள்ளது. சினிமா துறையில் இருப்பவர்களாலும் ரசிகர்களாலும் இந்த தொல்லைகளை அவர்கள் சந்திக்கின்றனர். பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் அங்கு நடந்தது.


மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்த நீதிமன்றம்!
[Saturday 2017-10-14 09:00]

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மெர்சல் திரைப்படதின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.


ஓவியாவை வைத்து படம் தயாரிக்கும் இசை அமைப்பாளர்!
[Saturday 2017-10-14 09:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ஓவியா மற்றும் சினேகன். அதிலும் மக்களால் அதிகம் விரும்பபட்டவர் ஓவியா. ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவண்ணம் உள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3-ல் நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகனையும், ஓவியாவையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் சி.சத்யா.


ரோபோ உடையில் எமி ஜாக்ஸன்!
[Saturday 2017-10-14 09:00]

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்ஸன் ஹீரோயின். இப்படத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் இருவரின் பிரத்யேக கெட்டப்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. எமியின் ரோபோ தோற்றம் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது.


அப்பாவின் அரசியல் பிரவேசத்திற்கு என் ஆதரவு உண்டு: ஸ்ருதிஹாசன் அறிவிப்பு
[Friday 2017-10-13 19:00]

கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் தனியார் கடை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.


பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: - ராதிகா ஆப்தே
[Thursday 2017-10-12 19:00]

கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் டாப்லெஸ் ஆகவும் நடிக்கிறார். வெளிநாட்டில் வெளியாகும் ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாண காட்சியிலும் நடித்தார். தவிர இணைய தள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


நாக சைதன்யாவை பார்த்து ஏன் இதே கேள்வியை கேட்கவில்லை? - கஸ்தூரி
[Thursday 2017-10-12 19:00]

சினிமாவில் அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் இணைய தளம் மூலம் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அரசியல், சினிமா என்று சகலத்திலும் மூக்கை நுழைத்து சூடான கருத்துகள் கூறி வெளுத்து கட்டுகிறார். சமீபத்தில் திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பதாக அறிவித்துள்ளார் என்று வந்த தகவலை தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டு, ‘அது என்ன? திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிக்கிறார் என்ற கேள்வி? நாக சைதன்யாவை பார்த்து ஏன் இதே கேள்வியை கேட்கவில்லை’ என்று உர்ரானார்.


திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்த மாட்டேன்: - பாவனா
[Thursday 2017-10-12 07:00]

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார், பாவனா. அங்கு அவர் பேசியதாவது: சினிமா துறையில் எந்த தவறும் கிடையாது. அங்குள்ள சிலரின் எண்ணத்தில் அழுக்கு படிந்திருக்கிறது, அவ்வளவுதான். நிறைய நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வருகிறார்கள். சினிமா துறை தவறானது என்றால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சினிமாவிற்குள் வர அனுமதிப்பார்களா? சினிமா மீது எவ்வளவு நாள் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களோ, அதுவரை அதில் எந்தத் தவறும் இருக்காது. எனது திருமணத்தைப் பற்றி கேட்கிறார்கள்.


பெயரை மாற்றிய சமந்தா!
[Thursday 2017-10-12 07:00]

எம்ஜிஆர் குடும்பம், சிவாஜி குடும்பம்போல் டோலிவுட்டில் என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம் பிரபலம். நாகேஸ்வரராவ் குடும்ப பெயர்களுடன் அக்கினேனி என்ற பெயர் இடம்பெற்றிருக்கும். இந்த குடும்பத்தில்தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா. நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா. கடந்த 6ம் தேதி சமந்தா, சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது. இந்நிலையில் சமந்தா தனது பெயருடன் அக்கினேனி என்ற சைதன்யாவின் குடும்ப பெயரை இணைத்துக் கொண்டிருக்கிறார்.


கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்!
[Thursday 2017-10-12 07:00]

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படம் அடுத்த மாதம் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து மீண்டும் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது.


உங்கள் தந்தை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? - நடிகை இஷாவுக்கு அட்வைஸ்
[Wednesday 2017-10-11 17:00]

‘யார் இவன்’ படத்தில் நடித்தவர் இஷா குப்தா. இந்தியில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பட வாய்ப்புகளுக்காகவும், ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவும் தனது இணைய தள பக்கத்தில் டாப் லெஸ், பாட்டம் லெஸ் என தனது ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறார். ஒருபக்கம் அவரது தோற்றத்தை ரசிப்பவர்கள் இருந்தாலும் மறுபக்கம் நெட்டீஸன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். சமீபத்தில் விமான படை தினம் நடந்தது. நாட்டை காக்கும் விமான படைக்கு சல்யூட் செய்வதாக தெரிவித்திருந்த இஷா,’நான் ஒரு விமான படை அதிகாரியின் மகள் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.


சென்னையில் பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.யின் 100% காதல்!
[Wednesday 2017-10-11 17:00]

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான '100% லவ்' படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் 100% லவ் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.


இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா விஜய்யின் மெர்சல்!
[Wednesday 2017-10-11 17:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. மெர்சல் படத்தில் விஜய்யுடன், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.


செல்போனிலிருந்து வரும் பேய்!
[Wednesday 2017-10-11 17:00]

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசுதான். பேய்க்கதைகள் என்றாலே ஒரு ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும் அல்லது பழி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் எவர்கிரீன் ஒன் லைன். இதிலிருந்து மாறுபட்டு யோசித்திருக்கிறார் ‘கேட்காமலே கேட்கும்’ படத்தின் இயக்குநர் கே.நரேந்திர பாபு. இவர் கன்னடத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் ரகமாம். இந்தப் படம் டெக்னாலஜி பேய்ப்படமாக உருவாகியுள்ளதாம். செல்போனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது.


சூர்யாவின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!
[Wednesday 2017-10-11 17:00]

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் இங்கு 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் சடங்குகள் நடத்திக்கொண்டிருந்தனர். 6 மணி அளவில் ‘ தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு குழுவினர் அங்கு வந்தனர். இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். புஷ்பமண்டப படித்துறையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக ஆதீனத்தில் படப்பிடிப்பு குழுவினர் அனுமதி பெற்றிருந்தனர். படித்துறை முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் நடன கலைஞர்கள் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.


என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை: - கிரித்தி பகீர்
[Wednesday 2017-10-11 06:00]

மகேஷ்பாபு ஜோடியாக ‘1: நேனொக்கடய்னே’ படத்தில் நடித்தவர் கிரித்தி சனான். அழகும், இளமையும் இருந்தபோதும் மேலும் 2 படங்களில் மட்டுமே இவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கவிருந்த நிலையில் அவரது உயரம் ஹீரோவின் உயரத்தைவிட அதிகமாக இருந்ததால் அப்படியே கழற்றிவிட்டுவிட்டார்களாம். தற்போது இந்தியில் நடித்து வருகிறார். அவரிடம் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். இதுபற்றி கிரித்தி கூறியது: நான் என்ஜினீரிங் படித்திருக்கிறேன். ஆனால் நடிகையாக வேண்டும் என்று ஆசை.


கோலிவுட் நடிகர்கள் பாலிவுட் நடிகைகளுக்கு விருந்து வைப்பது ஏன்?
[Tuesday 2017-10-10 08:00]

பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் நடிகைகளின் வரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தென்னிந்திய நடிகர்களுடன் ஜோடிபோட பாலிவுட் முன்னணி நடிகைகள் சிலர் அங்குள்ள ‘கான்’ நடிகர்களுக்கு பயந்து நடிக்க மறத்து விடுகின்றனர். சமீபத்தில் பிரபாஸுடன் ஜோடியாக நடிக்க கேத்ரினா கைப் முதல் சில நடிகைகளை அணுகியபோது நடிக்க மறுத்துவிட்டனர். துணிச்சலாக ஒப்புக்கொண்டு நடிக்க வந்திருக்கிறார் ஷ்ரத்தா கபூர். அந்த காரணத்துக்காகவும், புது இடம், புது மொழியால் நடிகை மிரண்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ஷ்ரத்தாவுக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினார் பிரபாஸ்.


கார்த்திகையில் திகிலூட்ட வரும் அவள்!
[Tuesday 2017-10-10 08:00]

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள அவள் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள பாலிவுட் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படம் தமிழில் 'அவள்' என்ற பெயரில் உருவாகிறது. மேலும் இதே படம் தெலுங்கிலும் உருவாகவுள்ளது. இது திகில் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.


தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்த தமன்னா!
[Tuesday 2017-10-10 08:00]

சில வருடங்களுக்கு முன் ரஜினி, கமல் 2 வருடத்துக்கு ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த பாலிசியை மாற்றிக்கொண்டு வருடத்துக்கு 2 படங்கள் நடித்து விடுகின்றனர். சில முன்னணி ஹீரோக்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் பாணியில் வந்தவரை ஓ.கே என்று 2 வருடத்துக்கு குறையாமல் தங்களது கால்ஷீட் தேதியை பிரித்து தந்துவிடுகின்றனர். ஆனால் ஹீரோயின்களால் அப்படி முடிவதில்லை. அதற்காக அவர்கள் வருமானம் பெரிதாக குறைந்துவிடுவதும் இல்லை. ஏனென்றால் சினிமாவை தவிர வேறு வழியிலும் அவர்கள் வருமானம் பார்க்கின்றனர்.


கண்கலங்கி அழத் தொடங்கிய சமந்தா!
[Monday 2017-10-09 17:00]

சமந்தா, நாக சைதன்யா திருமணம் கோவாவில் கடந்த 6ம் தேதி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். எந்தவித இடையூறும் இல்லாமல் விரும்பியதை உண்டும், குடித்தும் குதுாகலமாக இருக்கவே இப்படியொரு தனிப்பட்ட விழா நடத்தப்பட்டதாக திரையுலகில் கூறப்படுகிறது. பாகுபலி வில்லன் ராணாவின் தந்தை டக்குபதி சுரேஷ்பாபு ரொம்பவே அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசாமல் ஜென்டிலாக வந்துபோகும் சுபாவம் கொண்டவர். அவரே சமந்தாவுடன் குத்தாட்டம் போட்டதால் திருமண அரங்கே அமர்க்களமாகிவிட்டதாம்.


மறுபடியும் விஜய் சேதுபதிக்கு குறிவைக்கும் ரம்யா!
[Monday 2017-10-09 17:00]

அறிமுக நாட்களில் நயன்தாரா கொழுக் மொழுக் தோற்றத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஒரு சில படங்களுக்கு பிறகு திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு மாறி இன்றுவரை அந்த தோற்றத்தை பராமரித்து வருகிறார். அவரைப்போலவே பப்ளிமாஸ்போல் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ரம்யா நம்பீசன். ஒரு நாள் ஒரு கனவு படம் தொடங்கி, ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக்கூட்டம் வரை அவரது தோற்றம் குடும்பபாங்காக தெரிந்ததே தவிர கவர்ச்சியில் ஜொலிக்கவில்லை.


புதிய படத்தில் நடிக்கும் வரலட்சுமி!
[Monday 2017-10-09 17:00]

கவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம் சக்தி. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. அபேரட்டல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சரண்யா லூயிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.


கவுதம் கார்த்திக் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து!
[Monday 2017-10-09 17:00]

புளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம், இருட்டு அறையில் முரட்டு குத்து. கவுதம் கார்த்திக், ரவிமரியா, ராஜேந்திரன், கருணாகரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தருண் பாலாஜி. இசை, பாலமுரளி பாலா. ஹர ஹர மஹாதேவகி சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார்.

Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா