Untitled Document
March 29, 2024 [GMT]
 
இளைஞர்களோடு இணைந்து சுத்தம் செய்த மன்சூர் அலிகான்!
[Friday 2017-01-20 15:00]

அலங்காநல்லூரை தொடர்ந்து மெரினாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது பெரிதாக வெடித்திருக்கிறது. மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் இளைஞர்கள் தாங்களாகவே சுத்தம் செய்கின்றனர், போலீஸ் அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் நடிகர் என்ற அடையாளத்தை தவிர்த்து இளைஞர்களோடு இணைந்து மஞ்சூர் அலிகான் சுத்தம் செய்துள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூன வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஜல்லிக்கட்டு தடை: - தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அதிரடி கேள்வி
[Friday 2017-01-20 15:00]

ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து தமிழ்நாடே கொந்தளிப்பில் இருக்கிறது.தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல மாநிலங்களில் இருந்து பலரும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஜல்லிக்கட்டு தடை என்றால் மாட்டு இறைச்சிக்கு என்ன செய்வீர்கள் என அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.


உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் நடிகர் லாரன்ஸ் அனுமதி!
[Friday 2017-01-20 15:00]

நடிகர் லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகவும் நல்ல மனிதர். இவர் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தில் கலந்துக்கொண்டார். இவருக்கு ஏற்கனவே உடல்நலம் முடியாமல் சிகிச்சை எடுத்து வந்தார், இந்த இரண்டு நாட்களாக மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்.தற்போது அவருக்கு மிகவும் உடல்நலம் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், மேலும், சிகிச்சை முடிந்து மீண்டும் வருவேன் என்றும் கூற்யுள்ளாராம்.


அன்புதான் எங்கள் ஆயுதம்: - கோபிநாத் விளாசல்
[Friday 2017-01-20 14:00]

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் எப்போதும் தெளிவான கருத்துக்களை கூறுபவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் முழு ஆதரவையும் தந்துள்ளார்.இதில் ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் இல்லை, வணிக அரசியலை புரிந்துகொள்ளாதவர்கள் அல்ல. நாங்கள் அன்பானவர்கள். அதற்கு நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.அன்புதான் எங்கள் ஆயுதமே. ஆறு மாசப்பிள்ளைய தூக்கிட்டு வந்து உரிமைக் கேட்டு உட்கார்ந்திருக்காங்க, இவங்க எல்லாம் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவா வர்றாங்க? உரிமைக்காக வர்றாங்க என கோபமாக பேசியுள்ளார்.


பீட்டா அமைப்பிற்கு பதிலடி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!
[Friday 2017-01-20 14:00]

ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதலில் குரல் கொடுத்த சினிமா நட்சத்திரம் ஹிப்ஹாப் ஆதி தான். தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகம் முழுவதும் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீட்டா அமைப்பிலிருந்து மதச்சண்டையை ஏற்படுத்தும்படி ஒரு டுவிட் செய்தனர்.பின் அதை டெலிட் செய்துவிட்டனர், அதற்கு ஒருவர் கொடுத்த ரீப்லேயை சுட்டிக்காட்டி ஆதி பதிலடி கொடுத்துள்ளார்.


மக்களோடு மக்களாக போராட்டத்தில் இணைந்த சூர்யா!
[Friday 2017-01-20 14:00]

நடிகர் சங்கம் இன்று பேராட்டம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியிட்டன. அதன்படி இன்று போராட்டமும் நடந்து வருகிறது, ஆனால் மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்ய வேண்டாம், மீடியாவை திசை திருப்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர்.இந்நிலையில் நடிகர் நாசரும் எங்களது போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்!
[Friday 2017-01-20 14:00]

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்
[Friday 2017-01-20 11:00]

ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் போராட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.


ஜல்லிக்கட்டுக்கு பார்த்திபன் புதிய யோசனை
[Friday 2017-01-20 10:00]

ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நடிகர் பார்த்திபன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.


தமிழில் அறிமுகமாகிறார் 'பிரேமம்' மலர் டீச்சர்
[Friday 2017-01-20 10:00]

'பிரேமம்' படம் மூலம் சினிமாவிற்கு வந்த சாய்பல்லவி ரீமேக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.


தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள்: - சிம்பு யோசனை
[Thursday 2017-01-19 18:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள்.


நாளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் உண்ணாவிரதம்!
[Thursday 2017-01-19 18:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழும் தமிழனும் இந்தியாவில் இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லை: - ஜி.வி.பிரகாஷ்
[Thursday 2017-01-19 13:00]

ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் முதல் இளம் சிறார்கள் வரை ஏன் ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்கணக்கில் தொடரும் போராட்ட களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களும் , பீட்டா எதிர்ப்பு கோஷங்களும் கடுமையாக ஒலிக்கின்றன.தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்ததும், பிரதமரின் பதில் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.


நடிகர் சங்கத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்குழு!
[Thursday 2017-01-19 13:00]

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நல்ல தீர்ப்பை வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை 20ம் தேதி நடிகர் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நடிகர்கள் போராட முடியாது.அதை அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லிவிட்டு இன்று மாணவர் போராட்டம் எழுச்சியுறும் போது தேவையில்லாமல் மீடியா வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப உண்ணாவிரதம் இருக்கப்போகும் நடிகர் சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் போராட்டக்குழு.


காளை வளர்ப்புக்காக 10 லட்சம் வழங்கவுள்ள விஜய பிரபாகரன்!
[Thursday 2017-01-19 13:00]

ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, இதை தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகையில், "இந்த போராட்டம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள், ஜல்லிக்கட்டை தடைசெய்ய கூடாது. சட்டம் என்பது மக்களுக்காக தான், காளை இனத்தை அழிக்கணும் என்று சில பேர் இருக்கிறார்கள்.அதை நான் ஒரு போதும் விட மாட்டேன். இந்த காளை வளர்ப்புக்காக என்னுடைய சென்னை பேட்மிண்டன் டீம் சமீபத்தில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது, அதில் 10 லட்சம் ரூபாய்யை நான் வழங்க போகிறேன் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.


ஜல்லிக்கட்டு தடை தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்: - விஜய்சேதுபதி ஆவேசம்
[Thursday 2017-01-19 13:00]

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு ஏராளமானவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கோசம் போட்டுக் கொண்டு இருந்தனர்.அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள சினிமா அமைப்புகள்!
[Thursday 2017-01-19 12:00]

ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடை நீங்க வேண்டும், இதுவே ஒவ்வொரு தமிழனின் மூச்சாக தற்போது இருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சினிமா அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை வளாகத்தில் (FILM CHAMBER) தமிழ்த் திரைப்படத் தயாாிப்பாளா்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை தயாாிப்பாளா்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திாிக்கை தொடா்பாளா் யூனியன் ஆகியோா் ஒன்றிணைந்து மாபெரும் ஆா்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனா்.


தடைகளை உடை புதிய சரித்திரம் படை: - சந்தானம்
[Thursday 2017-01-19 12:00]

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை, எங்களது கலாச்சாரம் என்பதை புரிந்த இளைஞர்கள் பெரிய போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரபலங்களும் ஒருபக்கம் தங்கள் ஆதரவை அழுத்தமாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் நடிகர் சந்தானம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நம்முடைய பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதை தடை செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை மறுபடியும் நடத்தனும் என்று போராடும் எல்லாருக்கும் என் ஆதரவு உண்டு. தடைகளை உடை, புதிய சரித்திரம் படை, வாழ்க தமிழ் என கூறியுள்ளார்.


விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி: - சுவாரஸ்ய தகவல்
[Thursday 2017-01-19 12:00]

சாய் பல்லவி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.மணிரத்னம் படத்தில் அவர் நடிக்க இருந்த நிலையில், சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.இந்நிலையில் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த சார்லி படம் தமிழில் விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்க ரீமேக்காக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இப்படி செய்தால் உச்ச நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய இயலாதாம்: - பார்த்திபன் தகவல்
[Thursday 2017-01-19 12:00]

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் திரண்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்க வேண்டிய அனைத்தும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது என அனைவரும் நினைத்து வருகின்றனர்.ஆனால் ஜல்லிக்கட்டு சார்பாக முடிவு எடுக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றினால் அது உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றும் செய்ய இயலாதாம். இந்த தகவலை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


வழிக்கு வந்த விசால்! - ஜல்லிக்கட்டு நடத்த பிரதமருக்கு கடிதம்!
[Thursday 2017-01-19 12:00]

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விசால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டிற்கு எதிரானவராக பார்க்கப்படும் விசால் அதற்கு ஆதரவாக களமிறங்கி இருப்பது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.


பாலியல் குற்றங்களை மையமாக கொண்டு வெளிவரும் `சிவப்பு எனக்கு பிடிக்கும்''
[Thursday 2017-01-19 09:00]

பாலியல் குற்றத்தை தடுக்க யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் வரும் 20-ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்த ருசீகர தகவலை கீழே பார்க்கலாம். 'மதுரை சம்பவம்' படத்திற்கு பிறகு இயக்குநர் யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், 'போராளி' பட புகழ் சாண்ட்ரா எமி நடித்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அமிஷ் யுவானி இசையமைத்துள்ளார்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம்
[Thursday 2017-01-19 09:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜன.20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த போராடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இன்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


கீர்த்தி சுரேஷின் தந்தையும் நடிகராகிறார்..
[Thursday 2017-01-19 09:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் முதன்முதலாக படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிப்பில் வெளியான 'பைரவா' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிசியாக உள்ளார். இதனைதொடர்ந்து தமிழில் 'சண்டக்கோழி-2' படத்திலும், தெலுங்கில் 3 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.


ஜல்லிக்கட்டுக்குக்கான ஆதரவு போராட்டத்தில் சிம்பு
[Thursday 2017-01-19 08:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், லாரன்ஸ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


புல்லட்டில் வலம் வரும் ஜோதிகா
[Thursday 2017-01-19 08:00]

'மகளிர் மட்டும்' படத்தில் புல்லட் ஓட்டும் பெண்ணாக வலம் வரும் ஜோதிகாவின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். `குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா அடுத்ததாக ஜோதிகாவை வைத்து `மகளிர் மட்டும்' என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.


நமது நோக்கத்தை திசை திருப்ப நரிகள் காத்திருக்கிறது: - ஜி.வி.பிரகாஷ்
[Wednesday 2017-01-18 17:00]

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களும், போராட்டங்களும், பதாகைகளும் தான் தென்படுகின்றன. ஜல்லிக்கட்டை ஆதரித்து பலரும் போராடி தங்கள் உரிமையை, பாரம்பரியத்தை நிலைநாட்ட அனைவரும் துணிந்துவிட்டனர். இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், போராடும் இளைஞர்களே நமது போராட்டம் அறவழி போராட்டம் மட்டுமே.நமது நோக்கத்தை திசை திருப்ப நரிகள் காத்திருக்கிறது என கொந்தளித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதிக்கவுள்ள நடிகர் சங்கம்!
[Wednesday 2017-01-18 17:00]

மக்கள் பிரச்சனைகளுக்கு நாங்களும் குரல் கொடுக்க தவறமாட்டோம் என தென்னிந்திய நடிகர் சங்கமும் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதிக்கவுள்ளது.வரும் 20ம் தேதி காலை முதல் மாலை வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என கூறப்பட்டுள்ளது.தற்போது மெரினாவில் நடந்துவரும் இளைஞர்களின் போராட்டத்தில் ஏற்கனவே பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு உதவ 1 கோடி ரூபாய் நன்கொடை: - ராகவா லாரன்ஸ்
[Wednesday 2017-01-18 17:00]

ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தவிர்த்து தனிப்பட்ட வாழ்கையில் அறக்கட்டளை மூலம் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் அவர் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக களம் இறங்கினார்.மேலும் அவர் தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போராத்தில் ஈடுபடும் அனைவருக்கும் உணவு, மருத்துவ வசதிகள் செய்துதர 1 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு தடை நீங்க வேண்டும்: - நயன்தாரா அதிரடி அறிக்கை
[Wednesday 2017-01-18 17:00]

ஜல்லிக்கட்டு தடை நீங்கியே ஆக வேண்டும், இனி நடந்தே ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அதில் திரைபிரபலங்களும் இணைந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா