Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
 
பாலியல் உறவுக்காக 20,000 ஆடுகளை ஐ.எஸ்-யிடம் விற்ற விவசாயி!
[Sunday 2017-05-21 16:00]

நியூசிலாந்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 20,000 ஆடுகளை பாலியல் அடிமைகளாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத குழுவிடம் விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 52 வயதான Allan Seymour என்ற விவசாயியே இச்செயலலில் ஈடுபட்டுள்ளார்.சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு Allan Seymour ஆடுகளை அனுப்பி வந்ததை கண்டறிந்த சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பாலியல் கொடுமை செய்த சாமியார் உறுப்பை வெட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
[Saturday 2017-05-20 18:00]

தனது தந்தையை குணப்படுத்துவதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து தன்னையும், தனது தாயையும் சாமியார் சீரழித்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிசுவாமி. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். இவரது ஆணுறுப்பை 23 வயதாகும் சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்துவிட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உணவகத்தில் மனித இறைச்சி: - காட்டுத் தீ போல் பரவி வரும் செய்தி.!
[Friday 2017-05-19 19:00]

லண்டனில் உள்ள KarriTwist என்ற இந்திய உணவகம் தன்னுடைய உணவில் மனித இறைச்சியை சமைத்து பரிமாறுவதாக சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் செய்தி வெளியானது. இது காட்டூத் தீ போல் பரவியதால், அந்த உணவகம் மூடப்பட்டதுடன், அந்த உணவகத்தின் உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் தான் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது இது ஒரு தவறான தகவல் என்று.


ஒரு கண்ணுடன் அதிசயமான ஆட்டுக்குட்டி: பூஜைசெய்து வழிபடும் மக்கள்!
[Wednesday 2017-05-17 21:00]

அசாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு கண்ணுடன் அதிசயமான ஆடு ஒன்று பிறந்துள்ளது. அந்த ஆட்டை புனிதமாக கருதி அப்பகுதி மக்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்துவருகின்றனர். ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள அந்த ஆட்டை காண அருகில் உள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். மேலும் அந்த ஆடு புனிதமானது என்றும் அது கடவுளுடைய கொடை என்றும் அவர்கள் கருதி அதனை வழிபட்டு வருகின்றனர்.


இந்தியாவில் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சகோதரர்கள்! - விசித்திர கிராமங்கள்!
[Wednesday 2017-05-17 08:00]

மகாபாரதத்தில் தான் திரௌபதி அண்ணன், தம்பிகளை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு பகுதியில் பல கிராமங்களில் வாழும் அண்ணன் தம்பிகள், ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர். இன்றளவும் இப்படி ஒரு பலதாரமணம் நடந்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. மோரேனா எனப்படும் இந்த கிராமம் மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது...


மூக்குடைபட்டுப் போன ஐ.பி.சி நிறுவனம் ! - மீண்டும் புரளிகிளப்பி சாதனை..!! Top News
[Saturday 2017-05-13 18:00]

தமிழின அழிப்புப் புரிந்த சிங்களப் படைகள் தமிழர்களுக்கு குருதிக் கொடை செய்கின்றார்கள் என்று பரப்புரை செய்து கடந்த ஆண்டு உலகத் தமிழர்களிடம் மூக்குடைபட்டுப் போன ஐ.பி.சி நிறுவனம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் போதைவஸ்துக் கடத்தல்காரர்கள், கடனட்டை மோசடியாளர்கள், கடவுச்சீட்டு மோசடியாளர்கள் இருப்பதாக இவ்வாரம் புதுப் புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஈஷாவின் ஆதியோகி சிலை!
[Saturday 2017-05-13 14:00]

கோவை, ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள, ‘ஆதியோகி சிலை’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு கொண்ட சிலை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்துள்ளது கின்னஸ் புத்தகம். கடந்த பிப்ரவரி மாதம், 112 அடி உயரத்தில், 81 அடி அகலத்தில், 147 அடி நீளத்தில் அமைந்துள்ள சிலையின் பிரமாண்ட திறப்பு விழாவினை மோடி தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.


அதிக மதிப்பெண் பெற்று ஆசிய மாணவி சாதனை!
[Wednesday 2017-05-10 11:00]

உலகின் பழைமையான மற்றும் கடினமான அறிவுக்கூர்மைத் தேர்வான ‘மென்சா’வில் மிக அதிக மதிப்பெண் பெற்று, இந்திய வம்சாவளி மாணவி வெற்றிபெற்றுள்ளார். உலகின் சிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங் ஆகியோரைவிட அதிக மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். 12 வயதாகும் ராஜ்கௌரி வடக்கு இங்கிலாந்தில் உள்ள செஷயரில் வசிக்கிறார். இந்த ஐக்யூ டெஸ்டில் அதிகபட்ச மதிப்பெண்களாக 160 இருந்தது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இதுபோன்ற சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரின் ஐக்யூ 160 மதிப்பெண்கள் எனக் கணக்கிட்டிருந்தார்கள்.


அமெரிக்காவில் சக்திவாய்ந்த மாத்திரைகள்: - கையால் தொட்டாலே மரணம் தான்
[Monday 2017-05-08 18:00]

அமெரிக்காவில் சக்திவாய்ந்த furanyl fentanyl ரக மாத்திரைகளை கையால் தொட்டதற்கே பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டுள்ளது.அமெரிக்கா பொலிசார் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.அதில், furanyl fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக உடலுக்குள் நுழையும்.


காதலர்களை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்!
[Sunday 2017-05-07 09:00]

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். "உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.அது எப்படி?


ஆஸ்திரேலியாவில் பெற்றோர் விசா தயார்: - 10 ஆண்டுகள் தங்கலாம்
[Friday 2017-05-05 22:00]

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம். அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும்.


தொப்பையை குறைக்க குரங்கு அங்கிளுக்கு டயட்.!
[Tuesday 2017-05-02 17:00]

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தக் குரங்கு பற்றி தாய்லாந்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தக் குண்டு குரங்கைப் பார்த்தனர். அநியாயத்துக்கு குண்டா இருக்கே என்று நினைத்த அவர்கள், மயக்க மருந்து கொடுத்து அதை நாஹோன் நயோக் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்குத் தூக்கிக் கொண்டு சென்றனர்.


ரூ.9,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய கூகிள் முன்னாள் ஊழியர்..!
[Monday 2017-05-01 17:00]

சீனாவைச் சேர்ந்த கோலின் ஹூகன் உலகளாவிய ஈகாமர்ஸ் துறையின் வர்த்தக முறையை மாற்றியமைக்கும் அளவிற்குப் புதிய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார். இவர் துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் வெறும் 21 மாதங்களில் சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுத் தற்போது 9,642 கோடி ரூபாய் மதிப்பிலான வெற்றிக்கோட்டையாக மாறியுள்ளது. கூகிள் பல லட்ச கணக்கான சீன மக்களைப் போலவே கோலினும் கல்லூரி படிப்பை முடித்த உடன் சிலிக்கான் வேலியில் தனது பணியைத் துவங்கினார்.


காணாமல் போன சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு:
[Saturday 2017-04-29 17:00]

எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது.


பேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போர்நிச்சய நடக்கும் : அன்றே கூறிய பெண் பாபா!
[Friday 2017-04-21 18:00]

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என உலக நிகழ்வுகளை முன்கூட்டிய கணிக்கும் பாபா வாங்கா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.


மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தை!
[Friday 2017-04-21 18:00]

ஜேர்மனி நாட்டில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Lubeck நகரில் 27 வயதான தந்தை தனது 2 வயதான மகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததால் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது 47 வயதான நபருடன் சேர்ந்து தந்தை மது அருந்தியுள்ளார்.


பாடசாலை பியானோ ஒன்றிற்குள் தங்க நாணயங்கள்: யாருக்கு சொந்தம்? Top News
[Thursday 2017-04-20 17:00]

வாழ்க்கையை மாற்றியமைக்ககூடிய அளவிலான தங்க நாணயங்கள் பியானா ஒன்றிற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சரியான உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். பாடசாலை ஒன்றில் உள்ள குறிப்பிட்ட பியானோவிற்குள் இருந்த பணத்தை சுருதியூட்டுபவர் கண்டுபிடித்துள்ளார். கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இப்புதையலிற்கான சொந்த காரரை அதிகாரிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை.


லண்டனில் காகங்களுக்கு உணவகம்!
[Wednesday 2017-04-19 17:00]

காகம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக லண்டனில் காகங்கள் உணவருந்த உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அதீத அன்பு கொண்டவர்.இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.


அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்! - காட்சியால் பார பரப்பு!
[Wednesday 2017-04-19 17:00]

அமெரிக்கா – வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.


வேலைக்காரப் பெண்னை மணப் பெண்ணாக்கி அழகு பார்த்த சவுதி குடும்பம்!
[Monday 2017-04-17 18:00]

சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் அண்மையில்  தனது வீட்டிலே கத்தாம்மாவாக (வேலைக்கார பெண்ணாக) பணிபுரிந்த ஆசிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் சவுதி குடும்பம் ஒன்று பிரமான்டமான முறையில் முழுச் செலவையும் பொறுப்பேற்று திருமணம் நடாத்தி வைத்து ஆச்சரித்தை  ஏற்படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமல்ல மணமக்களின் தேன்நிலவுக்கான ஏற்பாடுகளையும் செய்து அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.


இரவில் ஒளிரும் நாடு இந்தியா! நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
[Friday 2017-04-14 21:00]

மின் விளக்குகளால் ஒளிரும் இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது. அவ்வப்போது உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டு வருகிறது. உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக நாசா நேற்று வெளியிட்டது. இதில், மின் விளக்குகளால் மிளிரும் ஒளிமயமான இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம் வெளியானது. தற்போது உள்ள படம் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.


பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு: - மெலனியா டிரம்ப் அதிரடி !
[Thursday 2017-04-13 09:00]

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் கடந்தகால மாடலிங் வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த கட்டுரையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக குறித்த நாளிதழ் நஷ்டஈடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. பிறகு குறித்த செய்தியை அந்நிறுவனம் திரும்பப் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது குறித்த கட்டுரை வெளியானது.


கள்ளக்காதலியுடன் கூத்தடித்த கவர்னர் ராபர்ட் பென்ட்லியை ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு!
[Thursday 2017-04-13 09:00]

அமெரிக்காவில் தேர்தல் செலவு கணக்கை முறையாக காட்டாத கவர்னர் ராபர்ட் பென்ட்லியை ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி தேர்தல் செலவுகளை முறையாக கணக்கு காட்டாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியான தொடர்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.


போராட்டக்காரரை எதிர்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம்! இது வைரல்..
[Tuesday 2017-04-11 08:00]

பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். இன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து “இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்” என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன்த ன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்..! இனி நாங்களும் குடிச்சு பாப்போம்!
[Tuesday 2017-04-11 08:00]

படுபாவிக..! அடிச்சு பாத்தோம் திருந்தல, இனி நாங்களும் குடிச்சு பாப்போம்: முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்..! வேதாரண்யம் அருகே மதுக்கடைகளை அகற்றாததால் ஆத்திரமைடந்த பெண்கள் மது குடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


வானத்தில் பிறந்த தேவதை...! 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!
[Monday 2017-04-10 06:00]

நஃபி டியாபி என்ற பெண், 42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்றுகொண்டிருந்தார் ஏழு மாத கர்ப்பிணி டியாபி. அவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.


18 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 60 வயது தாத்தா.!
[Saturday 2017-04-08 18:00]

திருமணம் செய்துக் கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மத்தியில் வயது வித்தியாசம் இருக்க வேண்டும் தான், அதற்காக இப்படியா 42 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்வது. ஏறத்தாழ ஒரு தலைமுறை வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். பதின் வயது பெண்ணான லிசா மில்லர் 60 வயது நிரம்பிய ஜனிடோர் ஜிம் என்பவரை காதலித்துள்ளார். மேலும், அவரது 60வது வயதில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் அளித்துள்ளார் லிசா மில்லார். இவர்கள் இருவரும் மெக்டொனால்ட்டில் தான் முதன் முதலில் பார்த்து டேட் செய்தனர்.


கவர்ச்சியான ஆடை அணிந்தற்காக கொல்லப்பட்ட மொடல் அழகி:
[Saturday 2017-04-08 08:00]

ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக மொடல் அழகியான தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவை சேர்ந்த Raudha Athif(21) என்ற இளம்பெண் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். இவரது வெற்றிகளையும் அழகானத் தோற்றத்தையும் மாலத்தீவு அதிபரும் வெகுவாக பாராட்டியுள்ளது. இதுமட்டுமில்லாமல், இந்தியாவில் வெளியாகும் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்று சர்வதேச புகழைப் பெற்றார்.


உத்திரப்பிரதேசத்தில் குரங்காக வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி: மனிதர்களை கண்டு பயந்து ஓடும் பரிதாபம்!
[Friday 2017-04-07 07:00]

உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சரணாலயத்தில் குரங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Katarniaghat சரணாலயத்தில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 வயது சிறுமி ஒருவர் குரங்களுடன் ஒன்றாக இருந்துள்ளார். இதைக் கண்ட பொலிசார் அச்சிறுமியை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் குரங்குகளோ சிறுமியை மீட்க விடாமல் கடிக்க முயற்சி செய்துள்ளது. குரங்கைப் போன்றே சிறுமியும் இவர்களை கடிக்க முயன்றுள்ளார்.


தற்கொலைக்கு முயன்றவர்! - KFC நிறுவனரின் கதை:
[Friday 2017-04-07 07:00]

KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ்சா ண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார். பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார்.

Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா