Untitled Document
March 28, 2024 [GMT]
 
கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்!
[Saturday 2023-10-21 16:00]

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby). அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.


பெண்களை பார்த்தாலே அஞ்சும் விசித்திர மனிதர்!
[Friday 2023-10-20 18:00]

ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நம்மில் சிலருக்கு வித்தியாசமான விஷயங்களை கண்டு காரணம் இல்லாமல் மனதில் பயம் எழுவது உண்டு, அந்த வகையில் சிலருக்கு குறிப்பிட்ட விலங்குகளை கண்டால் பய உணர்வு ஏற்படும், சிலருக்கு இரத்தத்தை கண்டால் மனதில் பய உணர்வு ஏற்படும்.


உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்!
[Thursday 2023-10-12 19:00]

அமெரிக்காவின் - கலிபோர்னியா மாநிலத்தில் விவசாயிகளுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


128 ஆண்டுகளுக்கு பிறகு கைதியின் உடல் அடக்கம்: நடந்தது என்ன?
[Tuesday 2023-10-10 18:00]

அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் உள்ள சிறைக்கைதியின் உடலானது 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1895 -ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான ஒருவர் சிறையில் உயிரிழந்தார். இவர், சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார்.


பூமியைவிட்டு விலகிச் செல்லும் நிலா!
[Tuesday 2023-10-03 18:00]

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாகா தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள்.


கூகுள் மேப்பில் கூட இல்லாத பல ரகசிய இடங்கள்!
[Saturday 2023-09-30 16:00]

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில் இல்லாத பல ரகசிய இடங்கள் இன்னும் உலகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை!
[Sunday 2023-09-24 08:00]

பிரித்தானிய தோட்டக்காரர் ஒருவர் 30 பவுண்டுகள் எடை கொண்ட மிகப்பெரிய வெள்ளரிக்காயை விளைவித்துள்ளார். Worcestershireயின் மால்வேர்ன் நகரில் நடந்த பிரித்தானிய தேசிய இராட்சத காய்கறிகள் சாம்பியன்ஷிப்பில் வின்ஸ் சோடின் (50) என்பவர் பங்குபெற்றார்.


உலக சாதனை படைத்த வெங்காயம்!
[Wednesday 2023-09-20 18:00]

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார்.


பிரான்சில் ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு!
[Tuesday 2023-09-19 06:00]

15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் டைனோசர் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


தலை இல்லாமல் காவலுக்கு இருந்த காவலாளி: அதிர்ந்துபோன இணையதளம்!
[Tuesday 2023-09-12 19:00]

கடை ஒன்றில் காவலாளியாக இருந்த மனிதர் தலையில்லாமல் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தியுள்ளது. இன்று இணையத்தில பல நம்பமுடியாத சம்பவங்களை அவதானித்து வருகின்றோம். வினோதங்கள் அடங்கிய இந்த இணையத்தில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


பேய்கள் அதிகம் உலாவும் பிரித்தானிய நகரம்!
[Wednesday 2023-09-06 18:00]

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் 31 சதவீதத்தினர் பேயை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அமானுஷ்ய கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதிலும் முக்கியமாக பேய்கள் குறித்த கதைகள் தான் எங்கும் ஆக்கிரமித்திருக்கும்.


மரத்தின் சாபத்தால் கண் பார்வை இழந்து வாழும் விசித்திர குருட்டு கிராமம்!
[Saturday 2023-09-02 08:00]

இது ஒரு பசுமையான மலைகளால் சூழப்பட்ட மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு அழகான கிராமம். ஆனால் அந்த அழகை கண்களால் ரசிக்க முடியாத துரதிஷ்டசாலிகள் அந்த கிராம மக்கள். ஏனென்றால் அந்த கிராமத்தில் யாரும் கண்ணால் பார்க்க முடியாது. அவர்கள் பிறக்கும் போது நன்றாக இருக்கிறார்கள். குழந்தை பருவத்திலும் கண்பார்வை நன்றாக இருக்கும். ஆனால் வயதாக ஆக அவர்கள் கண்பார்வை இழக்கிறார்கள். அவர்கள் குருடர்களாக மாறுகிறார்கள்.


ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்!
[Friday 2023-08-25 19:00]

ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.


கண்களுக்கு தண்ணீர் தெரியாத விசித்திர நதி!
[Sunday 2023-08-20 07:00]

நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், ரஷ்யாவில் உள்ள ஒரு நதியில் அப்படி எதுவும் இல்லை. தண்ணீரின் தடயமே தெரியவில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.. மழைக்காலங்களில் மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறீர்களா..? ஆனால் அப்படி இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கற்கள் பெரிய பாறைகள். அதனால்தான் இது 'ஸ்டோன் ரிவர்' அல்லது ஸ்டோன் ரன் என்று அழைக்கப்படுகிறது.


16 வயது சிறுவனை காதலித்து கரம்பிடித்த 41 வயது பெண்!
[Monday 2023-08-14 06:00]

இந்தோனேசியாவில் தோழியின் 16 வயது மகனை 41 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதலே பழகி வந்துள்ளார்.


நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி!
[Wednesday 2023-08-09 06:00]

அமெரிக்காவில் புற்று நோயால் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Sunday 2023-08-06 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள்!
[Monday 2023-07-31 18:00]

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள் ஆகும்.


அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு!
[Wednesday 2023-07-26 06:00]

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்.. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பார்க்க ஆசிபாபாத் காடுகளுக்குச் செல்ல வேண்டும். இயற்கையின் அழகை ரசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாகும்.


83 வயது மூதாட்டியை கரம்பிடித்த 37 வயது நபர்!
[Tuesday 2023-07-25 19:00]

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு.


வயதாவதைத் தடுக்கும் புது வித மருந்து!
[Monday 2023-07-17 18:00]

அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர் இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோலின் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது.


தங்க நிறத்தில் அபூர்வ ஆமை!
[Monday 2023-07-10 18:00]

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் ஆமை ஒன்று தங்க நிறத்தில் இருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, ஆமைகள் ஆலிவ்-பச்சை, பச்சை அல்லது சிவப்பு பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பல வகையான ஆமை இனங்கள் பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் தங்க நிறத்தில் உள்ள இந்த ஆமை அபூர்வம் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


துர்நாற்றமடிக்கும் நதியைத் திருமணம் செய்த இளம்பெண்!
[Saturday 2023-07-08 18:00]

பிரித்தானிய இளம்பெண் ஒருவர், துர்நாற்றம் அடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலைச் சேர்ந்த மேகன் ட்ரம்ப் (27)என்னும் இளம்பெண், துர்நாற்றமடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.


தென்கொரிய மக்களுக்கு ஒரே இரவில் 1 வயது குறைந்த சம்பவம்!
[Friday 2023-07-07 19:00]

தென்கொரியாவில் புதிய சட்டத்தின் மூலம் மக்களுக்கு ஒரே இரவில் ஒரு வயது குறைந்துள்ளது. தென் கொரிய நாட்டில் வயதை கணக்கிடும் முறை வித்தியாசமானது. அங்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே வயது கணக்கிடப்படும்.


வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்ற பசு!
[Tuesday 2023-06-27 18:00]

இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு. திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன.


இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த 36 வயது இளைஞர்!
[Saturday 2023-06-24 06:00]

விவசாயி ஒருவர் 36 ஆண்டுகளாக கர்பமாக இருந்த விசித்திரமான செய்தி இது. நாக்பூரைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதைவிட அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், பிறப்பிலிருந்தே அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது.


இணையத்தில் வைரலாகும் உருண்டை வடிவ முட்டை!
[Tuesday 2023-06-20 18:00]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. ஆஸ்திரேலியா- வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார்.


எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் கண்டுபிடிப்பு!
[Monday 2023-06-12 18:00]

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களை அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள்.


தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய பாச மகன்!
[Saturday 2023-06-10 16:00]

தன்னுடைய அம்மா இறந்து விட்டதால் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு ஆலயம் கட்டிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியா - திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அப்துல் காதர்- ஜெய்லானி பீவி. இவர்கள் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் தந்தை காதர் உயிரிழந்துள்ளார்.


தனிமையில் இருந்த முதலை கர்ப்பம்; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
[Thursday 2023-06-08 19:00]

அமெரிக்காவில் முதலை ஒன்று தானாக கர்ப்பம் அடைந்துள்ள தகவல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா