Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
 
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி Top News
[Friday 2017-03-24 20:00]

விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.


இந்து சமய பாடத்திட்ட குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு அமைப்பு ; கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு Top News
[Wednesday 2017-03-22 20:00]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது.இதன் காரணமாக இந்து சமயத்தை கஙற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் முகமாக அதற்கென ஒரு புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பேரூர் ஆதினத்தால் கௌரவிக்கப்பட்ட ஈழத்தமிழர் Top News
[Tuesday 2017-03-21 12:00]

தமிழ்நாட்டிலுள்ள பேரூராதீனத்தால் சமய, இலக்கிய தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஈழத்தமிழரான சிவபாதம் கணேஷ்குமார் அவர்களை பாராட்டி (11-03-2017) இந்து இளம்பருதி என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்படடார் . தமிழ்நாட்டிலுள்ள திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் "அருள்திரு சாந்தலிங்க அடிகளார்" குருபூசை விழாவில் இந்து இளம்பரிதி என்னும் விருதினை சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வழங்க அவர்களுடன், முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார், பழனி ஆதினம், கெளமார ஆதினமும் இணைந்து வாழ்த்தினார்கள். அன்றைய குரு பூசை விழாவில் குருவருளும் திருவருளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காலஅட்டவணையுடன் சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும் : அமெரிக்காவின் முன்னாள் தூதுவர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு ! Top News
[Tuesday 2017-03-21 08:00]

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசத்தினை வெறுமன கொடுத்துவிட முடியாது என போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Steven J Rapp அவர்கள் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான் ஒத்துக் கொண்ட எந்தவொரு விடயங்களை முறையாக சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள Steven J Rapp அவர்கள், காலஅவகாசம் என்பது ஒத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதற்கான காலஅட்டவணையுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் வலிறுத்தியுள்ளார்.


கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி : 'அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்' Top News
[Monday 2017-03-20 20:00]

அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி முழுவதிலும் மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் நிறைவுநிலைப்போட்டிகள் கடந்த 18.03.2017 சனிக்கிமை கற்றிங்கன் நகரில் சிறப்பாக நடைபெற்றன.


தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - 2017 Top News
[Monday 2017-03-20 20:00]

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 19.03.2017 அன்று Sportanlage Hochweid Kilchberg என்னும் இடத்தில் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 8.30 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் ஒளி ஏற்றப்பட்டு மற்றும் மண்மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், இலங்கை, இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


திறப்பு விழாவிற்கு தயாராகிறது உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோருக்கான அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டடம்: Top News
[Monday 2017-03-20 19:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிபுற்றோர் அமைப்பு தன்பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாணவேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து 30.03.2017 பிரமாண்டமாக திறந்து வைப்பதற்கான வேலைகள்நடைபெற்று வருகின்றன.


டொறன்ரோ மேயர் ஜோன் டோரி இலங்கை, இந்தியா பயணம் Top News
[Saturday 2017-03-18 18:00]

2014 நகரசபைத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இரட்டை நகர ஒப்பந்த வாக்கு நிறைவேற்றப்படவுள்ளது. டொறன்ரோ மேயர் ஜோன் டோரி அவர்கள் இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை டொறன்ரோப் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பொலிவூட் திரைப்பட தயாரிப்பளர்களை சந்தித்து டொறன்ரோ நகரின் படப்ப்பிடிப்பு சம்பந்த்தப்பட்ட வாய்ப்புக்களை விளம்பரம் செய்ய இந்தியா பயணித்துள்ளார். கடந்த வருடம் படப்பிடிப்பு துறையால் டொறன்ரோ நகரின் பொருளாதாரம் $2 பில்லியணிற்கு மேல் பயன் கண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா தோற்றுவிட்டதா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி ! Top News
[Thursday 2017-03-16 21:00]

இலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரநீதியினை வென்றைடைவதில் ஐ.நா தோற்றுவிட்டா என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்திடம் முன்வைத்துள்ளது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளர் அலுவலகத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி Thomas HUNEKE அவர்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், ஐ.நா மனித உரிமைச்சபைச் செயலர் முருகையா சுகிந்தன் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.


ஜெனீவா வரும் இனப்படுகொலையாளி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர : வழக்குத் தொடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம் !! Top News
[Thursday 2017-03-16 20:00]

அனைத்துலக அரங்கில் போர்குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை நிரபராதிகள் என கூறுவதற்கு ஜெனீவா வருவிருக்கின்ற சிறிலங்காவின் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரக்கு எதிராக வழக்கொன்றினைத் தொடுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பயங்காரவாதத்துக்கு எதிரான மனிதாபிமானப் போரே சிறிலங்கா அரச படையினர் நடத்தினர் எனும் தொனிப் பொருளில் 'விருவங்கே வித்தி வாசக்கய' என்ற பெயரிலான அறிக்கை ஒன்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


யாழ் - நோர்வே பல்கலைக்கழக புரிந்துணர்வு உடன்படிக்கை Top News
[Tuesday 2017-03-14 22:00]

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் நோர்வேயின் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்துக்கும் (எச்.எல்.வி) இடையிலான இணை ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் இடம்பெற்றது.


ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு! Top News
[Tuesday 2017-03-14 21:00]

தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள “நானும் எனது நிறமும்” - தன் வரலாற்று நூல், 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் மகா அரங்கில், 12.03.2017 மாலை நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழீழ உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி, தோழமை வெளியீடு திரு. கு. பூபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


கனடா இடைத் தேர்தல் வேட்பாளர் 'ராகவன் பரம்சோதி'யின் அலுவலக திறப்பு விழா Top News
[Monday 2017-03-13 20:00]

கனடாவில் மார்க்கம் - தோர்ண்ஹில் பகுதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட மத்திய அரசுக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிடும் தமிழரான ராகவன் பரம்சோதி அவர்களது தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 11) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரில் மார்க்கம் / டெனிசன் வீதிகளின் சந்திப்பில் (7200 Markham Road, Markham) இருக்கும் இந்த அலுவலகத்தில் மாலை 2:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் சுமார் 200 க்கும் மேலான தமிழ் மக்களும், இதர சமூக மக்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.


மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு Top News
[Monday 2017-03-13 10:00]

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு - 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்.


பணிநிறைவுப் பெருவிழா.. Top News
[Monday 2017-03-13 09:00]

பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய தமிழ் உறவுகள்.. தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் தன்னலமற்று உழைத்த ஒரு பணியாளரை எப்படி மதிப்பளித்து அவரின் பணிநிறைவைக் கொண்டாட வேண்டுமென்பதை வூப்பெற்றால் நகரத்துத் தமிழ் உறவுகள் கடந்த 11.03.2017 சனிக்கிழமை செய்து காட்டிள்ளார்கள்.


வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!!.. Top News
[Sunday 2017-03-12 07:00]

வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்றைய தினம் (11/03/2017) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இன்று புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ் பொதுகூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர்,பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன், மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்


ஐ.நா மனித உரிமை உயர்ஆணையருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் இந்தியப் பொதுவாழ்வுப் பிரமுகர்கள் வேண்டுகோள் Top News
[Saturday 2017-03-11 19:00]

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதி மொழி களை நிறைவேற்ற மேற் கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் ஒரு வேண்டுகோள் விண்ணப்ப மடலில் தமிழகத் திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், கல்வியி யலாளர்களும் வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணியில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.


டென்மார்க்கில் " எமது நிலம் எமக்கு வேண்டும்" கவனயீர்ப்பு ஒன்று கூடல் Top News
[Saturday 2017-03-11 19:00]

கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டனர். சிங்கள இராணுவத்தாலும், இராணுவத்தின் அருவருடிகளாலும் எமது மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள், காரணமற்ற கைதுகளுக்கு உள்ளாகிய போதிலும் தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து பெண்கள், முதியவர்கள் ,மாணவர்கள் ,குழந்தைகளென உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


மார்க்கம் - தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி தெரிவானார் : Top News
[Friday 2017-03-10 18:00]

மார்க்கம் - தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியிலுள்ள மிலிக்கன் மில்ஸ் சனசமூக நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமானது. மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3 ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் போதாமலிருந்தும் வேட்பாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு தம்மை இத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தியிருந்தனர்.


வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த சிறிலங்கா: - அடுத்து என்னவென்று ஐ.நாவில் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் !! Top News Top News
[Thursday 2017-03-09 22:00]

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வினை பன்னாட்டு நிபுணர்கள் ஜெனீவாவில் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை , ஐ.நா மனித உரிமைச்சபையில் மதியம் 11 மணிக்கு, எனும் தொனிப்பொருளில் பக்க நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுப்பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.


கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல்தமிழ் மொழியெங்கள் உயிராகும்.. Top News
[Wednesday 2017-03-08 19:00]

கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது வளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது.


வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 18:00]

நியமனம் வழங்கக் கோரி பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பட்டதாரிகள் தமது முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 07:00]

வேலைவாய்ப்பை வழங்கக்கோரி முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரை எந்த உறுதியான பதிலும் வழங்காத நிலையில், இன்று தமது போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று மனிதச் சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு யாழ்ப்பாண கல்விச் சமூகம் ஒத்துழைப்ப வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.


மனிதம் சாகவில்லை ஆனால் நாங்கள்தான்!!
[Tuesday 2017-03-07 16:00]

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கற்சிலைமடு என்னும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுபவர்தான் தர்சன் என்னும் 27 வயதுடைய இளைஞர். இவருக்கு பாடசாலையில் மாதாந்தப் படியாக ரூபா 5000.00ல் இருந்து ரூபா 10,000.00 வரை வழங்குகின்றார்கள். இவர் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இப்பகுதியிலே தொண்டர் ஆசிரியராகக் கடமைபுரிகின்றார்.


நீங்களும் உதவி செய்ய முன்வரலாம்.. Top News
[Friday 2017-03-03 19:00]

கனடா வன்னிச் சங்கத்தினது தொடர்ச்சியான முயற்சியினால் மாற்றுத்திறனாளியான மேரிபாலன் கிரிசாந்தன் அவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்குரிய முச்சக்கர வாகனம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாகனத்தினை வாங்கி வழங்குவதற்குரிய முதற்கட்ட நிதிஉதவியினை வழங்கிய சுதாகர் பரஞ்சோதி னுநடவயரசயஇ ஆளைளளைளயரபய நிறுவன உரிமையாளர் அவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தினர் தங்கள் இதைய பூர்வமாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். அத்தோடு மேற்படி நிதி உதவியினைப் பெறுவதற்கு எல்லாவகையிலும் உழைத்த அமையத்தின் தலைவர் திரு பொ. சிவசுதன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.


ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது . Top News
[Friday 2017-03-03 19:00]

தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை கேட்டறிந்ததோடு மிகுந்த கரிசனையோடு கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கினார்.


பிரித்தானியாவில் நடைபெற்ற மாசி மாத மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Thursday 2017-03-02 23:00]

லெப் கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், லெப் கேணல் கௌசல்யன், கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம், மகளிர் படையணி லெப் கேணல் புவிதா, வான் க௫ம்புலி கேணல் ரூபன், வான் க௫ம்புலி லெப் கேணல் சிரித்திரன், ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், பேரன்னை பார்வதியம்மா, மாமனிதர் சந்திரரேரு மற்றும் அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.


பிரான்சு குடியரசுச் சிலைக்கு முன்பாக இடம்பெற்ற கேப்பாப்புலவு கவனயீர்ப்புப் போராட்டம் Top News
[Thursday 2017-03-02 19:00]

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்று (01.03.2017) புதன்கிழமை பிரான்சு குடியரசுச் சிலை முன்பாக (Republique) பிற்பகல் 15.00 மணிமுதல் 18.00 மணிவரை கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.


6 வது நாளாக ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம் Top News
[Thursday 2017-03-02 09:00]

இன்று மதியம் saverne நகரபிதாவை சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர். குளிரான கால நிலையை கடந்து வந்ததை அறிந்த நகரபிதா சிறந்த முறையில் அனைவரையும் உபசரித்ததோடு கரிசனையோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடக்கும் கொடுமைகளை கேட்டறிந்தார். சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப்பயணம் strasbourg நகரை நோக்கி செல்கின்றது.


பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன் Top News
[Thursday 2017-03-02 08:00]

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி தெற்கு, பலாலி, வசாவிளான், தோலகட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். சொந்த நிலத்திலிருந்து வெளியேறி 30 வருடங்களாக தனியார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா