ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்: | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 21, 2024 [GMT]

ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்: Top News
[Thursday 2020-09-17 20:00]

நான்கு கனேடிய தமிழர்கள் நீண்ட நெடுந்தூரம் நீதிக்கான நடை பயணத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்காக Auguest 31, 2020 இல் Brampton நகரில் இருந்து ஒட்டாவா நோக்கி ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக September 7 ஆம் நாள் Montreal இலிருந்து மூன்று தமிழ் கனேடியர்கள் ஒட்டாவா நோக்கி தமது நடை பயணத்தை தொடங்கினர். கடினமான பாதையில் கால்கள் வீங்க பாதங்கள் வேக அவர்களின் நீதிக்கான நடை பயணம் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு வழி நெடுக இருந்தது. கனேடிய பூர்வீக குடிமக்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


  

வழியெங்கும் தமிழரல்லாத வேற்றின மக்கள் ஈழ தமிழருக்கு நடந்த அநீதிகளை அறிந்துகொண்டனர். சிலர் நடைபயணம் செய்தோருக்கு COVID19 காலப்பகுதியிலும் பாதுகாப்பான முறையில் தேநீர் வழங்கி நன்றி பகிர்ந்தனர். கனடிய தமிழர்கள் தன்னார்வமாக நீண்ட தூரம் நடந்தோருக்கு உறுதுணையாக அவர்களுடன் வழியெங்கும் சென்றனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் நடைப்பயணத்திற்கு நிறையவே இருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி தமிழருக்கு மட்டுமன்றி உலகின் பலபாகங்களில் எழும் குரல் அதானல் தான் ஐநா August 31 ஐ அதற்கான நாளாக அறிவித்திருந்தது.

September 13 ஆம் நாள் ஒட்டாவாவில் இரு நகரங்களிலிருந்தும் இருந்து வந்த அணியினர் இணைந்து கொண்டனர். ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் முது தமிழர் அமைப்பு அடங்கலாக ஒன்பது தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடை பயணம் மேற்கொண்டோரின் உயரிய நோக்கை நன்றியுடன் பாராட்டி Ottawa Vincent Massey Park இல் ஒன்று கூடலை செய்து கனடிய தமிழரின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கனடாவின் Toronto, Montreal Ottawa எனும் மூன்று நகரிலிருந்தும் தமிழர்கள் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழருக்காக புலம் பெயர் தமிழர்கள் நீதி கிடைக்கும் வரை ஒன்றாக ஓயாது இருப்போம் என்ற செய்தியை சொல்லி நின்றனர்.

நிகழ்வின் மேலதிக படங்களை பார்வையிட https://www.puthinamphotos.com/

Brampton இல் இருந்து நடைபயணம் தொடங்கிய தமிழர்களின் ஒரு குறிக்கோள்களில் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி விடயத்தில் தமிழர்களை இணைத்தல். தமிழ் ஊடகங்கள், எல்லா கட்சிகளிலும் இருக்கும் கனடிய தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஈழத்தில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இணைந்து நீதி வேண்டி குரல் கொடுத்திருந்தனர். கனடிய தமிழ் அமைப்புகள் எல்லோருமே ஆதரவுகளை தெரிவித்திருந்தனர். September 13 அன்றே தமிழரை ஒன்றாக இணைத்தல் என்ற அவர்களின் குறிக்கோள் நிறைவேறியிருந்தது.

September 14 ஆம் நாள் ஓட்டாவா பாராளுமன்றை நோக்கி Montreal, Ottawa Toronto மற்றும் பல பாகங்களிலிருந்தும் நூறுக்கணக்கான கனேடியர்கள் Vincent Massey Park இலிருந்து தொடங்கி Carleton University வழியாக கனடிய பாரளுமன்றத்தை அடைந்தனர். Carleton University 2018 இல் ஏழு கனேடிய தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய இரண்டாம் சர்வதேச தமிழர் தாயகம் மற்றும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும் தலைப்பிலான மாநாடு முப்பதுக்கு மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் விவாதிக்க பட்டு உலகில் உள்ள 21 தமிழ் அமைப்புகள் ஒன்றாக தீர்மானம் நிறைவேற்றிய இடமாகும்.

இதே பல்கலை கழகத்தில் தான் 1999 இல் தமிழரின் அரசியல் ஒற்றுமையை கூறும் முதலாம் சர்வதேச மாநாடு நடைபெற்றிருந்தது. தமிழர்களின் ஒற்றுமை காலத்திற்கு காலம் சிதைவடையும் போதெல்லாம் சில நிகழ்வுகள் தமிழர்களை இணைக்கும். அந்த நான்குபேர் தொடங்கிய ஒற்றுமை குரல் பாராளுமன்ற முன்றலில் தெளிவாக உலகுக்கு COVID19 கட்டுப்பாடுகளை முழுமையாக பேணியபடி உரத்து கூறப்பட்டது. உலகு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய நீதியை புறம் தள்ளி செல்ல முடியாது என்ற செய்திதான் அது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்கள் தொடர்ந்து ஓயாது குரல் கொடுப்பர் என்ற செய்தியை உலகுக்கு சொல்வது நடைபயணம் மேட்கொண்டோரின் இன்னும் ஒரு குறிக்கோள்.

இந்த செய்தியை பல கனேடிய ஊடகங்கள் September 14 இரவே " Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka" எனும் தலைப்பில் காவி வந்தன. CTV, Global and Mail, Canadian Press, The Star, The Review என பல பிரபல கனடிய ஆங்கில ஊடகங்கள் கனடிய பிரதமருக்கு அளிக்கப்பட்ட சிறிலங்காவின் இறையாண்மையை விசாரணைக்கு வழிவிட வேண்டி நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில வருடங்களாக சிறிலங்காவின் கட்டளை இராணுவ அதிகாரிகள் மேல் Magnitsky Act சட்டத்தை பாவித்து முதல் கட்டமாக பயண தடைகளை போட வேண்டும் என கூறிவருவதும் குறிப்பிட தக்கது.

அமெரிக்க அரசு சிறிலங்கா இராணுவ தலைவர் மேல் சில மாதங்கள் முன்பு பயணத்தடை செய்திருந்தது. இத்தகைய ஆரம்ப கட்ட செயல் தமிழருக்கு என்றோ ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கும். கனடிய வெளியுறவு அமைச்சரும் பாராளுமன்ற கேள்வி பதிலின் போதுஅத்தகைய பயண தடை சிறிலங்கா இராணுவ தலைமை மீது போடுவது சாத்தியம் தான் என கூறியிருந்தார்.

ஈழ தமிழர்கள் ஆயிரக்கணக்கில் சிறிலங்காவின் இனஅழிப்பில் காலத்திற்கு காலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2009 இல் போர் முடிந்த பின்னரும், ஐநா முதல் பல உலக அரசுகளுக்கு தெரிந்தே ஆயிரக்கணக்கில் தமிழர்கள் சிறிலங்கா இராணுவ பிடியில் இறுதியாக தமிழ் உறவுகள் கண்டனர். அதில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட காணொளி சாட்சிகளாக ஐநாவில் உள்ளது. மேலும் பலருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. தமது பிள்ளைகளை சிறிலங்கா இராணுவம் கொண்டு சென்றபோது பார்த்திருந்த பெற்றோர்கள் பல அடுக்குமுறைகளுக்கு நடுவிலும் தொடர்போராட்டங்களில் ஈடு படுகின்றனர்.

அதில் அறுபதுக்கு மேற்பட்டோர் கடந்த பத்து வருடத்தில் இறந்துள்ளனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். அதீத அடக்குமுறை அவர்கள் மீள் இன்றும் உள்ளது. இதை ஈழத்தில் மட்டக்கிளப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெளிவாக கூறியுள்ளார். புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை பற்றியும் கூறியிருந்தார். சிறிலங்காவின் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றம் மற்றும் தமிழ் இனஅழிப்பு குற்றங்களை புறம்தள்ளி அதை மறந்து உலகம் பயணித்து செல்ல முடியாது. அப்படி பயணித்தால் ஈழத்தில் தமிழரின் இருப்பு முழுமையாக அழிந்து விடும். இந்த நீதிக்கான குரல்கள் புலத்தில் இருக்கும் வரை தான் ஈழத்தில் தமிழரின் குறைந்த பட்ச இருப்பும் இருக்கும்..

-வேல்- Vel Velauthapillai

Ref:

கனடாவின் பிரதான ஊடகங்கள் பலவும் இலங்கை இந்திய ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்த செய்தியாக இந்நிகழ்வு கவனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.thestar.com/news/canada/2020/09/14/activists-urge-trudeau-government-to-act-on-disappearances-in-sri-lanka.html

https://www.tamilguardian.com/content/canadian-mp-calls-magnitsky-sanctions-sri-lanka

https://www.melitanewera.ca/news/national-international-news/activists-urge-trudeau-government-to-act-on-disappearances-in-sri-lanka-1.24202950

https://www.un.org/en/observances/victims-enforced-disappearance

https://thereview.ca/2020/09/11/walkers-seek-help-to-find-missing-people-in-sri-lanka/

https://montamil.ca/?p=13976&fbclid=IwAR0gudgb1uAXmgFAXpblTIGAqM1VTYxr17KF_X6D0YSiDSPUcieIE7Q69kM

https://www.theglobeandmail.com/canada/article-activists-urge-trudeau-government-to-act-on-disappearances-in-sri-2/

https://www.ctvnews.ca/politics/activists-urge-trudeau-government-to-act-on-disappearances-in-sri-lanka-1.5104492

https://www.680news.com/2020/09/14/activists-urge-trudeau-government-to-act-on-disappearances-in-sri-lanka/

http://todaysnorthumberland.ca/2020/09/09/the-walk-for-justice-for-victims-of-enforced-disappearance-goes-through-alderville-first-nation/

https://www.colombotelegraph.com/index.php/a-walk-to-keeping-the-hope-alive/

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா