முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்: | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


  

'முரளிதரனை மலையக மக்களின்; அடையாளமாகக் கட்டமைக்க முயல்வது..முரளிதரன் மலையகத்தின் அடிப்படைவசதிகளற்ற காம்பறாக்கள் எனப்படும் குச்சு விட்டில் வாழ்ந்து,உடுத்த நல்ல உடையும், வயிறாற உண்ண நல்ல உணவும் இல்லாமல் தோட்டப்பாடசாலையில் படித்து முன்னேறி உயர்ந்த நிலைக்கு வந்தவர் என்ற ரீதியில் கதை சொல்வது..முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலையை யாழ் சைவ வெள்ளியாகிய மனநிலையுடன் முடிச்சுப் போடுவது..நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்த சிங்கள தேசிய வாதத்துக்குச் சிறீலங்கா தேசியம் என்ற போர்வையைப் போர்த்தி வெள்ளையடிக்க முயலும் முரளீதரனுடைய பிழைப்பு வாதத்தை நியாயப்படுத்துவது...'இப்படி இந்த பிரச்சனையின்பாற்பட்ட பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லலாம்.

முதலில் முத்தையா முரளிதரன்; இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தோட்டத் தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவரல்ல.அவர் இலங்கையிலுள்ள குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல் செல்வாக்குள்ள ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.தோட்ட லயன்களும் தோட்டப்பாடசாலையும் அவருக்கு பரீட்சயமில்லாதவை.

அவர் படித்ததெல்லாம் கண்டியிலுள்ள பிரபல பாடசாலையில்.இந்தப் பின்னணிதான் அவர் சிறீலங்கா துடுப்பாட்ட அணியில் இடம்பிடிப்பதற்கு உதவியாக இருந்தன.ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகவோ அல்லது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பைபைச் சேர்ந்த ஒரு சராசரித்தமிழ் குடும்பத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாக அவரால் அந்த இடத்திற்குச் சென்றிருக்க முடியாது.அதேபோல பௌத்த சிங்கள பேரினவாதம் கோலோச்சும் சிறீலங்கா விளையாட்டுத்துறையில் ஒரு தமிழன் என்ற வகையில் அவர் தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்கு தன்னுடைய அடையாளத்தை இழந்து ஒத்தோடி அரசியல் செய்தே ஆகவேண்டும்.

முரளிதரன் இதைத்தான் செய்தார்.இது தான் உண்மை.மாறாக அவர் தன்னுடைய அடையாளத்தை முன்னிறுத்தி மலையக மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், அவர்களின் அவல வாழ்வு பற்றி பொது வெளியில் பேசி இருந்தால் எப்போதே அவரை சிறீலங்கா துடுப்பாட்ட அணியிலிருந்து தூக்கி வெளியில் வீசியிருப்பார்கள்.

இந்தவிடயத்தில் முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்.குட்டி முதலாளித்துவ அதிகார வர்க்கம் என்பது தன்னுடைய நலனிலேயே எப்போதும் குறியாக இருக்கும்.பொதுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் அதற்கு வேண்டப்படாத அல்லது தங்களது நலனுக்குத் தேவைப்படும் போது ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ளத் தக்க விடயங்களாகும். முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை ஒடுக்கப்படும் மக்களின் நண்பனாக இருப்பதை விட ஒடுக்குபவர்களின் நண்பனாக இருப்பதே அவரது இருப்புக்கும் பொருளாதார நலனுக்கும் உகந்தது என்ற வகையில் ராஜபக்ச குடும்பத்தை அவர் ஆதரிக்கிறார்.

இந்த உண்மையை அவர் மூடி மறைப்பதுதான் பிரச்சனை. அவரை மலையக மக்களின் பிரதிநிதியாக துடுப்பாட்ட வரலாற்றில் தமிழன் என்ற இன அடையாளத்தை முன்னிறுத்தி சாதனை படைத்த ஒருவராக பார்ப்பது தவறு.மலையக மக்களின் உரிமைக்காக போராடி அதிகார வர்க்கத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான முல்லோயா கோவிந்தன் மற்றும் மலைய மக்களின் நல்வாழ்வுக்காகத் தனது தேட்டங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதும் உழைத்த நடேசையர் போன்றவர்களுடன் ஒப்பிடும் பொது முத்தையா முரளிதரன் செல்லாக்காசுக்கு ஒப்பானவர்.

அடுத்து முத்தையா முரளிதரனுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு என்பது சிறீலங்கா அணிக்காக விளையாடியதற்காகவோ அல்லது அந்த அணியில் தனது இருப்பை தக்க வைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவோ ஏற்பட்ட ஒன்றாகக் கருத முடியாது.துடுப்பாட்டத்துக்கு அப்பால் தன்னுடைய இருப்பையும் பொருளாதார நலன்களையும் தக்க வைப்பதற்காகப் பௌத்த சிங்கள பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவர் பொது வெளியில் தெரிவித்த கருத்துக்களும், அவற்றை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகளுமே அவரது விளையாட்டு திறமையை ரசித்து வரவேற்ற தீவிரமான ரசிகர்களைக் கூட அவர்மீது கோபம் கொள்ள வைத்திருக்கிறது.

இந்தக் கோபத்தை பொத்தாம் பொதுவாக யாழ்ப்பாண அதிகார வர்க்கம் எதிர் மலையக மக்கள் என்று அடையாளப்படுத்தும் வேலையைப் பௌத்த சிங்கள பேரினவாதிகள் தங்கள் ஒத்தோடிகளைக் கொண்டு கன கச்சிதமாகச் செய்துவருகின்றனர்.மலையக மக்கள் சக்தி என்பது ஒருங்கிணைந்த உழைக்கும் மக்கள் சக்தி என்பதும் இந்த சக்தி உரியமுறையில் வழிநடத்தப்பட்டால் தங்களது பேரினவாத அரசியலுக்கு ஆப்பு வைக்கும் என்பதும் சிங்கள தலைமைகளுக்குத் தெரியும். இதனாலேயே முன்னர் மலையக மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டது.இப்போது இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டே பௌத்த சிங்கள பேரினிவாத தலைமைகள் மலையகம் எதிர் யாழ் அதிகார வர்க்கம் என்ற முரண்பாட்டைக் கூர்மையடைய வைக்க முயல்கின்றன.

முத்தையா முரளிதரன் என்ற குட்டி முதலாளித்துவ பிரமுகர் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கையை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக மடைமாற்றிவிட இந்த சக்திகள் முயல்கின்றன.யாழ்ப்பாண அதிகார வர்க்கம் மலையக மக்களுக்கு இழைத்த துரோகத்தையும் அவர்களை நடத்திய விதத்தையும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.ஆனால் அதேநேரம் மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறித்த பௌத்த சிங்கள பேரினவாதிகளுடன் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்தும் பிணைந்தும் அரசியல் செய்ததையும்; செய்து கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இன்றைக்கு முத்தையா முரளிதரன்; தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு விதந்து போற்றும் மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வருவதற்கு ஏணியாகப் பயன்படுத்திய சிறீலங்கா சுதந்திரக்கட்சி 1970களில் மலையக மக்களை அவர்கள் வாழ்ந்த தேயிலைத் தோட்டங்களைவிட்டு விரட்டியத்த வரலாறும், அந்த மக்கள் வாழ வழியின்றி உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கில் பட்டிணியால் மடிந்த வரலாறும்,எஞ்சியோர் புற்களை உண்டு உயிர் பிழைத்த வரலாறும் கறைபடிந்த அத்தியாயங்களாக உள்ளன.அன்றைய காலகட்டத்தில் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் என்பதும் வரலாறு.

அடுத்து முத்தையா முரளிதரன்; இந்தப் பிரச்சனை தொடர்பாக அளித்த தன்நிலை விளக்கத்தில் தனது குடும்பம் ஜேவிபியால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.'இலங்கையை தன்னுடைய நவகாலனியாக வைத்திருக்க முயலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகப் போரிடுவது' என்பது ஜேவிபியின் இலக்குகளில் ஒன்று .ஜேவிபி தனது முதலாவது கிளர்ச்சியின் போது, மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் முகவர்களாகக் கணித்தது.1987-89 ல் நடந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது இது மாற்றமடைந்தது.இலங்கை குடிமக்களாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும், இந்தியக் குடிமக்களாக இலங்கையில் வாழ்ந்து இந்திய நலனை முதன்மைப்படுத்தும் குட்டி முதலாளிகளுக்கும் வேறுபாடுள்ளது என்று அது ஒப்புக்கொண்டது.

இந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது கணிசமான மலையக இளைஞர்கள் ஜேவிபியில் இணைந்திருந்தனர்.ஆனால் இந்த கருத்தியல் மாற்றத்தை ஜேவிபியில் ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்த்துவந்தனர். ஒட்டு மொத்த மலையக மக்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களாகவே அவர்கள் கருதினார்கள்.சோவன்ச அமரசிங்க இதில் முக்கியமானவர்.அவரின் வாரிசுகளில் ஒருவரான விமல்வீரவன்ச பௌத்த சிங்கள பேரினவாத காவலர் என்று சொல்லுமளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வந்தவர்.கடந்த தேர்தலில் முத்தையா முரளிதரன் அவருடன் கைகோர்த்துக்கொண்டு கொழும்பிலும் மலையகத்திலும் மலையக மக்களின் வாக்குகளைப் பிளவு படுத்தி அவர்களது தனித்துவமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய முயன்றார்.

இது அந்த மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்த செயலுக்கு எந்தவித்திலும் குறைவானதல்ல.பௌத்த சிங்கள பேரினவாதம் முத்தையா முரளீதரனின் பிரபலத்தை முதலீடாக வைத்து அரசியலில் துஸ்ரா பந்துவீச்சைச் செய்கிறது என்பதே உண்மையாகும்.முத்தையா முரளிதரன் தனது பிரபலத்தை முதலீடாக வைத்து மலையக மக்களின் அவலங்களை,அவர்களின் நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையை, வெளிப்படுத்துவதற்கு முயன்றிருந்தால் அவரை நாங்கள் ஆதரிக்கலாம்.MIA என்கிற மாதங்கி அருட்பிரகாசம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயத்தன்மையை உலகுக்கு எடுத்துச் சொன்ன மாதிரி, முத்தையா முரளிதரன்; மலைய மக்களின் அவலங்களை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும்.முத்தையா முரளிதரனை எதிர்ப்பதென்பது அவரது ஒத்தோடி அரசியலுக்கு எதிரானதேயன்றி அவர் மீதான பொறாமையின் பாற்பட்ட எதிர்ப்பல்ல.

-சிவா சின்னப்பொடி-

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா