இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


  

தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன. குடிமக்கள் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி இவ்விடயத்தில் அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பிரகடனம் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்ட போது அவர் “இந்த முன்னெடுப்பை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால் சிறிதரனைப் போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள்.

அப்பிரகடனத்தின் பின்னணியில் சுமந்திரன் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிரகடனமானது போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்றும் உள்நோக்கமுடையது என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. தமிழ்த்தரப்பு கையெழுத்திட்ட முதலாவது உடன்படிக்கை இலங்கை வரலாற்றில், மகா சங்கத்தோடு தமிழ்த்தரப்பு கையெழுத்திட்ட முதலாவது உடன்படிக்கை இது. ஆனால் அது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களால் பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரகடனக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தரும் தகவல்களின்படி, பிரகடனக்குழு நேபாளத்துக்குச் சென்றபோது அதற்கு வேண்டிய வசதிகளை சுவிட்சர்லாந்து செய்து கொடுத்திருக்கின்றது. அந்த நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தில் முன்பு அரசியல் செயலராக இருந்த ஒருவர் மேற்படி சந்திப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார். ஆயின், அந்தப் பிரகடனத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கு நாடுகளின் உள்நோக்கங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறு ஒரு பிரகடனத்தை உருவாக்குவதால் மேற்கு நாடுகளுக்கு என்ன நன்மை? பிரகடனமானது ரணில் விக்ரமசிங்க இப்பொழுது முன்னெடுத்து வரும் உண்மை மட்டும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

அதாவது அவர் பொறுப்புக்கூறும் விடயத்தில் முன்னேறுவது போன்ற ஒரு தோற்றத்தை அது கட்டியெழுப்ப உதவும். அதன்மூலம் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும் வழிகளை இலகுவாக்கும்.

அடுத்த அதிபர் தேர்தல்

அடுத்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டால் அது ஒப்பீட்டளவில் தமக்கு அனுகூலமானது என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. எனவே தேர்தலை நோக்கி ரணில் விக்ரமசிங்கவைப் பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு.

போர்க்குற்றங்களுக்கு எதிரான பரிகார நீதியை அழுத்தமாக கேட்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். இந்த விடயத்தில் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கின்றது. எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றை மகா சங்கத்துடன் உடன்பாட்டுக்கு வர வைப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களின் பயங்களைக் குறைக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா?

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யூலி சங் “சமூகங்களுக்கு இடையேயான புரிதலை விசாலமாக்குவதற்கும், நீடித்த நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சியை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம்” என்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் பிரகடனக் குழுவைச் சந்தித்தபின், “இந்தச் சந்திப்பும், ஐக்கியத்திற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட பன்மைத்துவமும் அமைதியும் கொண்ட இலங்கையை உருவாக்கும் முன்னெடுப்பிலான இமாலயப் பிரகடனத்தை ஆதரிப்பதும் எமக்குப் பெருமை தருவதாகும். நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாசங்கத்தின் செயற்பாடு

பொதுவாக மேற்கு நாடுகளில் நல்லிணக்க முயற்சிகளை மகா சங்கம் முழுமனதாக ஆதரித்தது கிடையாது. ஆனால் இமாலய பிரகடனத்தை மகா சங்கம் எடுத்த எடுப்பில் எதிர்க்காததற்குக் காரணம் என்ன?

இலங்கையில் மகா சங்கம் எனப்படுவது இலங்கை அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதி. அது ஒரு மத நிறுவனம் என்பதை விடவும் அரசியல் நிறுவனம் என்பதே அதிகம் பொருத்தமானது. பல நூற்றாண்டு காலமாக அரசியல் செய்த ஒரு நிறுவனம். அதற்கு வேண்டிய பாரம்பரியமும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு இது போன்ற பிரகடனங்கள் தேவை. பிரகடனக் குழு மல்வத்த பீடத்தை சந்தித்த பொழுது எதிர்பார்த்ததற்கு மாறாக மகாநாயக்கர் அதிகம் சினேகபூர்வமாகப் பழகியதாக பிரகடனக் குழுவினர் தெரிவிக்கின்றார்கள். பொதுவாக விருந்தாளிகள் வரும் பொழுது மகாநாயக்கர்கள் தமது உதவியாளர்களை பிரித் ஓதுமாறு பணிப்பதுண்டு. ஆனால் பிரகடனக் குழுவுக்காக அவரே பிரித் ஓதியிருக்கிறார். “கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான்....

இமாலய பிரகடனம் ரணிலுக்கு உதவும்

இனவாதத்தையும் வெறுப்பையும் போதிக்கும் இந்தப் பிக்குகளில் ஒரு சிறுபான்மையினர் உரத்த குரலில் இவற்றைப் பேசி வெற்றி பெற்றனர். ஏனென்றால் சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நம்மில் பெரும்பான்மையானவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களில் போதுமானஅளவு உரத்த குரலில் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் அதைச் செய்ய வேண்டும்” என்றும் மகாநாயக்கர் கூறியுள்ளார்.

பௌத்த மகா சங்கங்கள் இதுவரை வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின்படி அவர்கள் இமாலய பிரகடனத்தை எதிர்க்கவில்லை என்பது ஒரு தொகுக்கப்பட்ட அவதானிப்பு. பௌத்த மகா சங்கம் எதிர்க்கவில்லை என்றால், அது சிங்களபௌத்த கட்சிகளின் முடிவுகளில் பெருமளவு தாக்கத்தைச் செலுத்தும். அதே சமயம் இப்பிரகடனம் ரணிலைப் பிணையெடுக்கக்கூடியது என்பது எதிர்க்கட்சிகளுக்கு உவப்பானது அல்ல. எனினும் மகா சங்கத்தைப் பொறுத்தவரை அது கட்சி கடந்து சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை எப்படி பாதுகாப்பது என்றுதான் சிந்திக்கும் ஒருபுறம் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் தகமை ரணிலுக்கே இருப்பதாக மகா சங்கம் கருதுகின்றது. எனவே ரணிலைப் பலப்படுத்த இப்பிரகடனம் உதவும். இன்னொருபுறம், அவர்களுடைய போர்வெற்றி நாயகர்களான ராஜபக்சக்களையும் படைப் பிரதானிகளையும் பாதுகாக்க வேண்டும்.

ஏற்கனவே கனடா மூத்த இரண்டு ராஜபக்சக்களுக்கும் படைப்பிரதானிகளுக்கும் எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது. அமெரிக்காவிலும் நிலைமை இறுக்கமாக இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகள் முன்னாள் படைத் தளபதிகளுக்கு விசா வழங்குவதில்லை. கடைசியாக நடந்த ஐநா கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உதவி ஆணையாளர் மேலும் 10 படைத் தளபதிகளைக் குறித்துப் பிரஸ்தாபித்திருந்தார். எனவே சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகிய படைக்க கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதே அரசு கட்டமைப்பின் மற்றொரு பகுதியான பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு.

சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையே இடைவெளி அந்த அடிப்படையில் இது போன்ற பிரகடனங்களின் மூலம் மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்தி, நல்லிணக்க முயற்சிகளைத் தமக்கு பாதுகாப்பான எல்லைக்குள் இருந்தபடி, ஊக்குவித்து, தமது படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க மகா சங்கம் முயற்சி செய்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால், தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு; பன்னாட்டு நாணய நிதியத்துக்கு உண்டு; பௌத்த மகா சங்கத்துக்கு உண்டு; ராஜபக்சங்களுக்கு உண்டு.

எனவே,மேற்கண்ட எல்லாருடைய நலன்களையும் ஒரு பொதுப்புள்ளியில் இணைப்பதற்கு இமாலயப் பிரகடனம் உதவுமா? அதேசமயம், உள்ளூரில் உலகத் தமிழர் பேரவைக்கு வேறு ஒரு உள்நோக்கம் இருக்க முடியும் என்று யாழ்ப்பாணத்தில் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் உண்டு.

சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையே இப்பொழுது இடைவெளி அதிகம். சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் ரணிலின் மீது அளவுக்கு மிஞ்சி வாய்வைத்துவிட்டார். அதனால் இடைவெளி மேலும் அதிகரித்திருக்கின்றது.

ஆனால் அடுத்த அதிபராக ரணில் வருமிடத்து, அப்படி ஒரு இடைவெளியை வைத்திருப்பது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பாதுகாப்பாக இருக்காது. எனவே சுமந்திரனை ரணிலை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இப்படி ஒரு பிரகடனம் உருவாக்கப்பட்டதா? என்பது அந்த ஊகம். இந்தப் பிரகடனம் அதன் இறுதி அர்த்தத்தில் ரணிலைப் பிணையெடுக்கும்.

அவ்வாறு சுமந்திரனுக்கு நெருக்கமான அமைப்பொன்று ரணிலைப் பிணையெடுத்து, அவருடைய நன்மதிப்பை வென்று, அதன்மூலம் சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது.

மேற்படி பிரகடனம் ரணிலைப் பிணையெடுப்பதற்கு உதவும் என்பது வெளிப்படையானது. அது மேற்கு நாடுகளின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை சிங்கள பௌத்த நோக்கு நிலையிலிருந்து முன்னெடுப்பதற்கும் உதவலாம். போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதற்கு உதவலாம்.சில சமயம் சுமந்திரனுக்கு ரணிலுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்க உதவலாம். ஆனால், தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்குகளை வென்றெடுப்பதற்கு அது உதவப் போவதில்லை.

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா