தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளின் வரலாற்றுத் துரோகங்கள்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளின் வரலாற்றுத் துரோகங்கள்!
[Monday 2026-06-22 16:00]

இது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, முஸ்லிம் அரசியல் சக்திகள் முன்னெடுத்துவரும் தமிழர்களுக்கு எதிரான மற்றும் துரோக அரசியல் குறித்த வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பே இதுவாகும். ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறினால், பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு சிங்களத் தலைவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குவார்கள் என்ற நியாயமான அச்சம் தமிழ் தலைவர்கள் மத்தியில் உருவானது. இந்த ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான ஒரு அரசியல் கவசமாகவே 50:50 சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கை உருவானது. சோல்பரி ஆணைக்குழு 1944-இல் இலங்கைக்கு வந்தபோது, ஜி.ஜி. பொன்னம்பலம் இந்தச் சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை மிக வலுவான சட்ட மற்றும் தர்க்க ரீதியான வாதங்களுடன் முன்வைத்திருந்தார்.


  

அவரது முக்கிய வாதம்:

"எந்தவொரு தனித்த சமூகமும் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்று, மற்ற சமூகங்களின் மீது தமது விருப்பங்களைத் திணிக்கக் கூடாது" .

"50:50 முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பெரும்பான்மைச் சிங்களவர்கள் அரசாங்கத்தை அமைக்கக் கட்டாயமாக ஏதேனும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவை நாட வேண்டி வரும். இது ஒருமித்த கருத்தை உருவாக்கும்" .

"ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் சர்வாதிகாரமாக மாறிவிடாமல் இருக்க, சிறுபான்மையினரின் வாக்கு பலம் நாடாளுமன்றத்தில் சமமாக இருக்க வேண்டும்". என அவர் வாதிட்டார்.

இக்கோரிக்கையை முஸ்லிம் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு ஆதரவளிக்காமல், டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான சிங்களப் பெரும்பான்மைத் தரப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தனர்.

முஸ்லிம் தலைவர்களான டி.பி. ஜாயா மற்றும் சேர் ராசிக் பரீத் ஆகியோர் இந்தக் கோரிக்கைக்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சோல்பரி ஆணைக்குழுவின் முன் அவர்கள் சாட்சியமளிக்கும் போது:

"எங்கள் மூதாதையர்களான அரேபிய வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்தபோது, உள்ளூர் மற்றும் தென்னிந்திய வர்த்தகத் தொடர்புகளுக்காகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்கள். எனவே, தமிழ் என்பது எங்களின் 'தாய்மொழி' போன்று ஆகியிருக்கலாமே தவிர, நாங்கள் 'தமிழ் இனம்' அல்ல."

" 8-ஆம் நூற்றாண்டுகளில் மத்திய கிழக்கில் (குறிப்பாக ஹாஷிமைட் வம்சத்திலிருந்து) இருந்து வந்து இலங்கையின் கரையோரங்களில் குடியேறிய அரேபிய வர்த்தகர்களின் நேரடி வாரிசுகள் தாங்கள் எனவே எங்களைத் தமிழர்களுடன் இணைத்துச் சிறுபான்மையினராகக் கணக்கிடக் கூடாது" என வாதாடி சிங்களப் பேரினவாதத்தை ஆதரித்திருந்தார்கள்.

இதன் மூலம் டி.எஸ். சேனநாயக்கவின் 'சிறுபான்மையினரை பிரித்தாளும் சூழ்ச்சி' எளிதாக வெற்றியும் அடைந்திருந்தது.

முஸ்லிம் தலைவர்களின் இந்தச் செயலை அன்று தமிழர் தரப்பு "பச்சைத் துரோகம்" என்று வர்ணித்தது. முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து ஒரே குரலில் சோல்பரி ஆணைக்குழுவிடம் 50:50 கோரிக்கையை வலியுறுத்தியிருந்தால், சுதந்திர இலங்கையில் சிறுபான்மையினருக்கு வலுவான அரசியல் பாதுகாப்புச் சட்டம் கிடைத்திருக்கும் என்றனர்.

50:50 கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 1947-இல் புதிய அரசியலமைப்பு வந்தவுடன் சிறுபான்மைத் தமிழர்களின் அச்சம் உண்மையானது.

1948- மலையகத் தமிழர்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வின் போது, பிரதான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்தச் சட்டமூலத்திற்கு முழுமையாக ஆதரவளித்து சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்தனர்.

நாடாளுமன்ற விவாதங்களில் முஸ்லிம் தலைவர்கள் மலையகத் தமிழர்களை 'தமிழர்கள்' என்ற இன ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்காமல், கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

"இந்தியக் கூலிகள்" "இவர்கள் காசு சம்பாதிப்பதற்காகவே இங்கு வந்தார்கள்". "இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிப்பது, நாட்டை அந்நியர்களிடம் ஒப்படைப்பதற்குச் சமம்" எனக் கடுமையாக கூறினார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவும், முதலாளித்துவச் சிந்தனை கொண்ட பழமைவாதிகளாகவும் இருந்தனர். மார்க்சியக் கொள்கைகள் இலங்கையில் வேரூன்றுவதை அவர்களும் கடுமையாக எதிர்த்தனர். எனவே, இடதுசாரிகளின் வாக்கு வங்கியான மலையகத் தமிழர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சேனநாயக்க எடுத்த நடவடிக்கையை அவர்கள் மனப்பூர்வமாக ஆதரித்தனர்.

ஆரம்பத்தில் இதை எதிர்த்தாலும், ஜி.ஜி. பொன்னம்பலம் பதவி ஆசையால் இதே துரோகத்தை மலையக மக்களுக்குச் செய்தார். இதனால், தமிழ்க் காங்கிரஸிலிருந்து பல தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள்.

1915-ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரத்தில், இஸ்லாமிய மக்களைக் காத்து, அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு அரணாக நின்ற மலையகத் தமிழர்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றியுணர்வை மறந்த இஸ்லாமிய அரசியல்வாதிகள், அதே இனக்கலவரத்தில் ஈடுபட்டிருந்த சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு படுபாதகத் துரோகத்தை மலையகத் தமிழர்களுக்குச் செய்திருந்தார்கள்.

1956- தனிச்சிங்களச் சட்டம்.

ஏ.எம்.ஏ. அஸீஸின் அவர்களைத் தவிர, பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இந்தத் தனிச்சிங்களச் சட்டத்தை ஆதரித்து அரசாங்கத்துடன் கைகோர்த்தனர்.

1944-இல் சோல்பரி ஆணைக்குழுவிடம் முன்வைத்த அதே "அரேபிய வாதத்தை" இவர்கள் பாராளுமன்றத்திலும் முன்வைத்து நியாயப்படுத்தினர்.

சேர் ராசிக் பரீத் நாடாளுமன்ற விவாதங்களின் போது, "முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள் அல்லர். தமிழ் எமது தாய்மொழியும் அல்ல. எமது மூதாதையர்கள் வர்த்தக நோக்கத்திற்காகத் தமிழைக் கற்றுக்கொண்டார்கள். எனவே, மொழி என்பது எங்களுக்கு ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமே. அன்று தமிழைக் கற்றுக்கொண்ட எங்களால், இன்று அரசாங்க மொழியாகச் சிங்களம் வந்தால் அதனையும் கற்றுக்கொள்ள முடியும்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழ் மொழிக்காகப் போராடுவது தமிழர்களின் அரசியல் உரிமையாக இருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்குத் தமிழ் மொழி மீது எந்த உணர்வுபூர்வமான பற்றுதலும் இல்லை என்பதை அவர்கள் அன்று வெளிப்படுத்தினர். பெரும்பான்மை சிங்கள அரசோடு நிற்பதே எமக்குச் சாத்தியமான ஒரே வழி" எனத் தனிச்சிங்களச் சட்டத்தை வலுவாக ஆதரித்தார்கள்.

1971/1972- தமிழர்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் முறை.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், பல்கலைக்கழக நுழைவில் 'கல்வித் தரப்படுத்தல்' முறையைக் கொண்டுவந்தது.

இக்காலகட்டத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் முஸ்லிம் தலைவரான பதியுதீன் மஹ்மூத் ஆவார். அவர் இந்தத் தரப்படுத்தல் முறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இது தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்கியது.

1970-களுக்கு முன்னர் இலங்கையின் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் பெருமளவிலான இடங்களை (சுமார் 40% முதல் 50% வரை) யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த தமிழ் மாணவர்களே தம்வசப்படுத்தியிருந்தனர்.

இதனைக் குறைப்பதற்காகச் சிறிமாவோ அரசாங்கம் 'தரப்படுத்தல்' முறையைக் கொண்டுவந்தது. ஆரம்பத்தில் மொழி அடிப்படையிலும் அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் சிங்கள மொழி மூல மாணவர்களை விட அதிக புள்ளிகள் பெற வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் "யாழ்ப்பாணத்து மாணவர்களுடன், எவ்வித வசதிகளும் அற்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம் அல்லது சிங்கள மாணவர்களை ஒரே அளவுகோலில் போட்டியிடச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என அவர் நாடாளுமன்றத்தில் சிங்கள அரசின் செயற்பாட்டை ஆதரித்து வாதிட்டார்.

இந்தத் தரப்படுத்தல் முறை தமிழ் மாணவர்களின் கல்வியை நேரடியாக அழித்தது. ஒரே வினாத்தாள், ஆனால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை விட 20 முதல் 30 புள்ளிகள் அதிகமாகப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கியது.

தமிழ் மக்களின் பார்வையில், முஸ்லிம் தலைவரான பதியுதீன் மஹ்மூத் தங்களின் ஒரே மூலதனமான கல்வியைக் குறிவைத்துச் சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து அழித்துவிட்டார் என்ற பெருங்கோபம் உருவானது. இது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மனக்கசப்பை மேலும் தீவிரப்படுத்தியது.

1972- சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த 'பிரிவு 29' நீக்கம்.

1972 மே 22 அன்று, சோல்பரி அரசியலமைப்பு நீக்கப்பட்டு இலங்கை ஒரு குடியரசாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்பை அமைச்சர் கொல்வின் ஆர். டி சில்வா இதனை உருவாக்கினார்.

இந்த அரசியலமைப்புச் சிறுபான்மையினருக்குச் சாவுமணியாக அமைந்தது. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த 'பிரிவு 29' நீக்கப்பட்டது.

ஆங்கிலேயர் வழங்கிய சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு இருந்த ஒரே சட்டரீதியான பாதுகாப்பு சரத்து 29(2) ஆகும்.

"எந்தவொரு சிறுபான்மைச் சமூகத்திற்கும் எதிரான அல்லது ஒரு சமூகத்திற்கு மட்டும் சாதகமான எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றம் இயற்ற முடியாது என இந்தச் சரத்து உறுதியளித்தது".

இவை நீக்கப்பட்டு பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்பது அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழ் தலைவர்கள் இதனை எதிர்த்து நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததுடன், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த அரசியலமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பற்றிப் பேசும் முஸ்லிம் தலைவர்கள், பௌத்த மதத்திற்கு அரச அங்கீகாரம் வழங்குவதை எவ்விதத் தயக்கமுமின்றி ஆதரித்தனர். பதியுதீன் மஹ்மூத் மற்றும் ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் பேசுகையில்.

"இலங்கை வரலாற்று ரீதியாக ஒரு பௌத்த நாடு. எனவே, பெரும்பான்மை மக்களின் மதத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் முஸ்லிம்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இஸ்லாமியர்களுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை வழங்கப்பட்டால் அதுவே எமக்குப் போதுமானது" என்று வாதிட்டனர்.

1956-இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமானது, 1972 அரசியலமைப்பில் விதியாக்கப்பட்டது. தமிழ் மொழியின் உத்தியோகபூர்வ அந்தஸ்து மறுக்கப்பட்டபோதும், தனிச்சிங்களத்தை ஆதரித்த முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் அதனை வரவேற்றனர்.

இந்த அரசியலமைப்பு இலங்கை சிறுபான்மை அரசியலில் நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியது.

அமைதி வழியில் போராடி வந்த தந்தை செல்வநாயகம், சட்டத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்தார். தனது நாடாளுமன்றப் பதவியை ராஜினாமா செய்த அவர், 1976-இல் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' மூலம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை அதிகாரபூர்வமாக முன்வைத்தார். இதுவே ஆயுதப் போராட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது.

தமிழ் அரசியல் தரப்பைப் பொறுத்தவரை, 1972 அரசியலமைப்புச் சிறுபான்மையினரின் கழுத்தை நெரித்த ஒரு தூக்குக்கயிறு. அந்தத் தூக்குக்கயிற்றை அரசாங்கம் தயாரித்தபோது, அதற்குத் துணை நின்று நியாயப்படுத்தியவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களே என்ற ஆழமான வடு தமிழ் மக்களின் மனதில் பதிந்தது.

1979- பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA)

1977 பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான UNP, 5/6 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிக முக்கிய அமைச்சரவைப் பதவிகளை வகித்தனர்.

தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்து, தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தத் தொடங்கிய காலகட்டம் அது. இளைஞர்களின் கிளர்ச்சியை முளையிலேயே கிள்ளியெறிவதற்காக ஜூலை 1979-இல் 'பயங்கரவாதத் தடைச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதனை ஆதரித்துப் பாராளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் உரையாற்றி இருந்தார்கள்.

இதில் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதத்தை சர்வதேச அரங்கில் மூடிமறைத்ததில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் பங்கு அளப்பரியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அணிசேரா நாடுகளின் மாநாடுகளில் அவர் பேசுகையில்.

"இலங்கையில் நடப்பது இனப்பிரச்சினை அல்ல, அது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கம், ஆயுதக் குழுக்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத்தான் எடுத்து வருகிறது" என்று PTA சட்டத்தையும், இலங்கை ராணுவத்தின் கொடூரங்களையும் சர்வதேச அளவில் நியாயப்படுத்தினார்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் PTA சட்டத்தின் கீழ் கொத்துக் கொத்தாகக் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக் முகாம்களில் கொல்லப்பட்டனர்.

தமக்கு இழைக்கப்படும் அரச வன்முறையை, இன்னொரு சிறுபான்மைச் சமூகத்தின் தலைவர்கள் (எம்.எச். முகம்மத் மற்றும் ஏ.சி.எஸ். ஹமீட்) நாடாளுமன்றத்திலும் சர்வதேச மன்றங்களிலும் நியாயப்படுத்திக் கொண்டிருந்ததை தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுவே "முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளுக்காகத் தமிழர்களின் இரத்தத்தின் மீது சவாரி செய்கிறார்கள்" என்ற கடுமையான விமர்சனத்தைத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆழமாக விதைத்தது.

இலங்கை அரசியல் நிகழ்வுகள் அனைத்திலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும், அந்த அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தரும் கருவியாக முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளனர்.

1983-ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரம்.

இக்கலவரத்தின் போது, தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டும், அவர்களின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் கொண்டிருந்த வேளையில், ஜே.ஆர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி ஆதரவாகவே செயற்பட்டனர்.

கலவரத்தின் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காமல், சிங்கள மக்களின் கோபத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். அரசில் இருந்த முஸ்லிம் தலைவர்களும் அதே தொணியில் நியாயப்படுத்தி ஆதரித்தனர்.

"தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ராணுவத்தைக் கொன்றதால்தான், பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கோபமடைந்து இவ்வாறு நடந்துகொண்டார்கள். எனவே, இந்தப் பழியானது தனிநாடு கோரும் தமிழ் பயங்கரவாதிகளையே சாரும்" என்று சிங்கள அரசாங்கத்தின் வாதத்தை எம்.எச். முகம்மத் போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எதிரொலித்தனர்.

கறுப்பு ஜூலைக் கலவரத்தால் சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயர் முற்றாகச் சீரழிந்தது. இது ஒரு 'அரச ஆதரவு பெற்ற இனப்படுகொலை' என உலக நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால், இதனை சர்வதேச அளவில் மூடிமறைத்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சரான ஏ.சி.எஸ். ஹமீட் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்றங்களில் பேசிய ஹமீட்.

"இது சிறுபான்மையினருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை அல்ல. இலங்கையைத் துண்டாட நினைக்கும் ஒரு பயங்கரவாதக் குழுவின் தூண்டுதலால் ஏற்பட்ட எதிர்பாராத ஒரு கலவரம் மட்டுமே. அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுபான்மையினரைப் பாதுகாத்து வருகிறது" என்று சிங்கள அரசின் கொடூரங்களை நியாயப்படுத்திப் பேசினார்.

கலவரம் நடந்துகொண்டிருந்த போது, கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் மிகக் கவனமாகத் தங்களைத் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொண்டனர்.

தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் "இது முஸ்லிம்களின் கடை", "நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல" என்று சிங்கள மொழியில் எழுதி வைத்தனர். அதேவேளை சில முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் கொடுத்திருந்தார்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் சமூகத்தின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு, பெரும்பான்மை வன்முறைக் கும்பல்களுடனோ அல்லது அரசாங்கத்துடனோ எந்தவித முரண்பாட்டையும் உருவாக்கிக் கொள்ளாமல் அமைதி காத்தனர்.

1983 கறுப்பு ஜூலையின் போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடந்துகொண்ட விதம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தங்களின் வீடுகள் எரியும்போதும், உறவுகள் வீதிகளில் கொல்லப்படும்போதும், அதே அமைச்சரவையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அதனைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தங்களைக் கொன்றொழித்த அரசாங்கத்தின் சர்வதேசப் பிரதிநிதிகளாகவும், அந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கவசங்களாகவும் செயற்பட்டனர் என்பதைத் தமிழர்களால் மன்னிக்கவே முடியவில்லை.

இந்த துரோக வரலாற்று நிகழ்வுகளின் பின்னரே, முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களுக்காகக் ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தமிழ் தேசியவாத இயக்கங்களிடம் ஆழமாக வேரூன்றியது.

1983 கலவரத்திற்குப் பின்னர், இஸ்லாமிய அரசியல்வாதிகள் சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்துகொண்டு, அரசியல் ரீதியிலான துரோகங்களைக் கடந்து, ஆயுத ரீதியிலும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெருந்துரோகங்களையும் அநீதிகளையும் இழைக்கத் துணை சென்றனர்.

1987- வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு

1944-இல் "நாங்கள் வியாபாரத்திற்காக வந்த அரேபியர்கள், தமிழ் எங்கள் வர்த்தக மொழி" என்று கூறியவர்கள், 1987-இல் எப்படி "நாங்கள் கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகள் என்று உரிமை கோர முடியும்? வந்தேறிய ஒரு வர்த்தகச் சமூகம், எப்படித் திடீரென ஒரு நிலத்தின் பூர்வகுடிகளாக மாற முடியும்?

1987-இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம் அரசியலில் முற்றிலும் ஒரு கபடத்தனமான வாதம் உருவானது. எமது பூர்வீக நிலத்தை தமிழர்களின் தாயகக் கோட்பாட்டுக்குள் அடக்கவோ, எங்களிடம் கேட்காமல் வடக்கோடு இணைக்கவோ முடியாது" என வாதிட்டனர்.

தமிழர்களிடமிருந்து அரசியல் ரீதியாகப் பிரிந்து செல்வதற்காகத் தமது 'தாய்மொழி' (தமிழ்) ஒரு வெறும் கருவிதான் என 1944-இல் கொழும்பு முஸ்லிம் தலைவர்கள் தட்டிக்கழித்தார்கள். ஆனால், அதே மொழியைப் பேசும் கிழக்கு மாகாண நிலப்பரப்பைத் தமிழர்கள் கோரும் போது, "இது எங்கள் பூர்வீக நிலம்" என்று கிழக்கில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் முன்வைக்கும் "அரேபிய வம்சாவளி" வாதம் என்பது அடிப்படையில் ஒரு வரலாற்று முரண்பாடு மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும். ஒருபுறம் தமிழர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட 'அரேபியர்கள்' என்று கூறிக்கொள்வதும், மறுபுறம் தமிழர்களின் தாயகக் கோரிக்கையான வடகிழக்கு இணைப்பை எதிர்க்க 'கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகள்' என்ற உரிமையைக் கோருவதும் தர்க்க ரீதியாக முரண்பாடானதே.

பூர்வீகத் தேசிய இனமான தமிழ் மக்களின் உரிமைகளுக்குத் தடையாகவும், அவற்றை இழக்கச் செய்யும் நாசகார அரசியலை இஸ்லாமிய இனவாத அரசியல்வாதிகள் காலந்தோறும் கையாண்டு வருகிறார்கள் என்பதை இவ்வரலாற்று உண்மைகள் எடுத்துரைக்கின்றன. தமிழ் மொழிக்கு எதிராக, தமிழ் இனத்திற்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதத்துடன் கைகோர்த்து வரலாற்று ரீதியில் அத்துணைக் கொடுமைகளையும் இழைத்துவிட்டு, 'பிறருக்கு எக்கேடும் விளைவிக்கவில்லை; நாங்களே பாதிக்கப்பட்ட சமூகம்' என்று கூறி விரல் நீட்டும் ஒரு நாணயமற்ற கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர் முஸ்லிம் அரசியலர்.

தமிழினத்திற்கு எதிராக முஸ்லிம் அரசியலர் எத்துணை இனவாதக் காழ்ப்புணர்வு கொண்ட உள்ளப்பாங்குடன் இருந்திருக்கின்றனர் என்னும் மெய்ம்மையை இவ்வரலாற்றுப் பதிவுகள் நமக்கு நன்றாக உணர்த்துகின்ற.

  
   Bookmark and Share Seithy.com


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா