புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை: - அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பு | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 23, 2025 [GMT]

புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை: - அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பு
[Monday 2015-12-28 20:00]

முழு பாராளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இச்சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இது கடந்த காலங்களின் தூரநோக்கற்ற அரசியல் அக்கறையீனம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேளைகளில் மலையக தமிழ் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட புதிய வரலாறு ஆகும்.


  

வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்திடும் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்திடும் கட்சிகளுடன் இணைந்து உத்தேச அரசியலமைப்பில் நாம் பிரதிநிதித்துவம் செய்திடும் மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கிடும் பணிகளை நாம் அமைதியாகயும், காத்திரமாகவும் செய்து வருகிறோம். இதற்கான ஆரம்ப கட்ட பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட குழுக்களில் தற்சமயம் நாம் நியமித்துள்ளோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஒரு தொகுதி மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் தமது இல்லத்தில், புதிய அரசியலைமைப்பு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறிதாவது,

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அமைச்சரவை அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால், எதிர்கால பாராளுமன்ற தேர்தல்முறை தொடர்பில் ஆராய்ந்து உரிய ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் நோக்கில்,

  
   Bookmark and Share Seithy.com


யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்!
[Thursday 2025-01-23 16:00]

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை பிற்பகல் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.


அனுர யாப்பாவுக்கும் மனைவிக்கும் பிணை!
[Thursday 2025-01-23 16:00]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஒன்ராறியோ அரசாங்கம் 200 டொலர் வரித்தள்ளுபடி வழங்குகிறது Top News
[Thursday 2025-01-23 16:00]

கார்பன் வரி மற்றும் அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் உட்பட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஒன்ராறியோ அரசாங்கம் $200 தள்ளுபடி காசோலைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கனடா குழந்தை நலன் (CCB)க்கு தகுதியான குடும்பங்களில் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக $200 வழங்கப்படும்.


மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர் மாய்த்த கிளிநொச்சி பெண்! உண்மைகள் வெளிவர வேண்டும்.
[Thursday 2025-01-23 16:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அர்ச்சுனா, கௌசல்யா உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் குறித்து விசாரணை!
[Thursday 2025-01-23 16:00]

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


ஜேவிபி அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர்!- டில்வின் சில்வாவுடன் சந்திப்பு.
[Thursday 2025-01-23 16:00]

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.


பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் உளவியல் பாதிப்பு!
[Thursday 2025-01-23 16:00]

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.


100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்!
[Thursday 2025-01-23 16:00]

தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.


மாணவி துஷ்பிரயோகம்- ஆசிரியர் கைது!
[Thursday 2025-01-23 16:00]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
[Thursday 2025-01-23 05:00]

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா