ஹிருனிகாவிடம் 500 மில்லியன் ரூபா கேட்டு வழக்குத் தொடுக்கிறார் கம்மன்பில! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

ஹிருனிகாவிடம் 500 மில்லியன் ரூபா கேட்டு வழக்குத் தொடுக்கிறார் கம்மன்பில!
[Tuesday 2015-12-29 08:00]

தனக்கு எதிராக அவதூறான செய்திகளை பரப்பியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கவிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.


  

நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர இன்னும் கைது செய்யப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் எதிர்வரும் 2ம் திகதி முதல் கூட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கறுப்புக்கொடி வாரம் அனுஷ்டிக்கப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் நாட்டின் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. கலாசாரமும், உண்மையும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஜனவரி 8 என்பது இருளான யுகத்திற்கு செல்ல வழியை அமைத்த திகதியாகும். இதனால், எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி முதல் 8ம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வீடுகளிலும் தமது வாகனங்களிலும் கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கறுப்புக் கொடிகளை ஏற்றினால், டிபெண்டர் வாகனங்கள் வரும் என்ற அச்சம் இருந்தால், பேஸ்புக் வலைத்தளத்தில் புரோபைல் படத்தில் கறுப்பு கொடியை பதிவேற்றம் செய்து உங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்துங்கள் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா