ஹிருணிகாவை கைது செய்ய முடியுமா? - சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியது சிஐடி | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

ஹிருணிகாவை கைது செய்ய முடியுமா? - சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியது சிஐடி
[Wednesday 2015-12-30 08:00]

தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி அங்கிருந்த ஊழியர் ஒருவரை டிபென்டர் வண்டியில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்ய முடியுமா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது.


  

இந்த சம்பவம் தொடர்பில் ஆறு பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையிலேயே அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை, முறைப்பாட்டாளரின் வாக்கு மூலம், ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வாக்கு மூலம் உள்ளிட்ட ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டு ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனது 62 - 1859 என்ற இலக்கத்தை உடைய டிபண்டர் வண்டியுடன் சந்தேக நபர்கள் ஆறுபேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில்(சீ.சீ.டி) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர் கையளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் இளைஞரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த கடத்தல் மற்றும் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் இரு வேறு வாக்குமூலங்கள் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந் நிலையில் ஊடகங்கள் ஊடாகவும் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. எனினும் ஹிருனிக்கா நேரடியாக கடத்தலுடன் தொடர்புபட்டதாக தெரியவரவில்லை. எவ்வாறாயினும் அவர் ஊடகங்கள் சிலவற்றுக்கு வழங்கிய செவ்விகளில் தான் குடும்ப பிரச்சினை தொடர்பில் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஊடக செய்திகளை நாம் நீதிமன்றில் சாட்சியங்களாக கொள்ள முடியாது. இது தொடர்பில் 1995 ஆம் ஆண்டின் சாட்சிகள் கட்டளைச் சட்டம் தெளிவாக கூறுகின்றது.

இந் நிலையில் தான் நாம் தற்போது வரை செய்துள்ள விசாரணை அறிக்கை, ஹிருனிக்காவின் வாக்கு மூலங்கள், கடத்தப்பட்ட இளைஞரின் வககு மூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சட்டமா அதிபருக்கு அலோசனைப் பெற அனுப்பி வைத்துள்ளோம். ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று ஆலோசனை வழங்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. யார் என்ன சொன்னாலும் பொலிஸ் விசாரணைகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும்.

எவ்வாறாயினும் சம்பவம் இடம்பெற்ற குறிப்பிட்ட நேரத்தில் கைதாகியுள்ள சந்தேக நபர்களுடன் ஹிருணிக்கா பிரேம சந்திர தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளாரா, கடத்தல் தொடர்பில் அவர் கட்டளை பிறப்பித்தாரா, அது தொடர்பில் அறிந்திருந்தாரா என நாம் தற்போது அறிவியல் தரவுகளை வைத்து விசாரணைகளை நடத்துகின்றோம். தொலைபேசி இலக்கங்கள் குறித்தான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இன்று (நேற்று) அவை கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் அதனை மையப்படுத்திய மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா