எந்த அமைச்சைத் தந்தாலும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன்! - என்கிறார் ரம்புக்வெல | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

எந்த அமைச்சைத் தந்தாலும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன்! - என்கிறார் ரம்புக்வெல
[Thursday 2015-12-31 08:00]

தேசிய அரசாங்கத்தில் என்னால் ஒருபோதும் இணைந்து கொள்ள முடியாது. எனக்கு மிகப் பெரிய அமைச்சுப் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனை பொறுப்பேற்க நான் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


  

அரசாங்கம் பாரிய குழப்பங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் என்றுமில்லாதவரான குழப்பகரமான வரவு-செலவுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்தது. இந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், வைத்தியர்கள், துறைசார் நிபுணர்கள், தொழில்சார் வல்லுநர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுபோன்றதொரு குழப்பகரமான வரவு-செலவுத் திட்டம் இதற்கு முன்னர் வந்ததில்லை.

அடுத்ததாக இந்தியாவுடன் சீபா என்ற வர்த்தக உடன்படிக்கையை பெயரை மாற்றிவிட்டு கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் சிக்கலுக்குள்ளாகும். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவானது எந்தவகையிலும் பொருத்தமற்றதாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் பிரேரணைக்கு அமைவாக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதாயின் அதில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள், உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் இலங்கையின் விசாரணைச் செயற்பாடுகளில் உள்ளீர்க்கக் கூடாது. அந்த வகையில் பார்க்கும் போது அமெரிக்கப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு வரவழைக்க முயற்சிக்கின்றமை உறுதியாகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தவகையில் பார்க்கும்போது இவ்வாறான தீர்க்கதரிசனமற்ற அரசாங்கத்தில் என்னால் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது. எனக்கு மிகப் பெரிய அமைச்சுப் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனைப் பொறுப்பேற்க நான் தயாரில்லை. இந்த அரசாங்கத்தில் நாங்கள் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா