போருக்குப் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு! - கேள்வி எழுப்பும் சர்வதேச ஊடகம். | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

போருக்குப் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு! - கேள்வி எழுப்பும் சர்வதேச ஊடகம்.
[Thursday 2015-12-31 08:00]

போர் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும் இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளமை, பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த டிப்ளொமெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இறுதிப் போருக்காக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக்காக 175 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தது. அது 2011ல் 194 பில்லியன்களாக அதிகரித்தது. 2013ம் ஆண்டு 235 பில்லியன் ரூபாய்களாக இருந்த அந்த ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்காக 307 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


  

2009ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்ற போதும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அதில் காவு கொள்ளப்பட்டன. இராணுவ வீரர்கள், விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் என்ற இந்த உயிர்பலிகள் ஏற்பட்டன. இந்த நிலையிலும் ஏன் இலங்கை அரசாங்கம், பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று த டிப்ளொமெட் ஆராய்ந்துள்ளது.

இதன்படி வெளியக பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதைக் காட்டிலும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வரக்கூடிய உள்ளக ஆபத்துக்களையும் சமாளிக்கும் வகையில் தமது பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ளவே இலங்கை பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கி வருவதாக த டிப்ளொமெட் கருத்து வெளியிட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா