ஒப்பந்த கொலைகாரர்களை படையினர் என கருத முடியாது! - சமன் ரத்னபிரிய | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

ஒப்பந்த கொலைகாரர்களை படையினர் என கருத முடியாது! - சமன் ரத்னபிரிய
[Thursday 2015-12-31 19:00]

அரசியல்வாதிகளது ஒப்பந்த கொலைகாரர்களை படையினர் என கருத முடியாது என பிரஜை அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த கொலையாளிகளை படையினர் எனக் கருதுவது உண்மையான படையினருக்கு செய்யும் அவமதிப்பு. படையினரில் பெரும்பாலானவர்கள் உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவையாற்றினர்.


  

ஆனால், அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்காக கொலைகளை செய்து சுறாக்களுக்கு போட்டவர்களை படையினர் எனக் கூறுவது உண்மையான படையினருக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாகும். முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்றால், தற்போதைய அரசாங்கம் செய்ய போகும் நல்லாட்சியின் முன்னுதாரண நடவடிக்கை என்ன?.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதை படையினருக்கு எதிரான அடக்குமுறையாக சித்தரிக்கின்றார். இதனால், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சம்பந்தமாக மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் குறித்து மாத்திரமல்ல, நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க போன்றவர்களின் கொலைகள் மற்றும் அந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சுதந்திர ஊடக அமைப்பு கூறியுள்ளதன்படி 31 ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்து என்பது பற்றியும் விசாரணை நடத்தி தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும். கம்மன்பில போன்றோரின் கருத்துக்களும் நடத்தைகளும் உண்மையான படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகும் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா