முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டமைப்பின் பேச்சுக்கு செல்லாதது ஏன்? - கைதடியில் சித்தார்த்தன் விளக்கம் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டமைப்பின் பேச்சுக்கு செல்லாதது ஏன்? - கைதடியில் சித்தார்த்தன் விளக்கம் Top News
[Friday 2016-01-01 08:00]

யாழ். கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - 2015 கைதடி மாதர் அபிவிருத்திச் சங்க முன்றலில் நேற்று நடைபெற்றது. கைதடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திருமதி செ.கேதாரகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


  

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திருமதி ப.செல்வநாயகம் (அதிபர், குருசாமி வித்தியாசாலை, கைதடி), திரு. ச.தங்கராசா (முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர்), திருமதி சு.தனபாலசிங்கம் (முன்பள்ளி இணைப்பாளர், தென்மராட்சி), திரு. சி.செல்வநாயகம் (செயலாளர், கயிற்றசித்தி கந்தசுவாமி தேவஸ்தானம்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும், முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், புதன் கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றார்கள். செவ்வாய்க்கிழைமை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் என்னை அலுவலகத்திற்கு அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் நடாத்தும் மேற்படி கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது இந்த அம்பிகா முன்பள்ளியினுடைய கலைவிழாவில் நான் கலந்து கொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டிருக்கின்றேன். ஆகவே அவர்களுக்கு மனக் கஸ்டத்தைக் கொடுக்கக்கூடாது. எனவே, இந்த கலை நிகழ்விலே நான் கலந்துகொள்கிறேன். அத்துடன் கொழும்பு சென்று திரும்பி வருவதற்கு நேரமும் போதாது என்பதை நான் அவருக்கு விளக்கிக் கூறியதோடு, முக்கியமாக தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிந்த நீங்கள் திரு. சம்பந்தன் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தையில் இருக்கின்றீர்கள் தானே. மற்றையவர்களும் வருவார்கள். நீங்கள் இப்போது பேச்சுவார்த்தையை முன்னெடுங்கள், நான் அடுத்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறேன் என்றேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

மேலும், சிறுவர்களுடைய கல்வியின் முக்கியத்துவதை வலியுறுத்திய அவர், இந்த ஆரம்பப் பாடசாலை சிறுவர்களுடைய வாழ்க்கையிலே கல்வியின் ஆரம்பமாகத் திகழ்கின்றபடியால் இப் பாடசாலைகளின் முன்னேற்றம் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா