இபோச பஸ்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

இபோச பஸ்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்! Top News
[Friday 2016-01-01 19:00]

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியபணியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பருத்தித்துறையிலிருந்து
  

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம் ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு மேலதிக மாவட்டச் செயலர் பா.செந்தில்நந்தனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் உபாலி ஹிருபத்கொடுவ, ' வடமாகாணத்தில் இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபையின் 57 பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் பஸ் சேவை நடத்தாமல் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

'கிளிநொச்சி சாலை முகாமையாளரைத் தாக்கச் சென்றுள்ளனர். மன்னாரிலுள்ள பஸ் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, சாரதி கண்ணில் படுகாயமடைந்தார். எமது பஸ்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தனியார் துறையினர் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பஸ்ஸில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் நாங்கள். அவர்கள் எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர். தொழிற்சங்கங்களும் எங்களைக் கேள்வி கேட்கின்றன. மாவட்டச் செயலாளர், வடமாகாண மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர்கள், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பல்வேறு தரப்பினர்களுக்கும், இந்தச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். அவர்கள் தடுத்து நிறுத்தாவிடின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் போராட்டம் செய்வோம்' என்றும் அவர் கூறினார்.

'வடமாகாணத்தில் போக்குவரத்துச் சபையின் 250 பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுகின்றனர். ஆனால் சுமார் 1,500 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. எங்களிடமுள்ள கொஞ்ச பஸ்களை வைத்து மக்களுக்கு சேவை வழங்குவதற்கு ஏன் விடுகின்றீர்கள் இல்லை. எங்களுடன் தனியார் துறையினர் ஏன் போட்டிக்கு வருகின்றனர். இதுவரையில் எந்தவொரு தனியார் பஸ்ஸும் சேதமாக்கப்படவில்லை' என்று அவர் மேலும் கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா