மகிந்தவைப் புகழ்ந்த மைத்திரி, சந்திரிகாவை மறந்தார்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

மகிந்தவைப் புகழ்ந்த மைத்திரி, சந்திரிகாவை மறந்தார்!
[Saturday 2016-01-02 08:00]

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஒவ்வொரு வகையில் நாட்டுக்கு நல்லதையே செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எல்லா ஜனாதிபதிகள் பற்றிக் குறிப்பிட்ட போதும் சந்திரிகா குறித்து எதுவும் கூறவில்லை. 2016ம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி பொதுமக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.


  

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள உஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆட்சியாளர்களும் மாறியுள்ளனர். கடந்த காலத்தில் அவ்வாறு ஆட்சியில் இருந்த அனைத்து தலைவர்களும் நாட்டுக்கு சிறப்பான சேவைகளையே செய்துள்ளனர். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் இந்நாட்டுக்கு சேவையாற்றியுள்ளனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இந்நாட்டை ஒற்றுமைப்படுத்தி, வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும், முன்னைய பிரதமருமான பண்டாரநாயக்க இந்நாட்டில் நிலவிய குலப்பெருமைகளுக்கு சாவுமணி அடித்து, சாதாரண பொதுமகனும் அதிகாரத்து வருவதற்கான வழியை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சியில் பொதுச் சொத்துக்களை மக்கள் மயப்படுத்தினார். அதே போன்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, முன்மாதிரியொன்றை வெளிக்காட்டியிருந்தார். ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் ஏழைகளின் வறுமை ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஜனசவிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆயினும் நல்லாட்சி மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பை நல்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலம் தொடர்பாக ஜனாதிபதி எதுவித கருத்தும் வெளியிடவில்லை என்பதுடன், நாட்டுக்கு சேவையாற்றிய முக்கிய தலைவர்கள் வரிசையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா