வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்! - சுவாமிநாதன் உறுதி | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்! - சுவாமிநாதன் உறுதி
[Saturday 2016-01-02 08:00]

வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த வாழ்கை சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.


  

அதன்படி தற்போது 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கையின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும். முதல் வருடத்தில் 11 ஆயிரம் வீடுகளும் 2,3,4 ஆம் வருடங்களில் தலா 18 ஆயிரம் வீதம் வீடுகள் அமைக்கப்படும். தற்போது முகாம்களில் பல இன்னல்களின் மத்தியில் வாழ்க்கை நடத்தும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டிய தேவை எனக்கு உள்ளதால் இந்த பணியை நிறைவேற்ற அர்பணிப்புடன் செயற்படுவேன்.

இந்நிலையில் முதலாவதாக 11 ஆயிரம் வீடுகளை அமைத்துவிட்டால் 32 முகாம்களில் வசிக்கும் எமது மக்களை 6 மாதங்களுக்குள் விடுவிக்க முடியும் அதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பூரன ஒத்துழைப்பு கிடைப்பது மாத்திரமன்றி அமைச்சரவையின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. இந்த வீடுகள் அமைத்துக்கொடுத்துடன் விட்டுவிடாமல் அவர்களுக்கான முழுமையான சலுகைகளும் வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்துடன் மலசலகூட மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படவுள்ளது. அதேபோல் கிணறுகள், தளபாடங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்த பணிகளுக்காக முன்னர் 2 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 14 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் தனியாக தமிழர்கள் மட்டும் என்று பார்க்காது வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் முழுமையான சலுகைகள் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தமது உரிமைகள் சரிவர கிடைக்காத நிலையில் 30 வருட யுத்தத்தில் ஈடுபட்டு பொருளாதார ரீதியிலும் தமிழ் மக்கள் பல துன்பகரமான நிலைபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கான தீர்வை பெற்றுத்தர எத்தனிப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா