வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு! என்கிறார் அமைச்சர் ராஜித | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு! என்கிறார் அமைச்சர் ராஜித
[Saturday 2016-01-02 08:00]

இந்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆரம்பம் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் நாட்டையும் மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்தி ஜனநாயக, மக்கள் நலன் பேணும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.


  

அதேபோல் நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள், சர்வதேச படையெடுப்புகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார முறையிலும் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு பாரிய கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மக்களை பொருளாதார சுமையில் இருந்து காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்கு மிகவும் சிறந்த ஆண்டாக நிறைவடைந்துள்ளது.

இந்த புது வருடம் கடந்த ஆண்டைப்போல மேலும் பல நன்மைகள் ஏற்படும் வகையில் அமையும் என்ற வாக்குறுதியை எம்மால் கொடுக்க முடியும். மூவின மக்களும் தமது உரிமைகளுடன் வாழக்கூடிய வகையில் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணையும் ஒரு ஆட்சியை எம்மால் முன்னெடுக்க முடியும்.

அதேபோல் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வளர்ச்சி கண்ட நாடாக இலங்கையை மாற்றும் நடவடிக்கைகளை பிரதான இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் மேற்கொள்ளும். குறிப்பாக கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் இன ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் இந்த ஆண்டிலும் தொடரும்.

புதிதாக அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலோசித்து வருகின்றன. ஆகவே புதிய அரசியல் அமைப்பில் நிச்சயமாக அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றத்தின் போராட்டத்தில் தமிழ் மக்கள் மிகப்பெரிய பங்காளர்களாக காணப்பட்டனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எம்மை நம்பி எம்முடன் கைகோர்த்தமைக்கு நாம் எப்போதும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்களுடன் கைகோர்த்து செயற்பட தாயாராக உள்ளோம்.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இந்த அரசாங்கம் விடப் போவதில்லை. நாம் வடக்கு கிழக்கு மக்களை அக்கறையுடன் கவனித்து வருகின்றோம். அதேபோல் சிங்கள தமிழ் உறவையும் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினை தீரும். அதேபோல் நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். அதை தொடர்ந்தும் தக்கவைப்போம் என அவர் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா