முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைக்கு காணிகளை அபகரிக்க முயற்சி! - உரிமையாளர்கள் எதிர்ப்பு | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைக்கு காணிகளை அபகரிக்க முயற்சி! - உரிமையாளர்கள் எதிர்ப்பு Top News
[Saturday 2016-01-02 21:00]

வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் இதனால், காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேரா உறுதியளித்த போதிலும், காணி உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


  

முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள 617 ஏக்கர் காணியினை கடற்படைக்கு வழங்குவது தொடர்பிலான கூட்டமொன்று, முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணியுரிமையாளர்கள் மூன்று தலைமுறையாக மேற்படி காணியில் வாழ்ந்து வருகின்றோம். 617 ஏக்கரில் 150 ஏக்கர் வயல் நிலமும் 276 ஏக்கர் அரச காணியும் காணப்படுகின்றது. எங்களுடைய காணிகளை கடற்படையினரின் முகாம் அமைப்பதற்கு விட்டுக்கொடுக்க முடியாதென தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும், ஊடகவியலாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணி உரிமையாளர் என்ற வகையில் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அவர், 30 ஆண்டுகளாக போரினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களின் காணிகளை நல்லாட்சிக் காலத்தில் சுவீகரிக்க முயல்வது ஜனநாயக விரோத போக்கெனவும் காணிக்கான ஆவணங்கள் போரினால் பலபேரிடம் இல்லையெனவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி சுவீகரிப்பதென்பது இறுதி முடிவல்ல. காணிக்குரிய ஆவணங்கள் உள்ளவர்கள் பத்து நாட்களுக்குள் கரைதுறைபற்று பிரதேச செயலரிடம் பதிவுகளை மேற்கொள்ள முடியும். ஆவணங்களை இழந்தவர்கள் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் காணிக்குரிய ஆவணங்களை பிரதேச செயலரிடம் ஒப்படையுங்கள். பெப்ரவரி முதல் வாரத்தில் நாம் முல்லைத்தீவுக்கு வருகைதந்து முடிவுகள் எடுப்போம் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியின் காணி உரிமையாளர்களும் கடற்படை அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச செயலர் எஸ்.திரேஸ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா