வடமாகாண விவசாய அமைச்சு 99.66 வீத நிதி ஒதுக்கீட்டையும் செலவிட்டது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

வடமாகாண விவசாய அமைச்சு 99.66 வீத நிதி ஒதுக்கீட்டையும் செலவிட்டது!
[Sunday 2016-01-03 19:00]

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


  

வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டில், விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கென மாகாணசபையால் அபிவிருத்தி நன்கொடை நிதியாக 193 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி விவசாயத் திணைக்களத்துக்கு 90.84 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 52.36 மில்லியன் ரூபா, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 43.8 மில்லியன் ரூபா, கூட்டுறவுத் திணைக்களத்துக்கு 6 மில்லியன் ரூபா என்ற வகையில் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

2015 டிசம்பர் 31ஆம் திகதிக்குரிய நிதிநிலை அறிக்கையின்படி ஒதுக்கப்பட்ட நிதியில் 192.34 மில்லியன் ரூபா, அதாவது 99.66 வீதம் செலவழிக்கப்பட்டுள்ளது. பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக விவசாய அமைச்சுக்கும், அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களுக்கெனவும் 14.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிதி விவசாய அமைச்சுக்கு 8 மில்லியன் ரூபா, விவசாயத் திணைக்களத்துக்கு 2.5 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றுக்குத் தலா 1 மில்லியன் ரூபா என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2015 டிசம்பர் 31ஆம் திகதிய நிதிநிலை அறிக்கையின்படி இந்த நிதி முழுமையாக, அதாவது 100 வீதம் செலவழிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சுக்கும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இந்நிதியில் எதுவும் அவசரம் அவசரமாகச் செலவழித்து முடிக்கப்படவில்லை.

ஆண்டு ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு கருத்திட்டங்கள் யாவும் எவ்வித மாற்றமும் இன்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையில் பூரணமாகச் செய்து வடக்கு மாகாண சபைக்குரிய நடப்பு 2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் விவசாய அமைச்சுக்கும், அதற்குரிய திணைக்களங்களுக்கெனவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக 410 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 26.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டைப் போன்றே, இந்த நிதியிலும் எதுவும் வீண்போகாத வகையில் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவும் உரிய காலத்தில் வினைத்திறன் மிக்கதாகவும் விளைபயன்மிக்கதாகவும் நிறைவேற்றப்படும் என்று உறுதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா