மாற்று அரசியல் கட்சி உருவாகலாம், அரசியலில் எதுவும் நடக்கலாம்! - என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

மாற்று அரசியல் கட்சி உருவாகலாம், அரசியலில் எதுவும் நடக்கலாம்! - என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Sunday 2016-01-03 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


  

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல அது ஒரு இயக்கம். இதனை கண்டு எவரும் அச்சம் கொள்ளவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை. வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. இது அரசியல் கட்சியாக செயற்பட போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான விழியில் செயற்பாடுகளை முன்னெடுக்காது விடின் எதிர்காலத்தில் வேறொரு பெயரில் வேறு வடிவத்தில் மாற்று அரசியல் கட்சி ஒன்று உருவாக முடியும். அரசியலில் எதுவும் நடக்கலாம். எதனையும் தற்போது உறுதியாக கூறிவிட முடியாது எனத் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு தீர்வு திட்டங்களை தயாரித்து வழங்குகின்ற போது அது தமிழ் மக்களை பலவீனப்படுத்தி விடாதா? என ஊடவியலாளர்கள் வினவிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித தீர்வுத் திட்டத்தையும் தயாரித்ததாக தெரியவில்லை தயாரிக்கவும் இல்லை. அப்படி அவர்கள் தயாரித்திருந்தால் அதனை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்? எந்த மக்களுக்காக தீர்வுத்திட்டத்தை தயாரித்தார்களோ அந்த மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏன் இதுவரை மேற்கொள்ள வில்லை? தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கிறது என்றதும் இனி அவர்களும் எதனையும் உருவாக்க முடியும். ஆனால் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப அவ்வாறு செய்ய வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது. மாகாண முதலமைச்சருக்கு தெரியாது. மாகாண அமைச்சர்களுக்கு தெரியாது. உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தெரியாது. இப்படி எவருக்கும் தெரியாது எவ்வாறு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்க முடியும்? எனவேதான் தமிழ் மக்கள் பேரவை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கௌரவமாகவும், ஒரே நாட்டுக்குள் சுயாட்சியுடனும் வாழக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சில வேளை இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்கி அது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை விட சிறப்பாக இருந்தால் அதனை அவர்கள் அரசிடம் சமர்ப்பிக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா