தெற்கில் பரவும் சிங்கத்தின் இரத்தம் பிரசாரம்! - இனக்கலவரத்துக்கு தூபம்? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

தெற்கில் பரவும் சிங்கத்தின் இரத்தம் பிரசாரம்! - இனக்கலவரத்துக்கு தூபம்? Top News
[Sunday 2016-01-03 20:00]

சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்ற இனவாதத்தை பரப்பும் வகையில், நாடு முழுவதும் சிங்கத்தின் இரத்தம் (சிங்க லே) ஸ்ரிக்கர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பேரினவாத சக்திகள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள இனப்பற்றுள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் வாகனங்களில் இந்த ஸ்ரிக்கர்களை ஒட்டுவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக ஊடகங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.


  

குறித்த இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சிங்கள மக்களை கவரும் வடிவத்திலும் வர்ணத்திலும் அச்சடிக்கப்பட்ட இந்தப் பொருட்கள் பாதை ஓரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. சிங்க லே என்று பொறிக்கப்பட்ட ரீசேர்ட்டும் இலட்சினையும் 3 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை சமூக வலைத்தளங்களிலும் இந்த குறியீடுகள் பரப்பப்பட்டு லட்சக்கணக்கான விருப்பக் குறிகள் இடப்பட்டு திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறான பிரசாரங்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட கலவரங்களை தூண்டும் முன் ஆயுத்த நடவடிக்கை என்று சிவில் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை உடலில் குறித்த சின்னத்தை பச்சை குத்தும் நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கலவரங்களின்போது சிங்களவர்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்கவே இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றதா என்று கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. சிங்கள பௌத்த வாதத்தை தூண்டும் இச் செயலை அண்மையில் அமைச்சர் ஹரின் பெணான்டோ கண்டித்திருந்தார்.

இதேவேளை இது திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு செயற்பாடு என்றும் இதன் பின்னணியில் யாரோ ஒரு முக்கியஸ்தர் உள்ளார் என்றும் தெரிவித்துள்ள ராவய பத்திரிகை இது மகிந்த ராஜபக்சவின் இனவாத எண்ணக் கருவிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்க லே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா