இன்னமும் கடற்படையின் பிடியில் சம்பூர் பாடசாலைகள்! - காற்றில் பறக்கும் ஜனாதிபதியின் வாக்குறுதி | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

இன்னமும் கடற்படையின் பிடியில் சம்பூர் பாடசாலைகள்! - காற்றில் பறக்கும் ஜனாதிபதியின் வாக்குறுதி
[Monday 2016-01-04 07:00]

சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.


  

கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள எல்லைக்குள் தான் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முருகன் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளும், மக்கள் குடியிருப்பு நிலங்களும் உள்ளன. குறித்த பாடசாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2005ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பிரதேச மக்கள் யுத்த சூழ்நிலையில் தமது பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சியில் அந்த பிரதேசம் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றமும் தடைப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களின் காணிகளை மீள கையளிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, அங்குள்ள கடற்படை முகாமுக்கு மாற்று காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இரண்டு, மூன்று மாதங்களில் கடற்படையினர் குறித்த பாடசாலைகளிலிருந்து வெளியேறி விடுவார்கள் என ஜனாதிபதியினால் அவ்வேளை உறுதிமொழி வழங்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்கிறார் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா. இது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர மனுக்களில் அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணியை தொடர்பு கொண்ட போது குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் கடற்படையுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளாதாக பதில் அளித்தார். அடுத்த இரண்டு மாதங்களில் அந்த பகுதியிலிருந்து கடற்படை வெளியேறிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


திசைகாட்டி வசமான மானிப்பாய் தொகுதி!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


பருத்தித்துறையும் தேசிய மக்கள் சக்தியிடம் வீழ்ந்தது!
[Friday 2024-11-15 05:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.


மட்டக்களப்பு தபால் வாக்குகள் - தமிழரசு வெற்றி!
[Friday 2024-11-15 03:00]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். வாக்கு எண்ணும் மையத்தில் கலகத் தடுப்பு பொலிஸ் குவிப்பு!
[Friday 2024-11-15 03:00]

பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கலகத் தடுப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நல்லூர் தொகுதியையும் பறிகொடுத்த தமிழ்க் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பெரு வெற்றி பெறுகிறது தேசிய மக்கள் சக்தி! - அனைத்தையும் அள்ளுகிறது.
[Friday 2024-11-15 02:00]
நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் அனைத்திலும், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 16 தபால் மூல வாக்குகள் 29 தொகுதி ரீதியான முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மாத்தறை மாவட்டத்திலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

வன்னியையும் இழந்த தமிழ் கட்சிகள்!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி!
[Friday 2024-11-15 02:00]

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா