மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்,மனைவி சுட்டுக்கொலை! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 13, 2024 [GMT]

மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்,மனைவி சுட்டுக்கொலை!
[Sunday 2024-11-10 17:00]

காலி வீதி, அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில், இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  

உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை - மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்

  
   Bookmark and Share Seithy.com


வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம்- மீள செயற்படத் தொடங்கியது!
[Wednesday 2024-11-13 04:00]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் அடிப்படையில் இணைய பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டு அது நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.


யாழ். மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!
[Wednesday 2024-11-13 04:00]

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் இடமாற்றம்!
[Wednesday 2024-11-13 04:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.


21ஆம் திகதி 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு!
[Wednesday 2024-11-13 04:00]

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரான்சுக்கு அனுப்புவதாக 5 இலட்சம் ரூபா மோசடி!- யாழ். சுயேட்சை வேட்பாளர் கைது!
[Wednesday 2024-11-13 04:00]

பிரான்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.


சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் சட்ட மீறல்கள்- 490 முறைப்பாடுகள்!
[Wednesday 2024-11-13 04:00]

ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.


விடத்தல்தீவு இறால் பண்ணைக்கு 168 ஏக்கர் நிலம்- உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை!
[Wednesday 2024-11-13 04:00]

இறால் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்காக வில்பத்துக்கு அருகில் உள்ள விடத்தல்தீவு பாதுகாப்பு வனப் பகுதியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் வனஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது.


இன்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும்!
[Wednesday 2024-11-13 04:00]

பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணி இன்று இடம்பெறவுள்ளது. விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகளை பிரதான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2024-11-13 04:00]

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காணி விடுவிப்பு குதிரைக் கொம்பு தான்!
[Tuesday 2024-11-12 17:00]

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா