வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மீட்பு! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 14, 2024 [GMT]

வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மீட்பு!
[Thursday 2024-11-14 05:00]

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டன.

இதன் போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு,குறித்த வாகனத்தின் சாரதி,உதவியாளர் உள்ளடங்களாக வாகனத்தில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ கிராம் அரிசி பக்கட், 2 கிலோ கிராம் மா,1 கிலோ சீனி,20 கிராம் கிராம் ரின்சோ பக்கட் 5 வீதம் தயார் செய்யப்பட்ட கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும்,மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


இன்று நாடாளுமன்றத் தேர்தல்!
[Thursday 2024-11-14 05:00]

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல், இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கும் ஆரம்பமாகும் தேர்தல் 4 மணியுடன் நிறைவடையும்.


சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Thursday 2024-11-14 05:00]

சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தேர்தல் பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் பொலிசார், படையினர்!
[Thursday 2024-11-14 05:00]

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.


விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாத சிறைத்தண்டனை!
[Thursday 2024-11-14 05:00]

இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கிறது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.


சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் மீண்டும் வங்குரோத்து!
[Thursday 2024-11-14 05:00]

2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


இடது கை ஆட்காட்டி விரலில் மை!
[Thursday 2024-11-14 05:00]

பொதுத்தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-11-14 05:00]

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


5 மதுபான உற்பத்தி நிறுவனங்களை இழுத்து மூட நடவடிக்கை!
[Thursday 2024-11-14 05:00]

இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!
[Thursday 2024-11-14 05:00]

2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.


நாளை பொதுத் தேர்தல்- வாக்குப்பெட்டிகளுடன் வாக்களிப்பு நிலையங்கள் தயார்! Top News
[Wednesday 2024-11-13 16:00]

இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா