கருணா, பிள்ளையான் தோல்வி! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 15, 2024 [GMT]

கருணா, பிள்ளையான் தோல்வி!
[Friday 2024-11-15 16:00]

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்


  

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


மட்டக்களப்பு விருப்பு வாக்குகள்!
[Friday 2024-11-15 16:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிக விருப்பு வாக்குகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்பவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.


சுமந்திரன் தோல்வி- புதுமுகங்களுடன், நாடாளுமன்றம் செல்லும் சிறிதரன், கஜேந்திரகுமார்!
[Friday 2024-11-15 16:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் வஅதிக விருப்பு வாக்கு பெற்று நாடாளுமன்றம் செல்பவர்களின் விபரம் வருமாறு-


வன்னியில் தெரிவான எம்.பிக்கள்!
[Friday 2024-11-15 16:00]

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


திருகோணமலையில் இரண்டு தமிழர்கள் தெரிவு!
[Friday 2024-11-15 16:00]

திருகோணமலை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டு தமிழர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தமிழரசுக்கும் ஒரு போனஸ் ஆசனம்!
[Friday 2024-11-15 16:00]

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


நாடாளுமன்றில் முதல்முறையாக நுழையும் இரு மலையகப் பெண்கள்!
[Friday 2024-11-15 16:00]

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.


சரத் வீரசேகர தோல்வியடைந்தார்!
[Friday 2024-11-15 16:00]

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார். முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளனர். 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.


159 ஆசனங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
[Friday 2024-11-15 16:00]

பாராளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 40ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


கிளிநொச்சியில் வெற்றியை உறுதி செய்தது தமிழரசு!
[Friday 2024-11-15 06:00]

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) வெற்றி பெற்றுள்ளது.


முல்லைத்தீவு தொகுதி தமிழரசிடம்!
[Friday 2024-11-15 05:00]

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா