நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 16, 2025 [GMT]

நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது!
[Friday 2024-12-27 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.


  

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (28) வவுனியாவில் நடைபெறவுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் தலைமைப் பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா நீடிக்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ள எழுத்து மூலமான கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சில ஆண்டுகளுக்கு முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பதில் பொதுச்செயலாளராகச் செயற்படுவதற்கு உங்களை (ப.சத்தியலிங்கம்) நானே முன்மொழிந்திருந்தேன்.

அதற்கு அமைவாக, தாங்கள் பதில் பொதுச்செயலாளராக எனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச் செயற்பட்டு வருவதோடு தேர்தல் பதிவேடுகளிலும் அவ்றே காணப்படுகின்றது.

அத்துடன், கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடவில்லை. அதனடிப்படையில் அக்கூட்டம் செல்லுபடியற்றதாகும்.

அதேநேரம், எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கான அறிவிப்பினை விடுவதற்கு முன்னதாக குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை எனக்கு அனுப்பி வைக்குமாறும் எனது அனுமதியின் பின்னரே உறுப்பினர்களுக்கான அறிவிப்பைச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், ஒக்டோபர் 7ஆம் திகதி என்னால் சிறிதரன் மற்றும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமானது பதவி விலகும் அறிவிப்பை உள்ளடக்கியது அல்ல. நான் கட்சியின் தலைமைப்பொறுப்பினை சிவஞானம் சிறிதரனை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்களாகின்ற போதும் சிறிதரன் தலைமைப்பதவியை பொறுப்பேற்காமையின் காரணமாக நானே தலைமைப்பதவியில் நீடிக்கின்றேன்.

அவ்வாறான நிலையில் கட்சியின் தலைமைப்பதவி சம்பந்தமாக வாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது தேவையற்ற விடயமாகும். தற்போதும் நானே தலைமைப்பதவியில் நீடித்துக் கொண்டிருக்கின்றேன்.

மேலும், கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற முறையற்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்த நான் உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை அளித்துள்ளேன்.

அந்த வகையில், 28ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


என்பிபி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு- இருவர் காயம்!
[Thursday 2025-01-16 04:00]

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிவிக்கப்படுகிறது.


பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!
[Thursday 2025-01-16 04:00]

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்தக் குழுக்களில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை புனரமைக்க திட்டம்!
[Thursday 2025-01-16 04:00]

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த எண்ணெய் தாங்கிகளை அண்மையில் பார்வையிட்டதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


15 நாட்களில் 2,352 பேருக்கு டெங்கு!
[Thursday 2025-01-16 04:00]

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவாக இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 374 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் பதிவாகியுள்ளனர்.


இறக்குவதில் தாமதம் - 30 கப்பல்கள் திரும்பிச் சென்றன!
[Thursday 2025-01-16 04:00]

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.


இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சு!
[Thursday 2025-01-16 04:00]

யாழ்பாணத்திலிருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையிலிருந்து இருந்து பொத்துவில் நோக்கியும் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் இரு பஸ்வண்டிகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதேரினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு பஸ்வண்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


ஒரு சீனா கொள்கையை ஆதரிப்பதாக ஜனாதிபதி அனுர வாக்குறுதி!
[Thursday 2025-01-16 04:00]

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.


மூன்றில் இரண்டு பங்கு குளங்கள் நிரம்பி வழிகின்றன!
[Thursday 2025-01-16 04:00]

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்வத்து ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் சிறியளவான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வனவளத் திணைக்களம் களவாடிய மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
[Thursday 2025-01-16 04:00]

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை (15) இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கனேடியத் தூதுவரைச் சந்தித்த சிறீதரன், குகதாசன்!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா