புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை!
[Sunday 2024-12-29 06:00]

இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


  

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சமாதான முன்னெடுப்புக்களே 2002 ஜனவரியில் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதற்கான பேச்சுவார்த்தைகளின்போது அவர் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, சமாதான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

2001 டிசம்பரில் நான் இரண்டாவது முறையாக பிரதமரானபோது இலங்கை கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. பிரதான துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீதான தாக்குதல்களால் கப்பல்களும் விமானங்களும் இலங்கைக்கு வருவதைத் தவிர்த்தன.

இது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுத்தது. இதனால் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

நான் பிரதமராக பதவியேற்றுக்கொண்டவுடன் உடனடியாக டில்லி சென்று நிலைமையை அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் விளக்கினேன். அவரும் அந்த சந்தர்ப்பத்தில் போர் நிறுத்தத்தின் அவசியத்தையும் ஒப்புக்கொண்டார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது.

சமாதான முன்னெடுப்புகளுக்குத் தலைமை தாங்கிய நட்பு நாடுகளின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து நான் வாஜ்பாயிடம் தெரிவித்திருந்தேன். அப்போது அவர், 'விக்கிரமசிங்க, இது இந்தியாவில் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை. என்னால் சோனியா காந்தியை விட ஒரு படி மேல் தான் சிந்திக்க முடியும். எனவே இது தொடர்பில் நீங்கள் அவருக்கும் விளக்கி அவரையும் சமாதானப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நானும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக சோனியா காந்தி இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒத்துழைத்தார்.

இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு வேறு வழிகள் இருந்தன. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி அவரது பிறந்தநாளன்று இடம்பெற்ற சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுக்கு அடித்தளமாக அமைத்தது. உண்மையில், வாஜ்பாய் இலங்கைக்கு உதவ முன்வந்தமையை அன்று உறுதி செய்தார்.

அதற்கமைய அன்றைய தினம் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அதன் ஆதரவையும் உறுதிப்படுத்தியது. இதன் பலனாக 2002 ஜனவரியில் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிந்தது.

2002 மற்றும் 2003 இந்திய - இலங்கை உறவுகளுக்கு முக்கியமான ஆண்டுகளாகும். விடுதலைப் புலிகளுடனான மோதலின் இறுதிக்கட்டத்தில் இருந்ததால் நாம் மறுமுனைகளிலும் குறிப்பாக பொருளாதாரம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்பதை ஒப்புக்கொண்டோம்.

இரு தரப்பிலும் அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒரே வடிவத்தைப் பயன்படுத்தின. அந்த வகையில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு சகல ஒத்துழைப்புக்களும் கிடைத்தன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் 2000ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தது. கடற்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளில் பிரபாகரன் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வாஜ்பாயும் நானும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம். எந்த ஒரு அரசு சார்பற்ற தரப்புக்கும் எமது கடல் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்பதே அந்த இணக்கப்பாடாகும். கடற்புலிகளின் செயற்பாடுகளை நடுநிலையாக்கி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக அது அமைந்தது.

2003ஆம் ஆண்டளவில், நிலைமை மூலோபாய ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு சாதகமாக மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தையில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். அதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த முக்கியமான கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு விடுதலைப் புலிகளின் பதிலை வலியுறுத்துவதன் மூலம் இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இந்தியா எமக்கு ஆதரவளித்தது.

நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட நாட்களில் நானும் வாஜ்பாயும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அப்பால் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.

அரசாங்கத்தில் விவசாயம், மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை செயல்படுத்த முடிந்தது.

போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், பொருளாதாரத்தின் மீது எங்கள் கவனம் திரும்பியது. இதிலும் நானும் வாஜ்பாயும் ஒரே பக்கமிருந்து செயற்பட்டோம். முதன்முறையாக, இரு அரசாங்கங்களும் தங்கள் பொருளாதாரங்களை மேலும் தாராளமயமாக்க உறுதிபூண்டன. சேவைத்துறையை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அதற்கு அப்பால் ஒரு பணிக்குழுவை அமைப்பதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டது.

ஒக்டோபர் 2003இல் நாம் எமது இருதரப்பு சந்திப்பை நடத்தியபோது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக மாறியது.

நாம் 2004ஆம் ஆண்டளவில் பேச்சுவார்த்தைகளை தொடங்கி அவற்றை நிறைவு செய்ய தீர்மானித்தோம். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் பதவியில் இருந்து வெளியேறினோம். இருந்தபோதிலும், இரு நாடுகளும் இலங்கையில் இந்திய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை அதிகரிப்பது மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் தினசரி சேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

நாங்கள் இருவரும் இந்திய இலங்கை உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றோம். முதலாவதாக, இந்திய எண்ணெயை இலங்கை சந்தைக்குள் நுழைய அனுமதிப்பது மற்றும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை சேமிப்பிற்காக பயன்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ ஒப்புக்கொண்டதன் மூலம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

இந்திய - இலங்கை இணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் நில அணுகலை வழங்குவதற்காக - இந்தியாவின் தென்கோடி முனைக்கும் இலங்கையின் உச்சமான பகுதிக்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த திட்டத்தின் இறுதி நோக்கம் இலங்கையை ஒரு பிராந்திய மற்றும் கேந்திர மையமாக மாற்றுவதாகும்.

2040இல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு டிரில்லியன் டொலர்களை எட்டியிருக்கும். இதுவே இலங்கை ஒரு தேசமாக இணைக்கப்படவேண்டிய அதிகார மையமாகும். இவையனைத்தும் இலங்கை ஏற்றுமதிக்கான பெரிய சந்தைகளை நிறுவுவதுடன், வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு புதிய பொருளாதாரத் துறைகளை உருவாக்கும்.

முன்னர் குறிப்பிட்டது போல், இலங்கை தன்னை ஒரு பிராந்திய தளவாட மையமாக நிலைநிறுத்திக் கொண்டால், பிராந்தியத்தின் இந்த அபிவிருத்திகளின் பயனாளியாக நாம் மாற முடியும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பிரித்தாளும் தந்திரங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சிதைக்க முடியாது!
[Wednesday 2025-01-15 17:00]

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


வலதுசாரிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி!
[Wednesday 2025-01-15 17:00]

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இரணைமடுக் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் வந்து கொண்டிருக்கிறமையால் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


நாகர்கோவிலில் கரையொதுங்கிய மிதக்கும் வீடு!
[Wednesday 2025-01-15 17:00]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து இந்தமிதவை வீடு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமய மரபு அம்சங்கள் இருக்கின்றன. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.


பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா! Top News
[Wednesday 2025-01-15 17:00]

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.


கஜேந்திரகுமார் துள்ளக்கூடாது!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


அர்ச்சுனாவை பதவி நீக்க கோரும் மனு- பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி!
[Wednesday 2025-01-15 17:00]

தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், அனுமதி கோரினார்.


பழைய பல்லவியை பாடாமல் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்!
[Wednesday 2025-01-15 17:00]

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா